Published:Updated:

"நல்ல டீ கடையா பார்த்து ஃப்ளைட்ட நிப்பாட்டுங்க..."

ஸ்டடி டூர் லகலக !

"நல்ல டீ கடையா பார்த்து ஃப்ளைட்ட நிப்பாட்டுங்க..."

ஸ்டடி டூர் லகலக !

Published:Updated:
"நல்ல டீ கடையா பார்த்து  ஃப்ளைட்ட நிப்பாட்டுங்க..."

''எங்களோட நாலு வருஷ இன்ஜினீயரிங் படிப்புல ரெண்டு நாள் ஸ்டடி டூர், ஆயிரம் கிலோ சந்தோஷ நினைவுகளத் தரும். ஆனா, எங்க ஸ்டடி டூர் இன்னும் ஸ்பெஷல்! ச்சும்மாவா... நாங்க பறந்துல்ல போனோம்?!''னு பெருமையா கூவினாங்க திருச்சி, எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரி கேர்ள்ஸ்!

''என்னது... பறந்தீங்களா?''னு நாம அதிர்ச்சியோட ஆர்வமாக,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அட, ஃப்ளைட்லதாங்க''னு சொன்னபடியே ஜாலி அனுபவத்தை கொட்டினாங்க பொண்ணுங்க!

''எங்க ஐ.டி. அண்ட் சி.எஸ்.சி. டிபார்ட்மென்ட்ல இருந்து ஸ்டடி டூர் போறதுக்கு ஐ.டி. நிறுவனங்கள் அதிகமா இருக்கற கேரளாவை செலக்ட் பண்ணினாங்க. வழக்கமா... 'இந்த டிரெயின்ல போயிட்டு, அந்த டிரெயின்ல ரிட்டர்ன்’னு எல்லாரும் பேசிக்கிட்டிருக்க... 'ஃப்ளைட்ல போனா என்ன..? ஸ்டூடன்ட்ஸுக்கு கட்டணச் சலுகை இருக்கே!’னு டிபார்ட்மென்ட்ல சூப்பரா யோசிக்க, 'மேம் மேம்... ப்ளீஸ் மேம்... ஃப்ளைட்லயே போகலாம் மேம்!’னு ராகம் போட ஆரம்பிச்சோம். கடைசியில, 'பசங்களுக்கு ஃப்ளைட்ல போன எக்ஸ்பீரியன்ஸும் கிடைக்கும்!’னு ஏற்பாடுகளைப் பண்ண, ஷ்ஷ்ஷ்... இண்டியன் ஏர்லைன்ஸ்ல பறந்தோம்ல!''னு படபடத்தாங்க சிந்துஜா.

##~##

''ஸ்டூடன்ட்ஸ், லெக்சரர்ஸ்னு மொத்தம் 193 பேர். மொத்த ஃப்ளைட்டுமே கிட்டத்தட்ட எங்களோடதா மாறிப்போச்சு. ஏறினவொடன கர்சீஃப்ல ஸீட் போடறது ஆரம்பிச்சு, இறங்குறப்ப ஏர்ஹோஸ்டஸ்கிட்ட மீதி சில்லறையைக் கேட்டதுனு ஒவ்வொரு நிமிஷமும் நாங்க கொடுத்த அலப்பறையில வானமே அதிர்ந்துச்சுல்ல! ஜன்னல் ஸீட்டுக்கு நாங்க போட்ட போட்டி இருக்கே... இடைத் தேர்தல் தோத்துச்சுல்ல!

ஒருவழியா எல்லாரும் அவங்கவங்க ஸீட்ல செட்டில் ஆக, 'மொபைலை ஸ்விட்ச் ஆஃப் பண் ணுங்க’னு சொல்லிட்டாங்க ஏர்ஹோஸ்டஸ். 'யக்கா... அது எங்க கவசகுண்டலம்க்கா. அதப் போயி..!’னு பசங்க ஏர்ஹோஸ்டஸை கலாய்க்க, 'இரு... உங்க அப்பாவுக்கு போன் போடறேன்!’னு ஹெச்.ஓ.டி. கறார் காட்ட, 'நம்ம ஹெச்.ஓ.டி-க்கு ஒரு 'ஓ’ போடுங்க!’னு அவங்களை கூல் பண்ணிட்டோம்''னு சலம்பினாங்க பத்மப்ரியா!

"நல்ல டீ கடையா பார்த்து  ஃப்ளைட்ட நிப்பாட்டுங்க..."

''ஃப்ளைட் டேக் ஆஃப் ஆன அந்த நிமிஷம்... வாவ்! வயித்துக்குள்ள ஜில்லுனு ஒரு ஃபீல். அப்ப பார்த்து ஒரு சிச்சுவேஷன் சாங்-ஐ போட்டா பாருங்க ஆர்த்தி, 'நான் போகிறேன் மேலே மேலே, பூலோகம் என் காலின் கீழே!’னு... மொத்த கேங்குக்கும் குஷி ஏறிடுச்சு. ஆனா, மொத்தத்தையும் அடுத்த நொடியிலயே புஸ்ஸாக்கிட்டா ஆர்த்தி. 'போனால் போகட்டும் போடா... இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா!’னு பாடினவள பார்த்து நாங்கள்லாம் நறநறக்க,

'அட... இதுவும் சிச்சுவேஷன் சாங்தான்பா!’னு சொல்லி எங்க வயித்துலயெல்லாம் புளியைக் கரைச்சுட்டா!''னு சிரிச்சாங்க அனிதா!

'' 'ஸ்ட்ராங்கா ஒரு காபி சாப்பிடணும். நல்ல டீ கடையா பார்த்து ஃப்ளைட்ட நிப்பாட்டுங்க...’னு கேப்டன் அங்கிளை தஸ்லிமா கலாய்க்க, 'கதவைத் திறந்து விடறோம். காபி சாப்பிட்டுட்டு வாங்க(!)...’னு அவரும் திரும்ப கலாய்ச்சது, செம்ம லகலக!

'ஏய்... வானத்துல நிலாவைக் காணோம்டி!’னு திடீர்னு அபிநயா பதற, 'எஸ்.ஜே.சூர்யா கூட்டிட்டுப் போயிட்டாருப்பா...’னு 'கடி’ச்சா ரூபியா.

'அதெல்லாம் இல்ல. நிலாவுல வடை சுட்ட பாட்டி தன் பேரப்பிள்ளைங்களப் பார்க்க பாப்பன்நாயக்கம்பட்டிக்கு போயிருக்காங்களாம். நிலாவும் பாட்டிக்கு தொணைக்கு போயிடுச்சாம். நீ இப்போ உன் ஸீட்டுக்குப் போ ஆத்தா!’னு ப்ரியா பிளேடு போட, நடு வானத்துலயும் இப்படி மொக்கைகளா போட்டு மேகங்களையும்கூட பயமுறுத்திட்டோம்!''னு பெருமைப்பட்டுகிட்டாங்க ப்ரிஸில்லா!

''ஸ்ஸ்ஸ்... ஃப்ளைட் திருவனந்தபுரம் ஏர்போர்ட்ல லேண்ட் ஆயிடுச்சுப்பா. 'ஒன்ஸ்மோர் அங்கிள்!’னு நாங்க எல்லாம் கேப்டன்கிட்ட பாவமா(!) கேட்க, 'ஹய்யோ... இந்த சேச்சிகள் ரொம்ப சுட்டி கேட்டியா!’னு சிரிச்சாங்க ஏர்ஹோஸ்டஸ்!

அப்படியே ரெண்டு நாள் டூரை முடிச்சுட்டு, வரும் போது டிரெயின்ல ரிட்டர்ன் ஆயிட்டோம்!''னு சுபம் போடப் பார்த்த பொண்ணுங்ககிட்ட, ''ஏதோ ஸ்டடி டூர்னு சொன்னீங்களே..? என்ன ஸ்டடி பண்ணீங்க?!'’னு முக்கியமான பத்து மார்க் கேள்வியைக் கேட்டோம்!

''கேரளாவுல இருக்கற பிரபல சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு எல்லாம் இண்டஸ்ட்ரியல் விசிட் போனோம். குறிப்பா, பேங்கிங் சாஃப்ட்வேர் உருவாக்கறதைப் பத்தியெல்லாம் விரிவா தெரிஞ்சுக்கிட்டோம். புக்ல படிக்கறதுக்கும், அதை பிராக்டிகலா பண்றதுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தோம். ரொம்பவே ஹெல்ப்ஃபுல்லா இருந்தது!''னு முடிச்சாங்க கேர்ள்ஸ்!

இருந்தா சரி!

படம்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism