Published:Updated:

ஹேர் ரிமூவிங்... வேக்ஸிங்கா... ஷேவிங்கா... எது பெஸ்ட்?

அவள் டீன்ஸ்

ஹேர் ரிமூவிங்... வேக்ஸிங்கா... ஷேவிங்கா... எது பெஸ்ட்?

அவள் டீன்ஸ்

Published:Updated:
##~##

''முதலாமாண்டு கல்லூரி மாணவியான நான், இதற்கு முன்பு வரை அக்குள் பகுதியில் உள்ள ரோமங்களை அகற்ற ஷேவிங் முறையையே பின்பற்றி வந்தேன். கல்லூரிக்கு வந்த பின், ஹேர் ரிமூவிங் க்ரீம், வாக்ஸிங் என்று தோழிகள் சொல்லும் முறைகளை முயற்சித்துப் பார்க்க விரும்புகிறேன். அதன் சாதக, பாதகங்களை விளக்க முடியுமா..?''

- ஒரு மாணவி, போரூர், சென்னை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரச்சனா மோகன்லால், ரச்சனா பியூட்டி ஸ்டூடியோ, மதுரை:

ஹேர் ரிமூவிங்... வேக்ஸிங்கா... ஷேவிங்கா... எது பெஸ்ட்?

''பொதுவாக ஷேவிங் என்பது, கொஞ்சம் முரட்டுத்தனமானது. அது ஆண்களுக்கே சரிப்படும். ஏனெனில், ஷேவிங் செய்வதால் அந்த ரோமக்கால்கள் இன்னும் வலுப்படவே செய்யும். இதனால் அந்தப் பகுதியில் உள்ள தோல் நாளடைவில் கறுப்பாக மாறும். சிலர் 'லேடீஸ் ரேஸர்’களை பயன்படுத்துவார்கள். அவர்கள் ஷேவ் செய்வதற்கு முன் சோப் தடவி, முடி வளர்ந்திருக்கும் பக்கமாகவே ஷேவ் செய்யலாம்.

அடுத்ததாக, ஹேர் ரிமூவிங் கிரீம்கள். கை, கால், அக்குள் ரோமங்களை நீக்க இன்று பரவலாகப் பெண்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். உபயோகிப்பதும் எளிது. நீங்களும் முயற்சிக்கலாம். ஆனால், முதல் முறை உபயோகிக்கும் முன், கையிலோ, காலிலோ ஒரு சிறு பகுதியில் அப்ளை செய்து 'அலர்ஜி டெஸ்ட்’ செய்துவிட்டு, ஏதும் பிரச்னை ஏற்படவில்லை எனில் பயன்படுத்தவும். எத்தனை நிமிடங்களுக்கு அதை அப்ளை செய்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதோ, அதற்கு மேல் வைத்திருக்காமல் சுத்தம் செய்துவிட வேண்டியது முக்கியம்.

ஹேர் ரிமூவிங்... வேக்ஸிங்கா... ஷேவிங்கா... எது பெஸ்ட்?

வேக்ஸிங் முறையில், முடியை வேரோடு எடுப்பதால், மீண்டும் வளர மாதங்கள் ஆகும். வேக்ஸிங்கில் கோல்ட், ஹாட் மற்றும் திக் வேக்ஸ் என்ற மூன்று முறைகள் உள்ளன. கோல்ட் வேக்ஸ் முறையில், கோல்ட் வேக்ஸ் எனப்படும் மெழுகை, ரோமங்கள் நீக்க வேண்டிய இடங்களில் அப்படியே தடவி, அதற்கென இருக்கும் பிரத்யேக ஸ்டிராப்புகள் கொண்டு, ரோமங்களை அது வளர்ந்திருக்கும் திசைக்கு எதிர்ப்பக்கமாக வேகமாக இழுக்கும்போது,

ஹேர் ரிமூவிங்... வேக்ஸிங்கா... ஷேவிங்கா... எது பெஸ்ட்?

வேரோடு வந்துவிடும். ஹாட் வேக்ஸ் முறையில், அடர்த்தியான மெழுகை சூடாக்கி, இளம்சூட்டில் அப்ளை செய்து, மேற்சொன்னதுபோல ரோமங்கள் நீக்கப்படும். திக் வேக்ஸ் முறையில், ரோமங்களை நீக்க வேண்டிய இடத்தில் வேக்ஸை தடவி, குறிப்பிட்ட நேரத்துக்குள் அப்படியே எதிர்ப்பக்கமாக எடுத்துவிட, காய்ந்திருக்கும் வேக்ஸ், ரோமங்களை இழுத்துக்கொண்டு வந்துவிடும்.

மற்ற முறைகளைப்போல் இன்றி, வேக்ஸிங் செய்யும்போது நிச்சயம் வலி இருக்கும். ஆனால், அது பொறுத்துக் கொள்ளக்கூடியதே. சிலருக்கு வேக்ஸிங் அலர்ஜியாகலாம் என்பதால், பார்லரில் பரிசோதித்தே செயல்படுத்துவார்கள்... கவலை வேண்டாம்.

மொத்தத்தில் ஷேவிங், க்ரீம், வேக்ஸிங் என எந்த முறையாக இருந்தாலும், உங்களுடைய மனம் மற்றும் உடல் நிலையைப் பொறுத்து நீங்களே முடிவு செய்வதுதான் நல்லது!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism