Published:Updated:

ஃபேஸ்புக்ல புரொபசர்... புளூடூத்ல பிட்... டெக்கி டெரரிஸ்ட்ஸ்

ஃபேஸ்புக்ல புரொபசர்... புளூடூத்ல பிட்... டெக்கி டெரரிஸ்ட்ஸ்

ஃபேஸ்புக்ல புரொபசர்... புளூடூத்ல பிட்... டெக்கி டெரரிஸ்ட்ஸ்

ஃபேஸ்புக்ல புரொபசர்... புளூடூத்ல பிட்... டெக்கி டெரரிஸ்ட்ஸ்

Published:Updated:
##~##

ப்போ எல்லாம் காலேஜ் கேர்ள்ஸ், புக்ஸைவிட காலேஜுக்கு மறக்காம எடுத்துட்டுப் போறது, ஸ்மார்ட் போன், லேப்டாப்தான்! அப் படி, ''நாங்கதான் இந்த ஏரியா கேட்ஜெட் கேர்ள்ஸ்!''னு ஆர்ப்பாட்டம் பண்ற மைசூர், நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினீயரிங் காலேஜ் மாணவிகள்கிட்ட கொஞ்சம் 'சாட்’டி னோம்!

''தமிழ்நாட்டுல மொபைல் போன் வாங்கவே வீட்டுல போராடற நிலைமையிலதான் பல காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் இருக்காங்க போல. ஆனா, கேக்காமலேயே எல்லா அப்பா, அம்மாவும் ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்துடு வாங்க இங்க. ஏன்னா, எங்கள... எங்க வழி யில விட்டா... பரீட்சையில நல்ல ரிசல்ட் தானா கிடைக்கும்ங்கிறது அவங்களுக்கு நல்லாவே தெரியும். எங்களுக்கும் புத்தகங்கள்ல படிக்கறதைவிட, இ-மெட்டீரியல்ஸ்ல படிக்கிறதே சௌகரியமா இருக்கு''னு பூஜா சொல்ல,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இன்டர்நெட் பேக்கேஜ்தான் எங்க ஸ்மார்ட் போனுக்கு எல்லாம் ஆக்ஸிஜன். செமையா கலக்கலாம், கலாய்க்கலாம். உதாரணமா, கிளாஸ் மொக்கையா இருந்தா... உடனே புரொ பசரை போட்டோ எடுத்து எடிட்டிங்ல தொப்பி, பெரிய கண்ணாடி எல் லாம் போட்டு அவரை அழகுபடுத்தி, ஃபேஸ்புக்ல அப்டேட் பண்ணினா... அந்த வகுப்பு முடியற துக்குள்ள லைக்ஸ், கமென்ட்ஸ்னு அள்ளி டும்!''னு அதிர்ச்சி கொடுத்தாங்க ஆக்ருத்தி வர்மா.

''எங்க காலேஜ்ல வைஃபை இருக்கு. எல்லா லெக்சரர்ஸும் இ-மெட்டீரியல்ஸ் யூஸ் பண்ணச் சொல்லிப்பாங்க. அதனால, காலேஜுக்கு லேப்டாப் எடுத்துட்டுப் போவோம். ஆனா, அதை பெர்சனலா பயன்படுத்தினா மாட்டிப்போம்...''னு 'ரொம்ப நல்லவன்' கணக்கா சொன்னாங்க சாய்த்ரா.

ஃபேஸ்புக்ல புரொபசர்... புளூடூத்ல பிட்... டெக்கி டெரரிஸ்ட்ஸ்

''எப்போ நான் தனிமையா உணர்ந்தாலும், அப்போவெல்லாம் எனக்கு 'கம்பெனி’ கொடுக்க ஒருத்தன் இருக்கான். அவதான் 'டாகிங் டாம்’!''னு ஆரம்பிச்ச சேஜல் குல்கர்னி,

''பரீட்சைக்குப் படிக்கிறோமோ இல்லையோ, ஆண்ட்ராய்ட் மொபைல்ல இருக்கிற எல்லா கேம்ஸையும் யார் முதல்ல அன்லாக் பண்றாங்கங்கிறதுல நாங்க எல்லோரும் ரொம்பத் துடிப்பா இருப்போம். அதை முடிச்சுட்டா, ஃப்ரெண்ட்ஸ் வட்டத்துலயே நாமதான் பெரிய சாதனையாளர்னு தோணும். இட்ஸ் எ க்ரேட் ஃபீல்!''னு அனுபவிச்சுப் பேசினாங்க.

''டீன்ஸைப் பார்த்து வந்து விழற முதல் கேள்வி... 'அப்படி அந்த ஃபேஸ்புக்ல என்னதான் பண்ணுவீங்க..?' அப்படிங்கறதுதான். ஒரு வாரத்துக்கு நாலு தடவை யாவது புரொஃபைல் படத்தை மாத்துவோம். போட்டோல முகம் நல்லாயிருக்க, 'சாஃப்ட் டோன்’ங்கிற பயன்பாடு மூலம் எங்க சருமத்தை சுத்தமாக்கி, நிறம் ஏத்து வோம். வகுப்பறையில் எடுத்த போட்டோவை பீச்ல எடுத்த மாதிரி பேக் கிரவுண்ட் மாத்துவோம். இப்படி புதுசு புதுசா ஏதாச்சும் குறும்புகள் பண்ணிட்டே இருப்போம். அப்புறம்... வருஷத்துக்கு ஒரு மொபைல்ங்கற கொள்கையில் தீவிரமா இருக்குற காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்ல நானும் ஒருத்தி!''னு அண்டர்லைன் பண்ணிச் சொன்னாங்க அம்ருத்தா.

''இது எல்லாத்தையும்விட சூப்பரான ஒரு விஷயம் இருக்கு. அதுதான் ஹைடெக்கா பிட் அடிக்கறது!''னு அதிர வெச்ச தீப்தி,

''தேவையான பேஜ் எல்லாத்தையும் போட்டோ எடுத்து தேர்வின்போது பார்த்து எழுதலாம். ஒரு குறிப்பிட்ட விடை நம்மகிட்ட இல்லைனா, நோ பிராப்ளம். எக்ஸாம் ஹால் லயே புளூடூத் வழியா அந்த விடையை ஃப்ரெண்ட்ஸ் அனுப்பிடுவாங்க. ஷ்ஷ்ஷ்... இதை யார்கிட்டயும் சொல்லிடாதீங்க!''னு வேண்டுகோள் வெச்சாங்க தீப்தி!

முக்கிய குறிப்பு யுவர் ஹானர்... நாம பார்த்த டீன்ஸ் யார்கிட்டேயும் பேஸிக் மாடல் போன் கிடையாது. எல்லாம் அப்டேட்டட் ஆண்ட்ராய்ட் மாடல்தான். பேஸிக் மாடல் பத்தி கேட்டப்போ, 'அவனா நீ?!’ என்பது போல ஒரு லுக்தான் அவங்க நமக்கு கொடுத்த பதில்!

டெக்கி டெரரிஸ்ட்ஸ்!  

- இ.பிரியதரிசினி

படங்கள்: மு.லலித் குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism