Published:Updated:

அழுகாச்சீஸ் காவியம்!

அவள் டீன்ஸ்

அழுகாச்சீஸ் காவியம்!

அவள் டீன்ஸ்

Published:Updated:
##~##

கேன்டீன் போனா... டேபிள் அதிரச் சிரிப்பு; லைப்ரரி போனா... கமுக்கமா சிரிப்பு; ஆடிட்டோரியம் போனா... அதகளச் சிரிப்பு; ஹெச்.ஓ.டி திட்டும்போது திருட்டுச் சிரிப்பு! இப்படி காலேஜ் கேர்ள்ஸும் 'ஹிஹி’யும்... சிம்புவும் சர்ச்சையும் மாதிரி... பிரிக்கவே முடியாதது. ஆனா, அவங்களோட ஃப்ளாஷ்பேக்ஸ்களை கொஞ்சம் ஓட்டிப் பார்த்தா, பென்சிலை காணோம், பேனால இங்க் தீர்ந்து போச்சு, பெரியப்பா திட்டிட்டாருனு 'பெட்டி கேஸ்’ விஷயத்துக்கெல்லாம் கூட பெரிய அழுகையைப் போட்டவங்களா இருப்பாங்க.

''இப்படி உங்களோட மறக்க முடியாத அழுகை எது..?''னு மதுரை, தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தாவரவியல் துறையைச் சேர்ந்த சில மாணவிகள்கிட்ட கேட்டோம். அழுது தீர்த்துட்டாங்கள்ல!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அழுகாச்சீஸ் காவியம்!

ஐஸ்வர்யா: எட்டாவது படிக்கும்போது பல் வலி வந்துச்சு. ஆரம்பத்துல ஏதோ எறும்பு கடிச்ச மாதிரி இருந்துச்சு. நேரமாக ஆக, பாம்பு கொத்துற மாதிரி (!) உயிர் போற வலி. வீட்டுல சொன்னா, 'ஒழுங்கா பல்லு வெளக்கு’னு அலட்டிக்காம சொல்ல... எனக்கோ கடுப்ஸ்னா கடுப்ஸ்! ஒரு கட்டத்துல பெயின் வாட்டி யெடுக்க, 'ஐயோ, இந்த பல்லு வலி தாங்காம நான் சாகப் போறேனே... அதுக்கு அப்புறம் நீங்க எல்லோரும் ஜாலியா இருக்கலாம்னு பார்த்தீங்களா.... பேயா வருவேன், பழி வாங்குவேன்!’னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினதுல, ஒருவழியா டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க. 'ஒண்ணும் பிரச்னை இல்ல. சாக்லேட், ஸ்வீட் சாப்பிட்டா, உடனே வாய் கொப்பளிக்கணும், ஒழுங்கா பல்லு விளக்கணும்!’னு டாக்டரும் சொல்ல, வீட்டுல எல் லாரும் முறைப்ஸோ முறைப்ஸ்!

பிரியதர்ஷினி: ஸ்கூல் படிக்கும் போது கிளாஸ்ல நாங்க ரணகள கேங்க். முழுப் பரீட்சை நேரத்துலகூட அசால்ட்டா ஆட்டம் போடுற அறிவாளிங்க. பத்தாவதுல, கிளாஸ் டெஸ்ட்டுக்கு முந்தின நாள் நாங்க போட்ட ஆட்டத்தை மொத்த வகுப்பும் வாய் பிளக்க வேடிக்கை பார்க்க, எங்களுக்கு கெத்தோ கெத்து! அடுத்த நாள் எப்பவும் போல ஏனோதானோனு டெஸ்ட் எழுதி பேப்பரை மடிச்சுக் கொடுத்துட்டோம். அடுத்த நாளே காத்திருந்தது க்ளை மாக்ஸ். பேப்பரை திருத்திக் கொடுத்த டீச்சர், ஒவ்வொருத் தரும் நூத்துக்கு எத்தனை மார்க் கம்மியா வாங்கியிருக் கோமோ அத்தனை அடி வாங் கணும்னு 'அந்நியன்’ லெவ லுக்கு பனிஷ்மென்ட் யோசிச் சுட்டு வந்திருந்தாங்க. நாங்க எல்லோரும் 80 ப்ளஸ்தான். அட, வாங்கின அடியைச் சொன்னேன்!

சுந்தரி: சின்ன வயசுல, பக்கத்து வீடு ரேகா அக்கா வளர்க்கற செடிகளை, 'இன்னிக்கு எந்தெந்த செடி, எத்தனை எத்தனை பூ பூத்திருக்கு’னு தினமும் ஓடிப்போய் பார்த்துட்டு வர்றதுதான் எனக்கு பொழுதுபோக்கு. ஒரு நாள் ரேகா அக்கா, 'நீயும் உங்க வீட்டுல செடி வளர்த்துப் பாரேன்’னு சொல்ல, சந்தோஷத்துல துள்ளிக் குதிச்சு ஒரு வொயிட் ரோஸ் செடி வாங்கிட்டு வந்தேன். அதுக்கு தண்ணி ஊத்தி, முட்டைக் கூடு, வெங்காயத் தோல் எல்லாம் போட்டு, அது மொட்டுவிட்டு, பூ பூத்து, அதை ஸ்கூலுக்கு வெச்சுட்டுப் போய், எல்லாரும் பார்த்து பொறாமைப்பட்டு... இதெல்லாம் செடி வாங்கிட்டு வந்த நாள் ராத்திரி, எனக்கு வந்த கனவு. மறுநாள் காலை முழிச்சவொடனே ஓடிப்போய் என் செடியைப் பார்த்தா, வாடிப் போய் வாழ்க்கையை முடிச்சுருந்தது. அழுகையினா அழுகை அப்படி ஒரு அழுகை எனக்கு! அப்புறம்தான் தெரிஞ்சது... ஓவர் சன்லைட் ரோஜா செடி உடம்புக்கு ஆகாதாமே..?!  

அழுகாச்சீஸ் காவியம்!

ரேகா: நான் டென்த் படிச்சப்போ, எங்க ஸ்கூல் விழாவுக்கு டி.எம்.எஸ். சார் சிறப்பு விருந்தினரா வந்தார். நானும் எங்க அக்காவும் டிவின்ஸ் மாதிரி இருப்போம், நல்லா ஆடு வோம்கிறதால, எங்களதான் 'வெல் கம் டான்ஸ்’ ஆடச் சொன்னாங்க மிஸ். 'காதலன்’ பிரபுதேவா மாதிரி கொலவெறியோட நாங்க பிராக்டீஸ் பண்ணிட்டு இருந்த நேரத்துல, என் கால்ல ஃபிராக்சர் ஆயிடுச்சு. கடைசியில அக்கா மட்டும் டான்ஸ் ஆட, நான் அதைப் பார்க்கக்கூட முடியாம கட்டோட வீட்டுல கிடக்க... நாலு நாளா சாப்பிடாம அழுதேன். அஞ்சாவது நாள், சாப்பிட்டுட்டும் அழுதேன்!

கவிதா: ஸ்கூல்ல நான் ஃபுட்பால் பிளேயர். ஆனா, அது என்ன ராசியோ தெரியல... எப்பவுமே எங்க டீம் ரெண்டாவது இடம்தான் வரும். அந்த வருஷம் எங்க மேம்கிட்ட, 'இந்த முறை நாம ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கியே தீருவோம்’னு டீம்ல எல்லோரும் சத்தியம் பண்ணினோம். அதே மாதிரி வாங்கவும் செஞ்சோம். இதுல சிறப்பு என்னனா, அந்த மேட்ச்சோட எங்க மேம் ரிட்டையர் ஆனதால, சந்தோஷத்துலயும் நெகிழ்ச்சியிலயும் அவங்க எங்களை கட்டிப்பிடிச்சு அழ, நாங்களும் அழ... சூப்பர் அழுகை அது!

எப்படி இருந்தது இந்த அழுகாச்சீஸ் காவியம்!

- ஹா.தௌஜிதா பானு

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism