Published:Updated:

'சிங்கிள் சிங்கங்கள்'!

'சிங்கிள் சிங்கங்கள்'!

'சிங்கிள் சிங்கங்கள்'!

'சிங்கிள் சிங்கங்கள்'!

Published:Updated:
'சிங்கிள் சிங்கங்கள்'!

இன்ஜினீயரிங் ஃபீல்டுல இருக்கற எல்லா டிபார்ட்மென்ட்லயும் பொண்ணுங்க கலக்கினாலும், நம்ம கௌதம்மேனனோட ஆஸ்தான 'மெக்கானிக்கல் டிபார்ட்மென்ட்' (கொஞ்சம் ரீவைண்டு ப்ளீஸ்... 'மின்னலே’, 'வாரணம் ஆயிரம்’, 'விண்ணைத் தாண்டி வருவாயா’னு எல்லா ஹீரோஸும் இந்த டிபார்ட்மென்ட்தாம்ப்பா!) ரிஜிஸ்டர்ல மட்டும் பொண்ணுங்க பேரு சிங்கிள் டிஜிட்டைத் தாண்டவே மாட்டேங்குது! அதுலயும் சில காலேஜுகள்ல பசங்களுக்கு மத்தியில 'சிங்கிள் சிங்கம்'னு வலம் வர்ற பொண்ணுங்களும் உண்டு!

கோயம்புத்தூர், ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினீயரிங் காலேஜ்ல செகண்ட் இயர் மெக்கானிக்கல் படிக்கற நிரஞ்சனா, செம தில் பார்ட்டிதான். பின்னே... ''இந்த கோர்ஸை நான் தேர்ந்தெடுத்ததுக்கு இன்ஸ்பிரேஷன், நேஷனல் ஜியாக்ரஃபிக் சேனல்!''னு திகில் கூட்டுறாங்களே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அதுல வர்ற 'சேஸிங் நேச்சர்’ நிகழ்ச்சி யில, மிருகங்களோட இயக்கத்தை அடிப்படையா வெச்சு இயந்திரங்களோட மெக்கானிஸத்தை டிசைன் பண்றதைக் காட்டுவாங்க. பார்க்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். சிம்பிள் உதாரணம்... கொசு ரத்தம் உறிஞ்சும் மெக்கானிஸத்தை வெச்சு கண்டுபிடிச்சதுதான் ஊசி போடற சிரிஞ்ச். அப்போவே எனக்கு இந்த டிபார்ட்மென்ட் மேல ஒரு கிரஷ் வந்துடுச்சு!''னு சொல்ற நிரஞ்சனா, வகுப்புல 68 பசங்களோட படிக்கற ஒரே பொண்ணு!

''ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்தது. குறிப்பா, அசைன்மென்ட் டாப்பிக், டெஸ்ட் டேட், தள்ளி வைக்கப் பட்ட செமஸ்டர் எக்ஸாம்னு எல்லாத் தகவலையும் பசங்களுக்குள்ள பாஸ் பண்ணிட்டு, என்னை 'அம்போ’னு விட்டுடுவாங்க. கிளாஸே கலகலனு இருந்தாலும், எனக்கு மட்டும் அதுல கலந்துக்கவும் முடியாம, விலகி இருக்கவும் முடியாம அவஸ்தையா இருக்கும். ஆனா, இப்போ எல்லாரும் எங்கிட்ட ஃப்ரெண்ட்லியா பழக ஆரம்பிச்சுட்டதால... படிப்பு, புராஜெக்ட்னு எல்லா விஷயத்துலயும் ஹெல்ப் பண்றாங்க. ஸோ, நோ பிராப்ளம்''னு தெம்பா சொன்னாங்க நிரஞ்சனா!

''கவுன்சிலிங் போனப்போ, இந்த டிபார்ட்மென்ட்டுக்கு நிறைய பொண்ணுங்க வர மாட்டாங்கங்கறது நான் எதிர்பார்த்ததுதான். ஆனா, கிளாஸ்ல நான் ஒரே பொண்ணா இருப்பேங்கறதை, எதிர்பார்க்கவே இல்ல!''னு சொல்ற விவேகி, மதுரையில இருக்கற வேலம்மாள் இன்ஜினீயரிங் காலேஜ்ல செகண்ட் இயர் மெக்கானிக்கல்.  

'சிங்கிள் சிங்கங்கள்'!

''முதல் நாள், 'என்ன இது... கேர்ள்ஸ் யாரையும் இன்னும் காணோமே’னு முகம் தெரியாத ஃப்ரெண்ட்ஸுக்காக பெஞ்ச்சுல இடமெல்லாம் போட்டு காத்துக்கிட்டே இருக்க, அட்டண்டென்ஸ் எடுத்த லெக்சரர்... 'இந்த டிபார்ட்மென்ட்ல நீ ஒரே பொண்ணுதான்... கங்கிராட்ஸ்!’னு வாழ்த்த... கலக்கிடுச்சு எனக்கு. ஆனா... இந்த ரெண்டு வருஷத்துல பழகிடுச்சு!''னு சிரிச்சவங்க,

''லேப்ல, சப்ஜெக்ட்ல ஏதாச்சும் சந்தேகம்னா... பசங்க ஹெல்ப் பண்ணுவாங்க. ஆனா, கிளாஸ் கொஞ்சம் கலகலப்பா போயிட்டு இருக்கற சந்தர்ப்பங்கள்ல சலசலனு சவுண்ட் கொடுத்து அவங்கள்லாம் என்ஜாய் பண்ணும்போது, 'நாம ஷேர் பண்ணிக்க பக்கத்துல ஒரு பொண்ணு இல்லையே...’னு தோணும். அடுத்து எம்.இ., மெக்கானிக்கல் படிக்கணுங்கறது என் ஃப்யூச்சர் பிளான். அநேகமா... அங்கயும் நான் ஒரே பொண்ணா படிக்கலாம். இருந்தாலும், இதையெல்லாம் கடந்தாதானே நாளைக்கு வரலாற்றுல நம்ம பேரும் வரும்?!''னு சிரிக்கறாங்க விவேகி!

விவேகியோட ஒன் அண்ட் ஒன்லி ஜூனியர்... கீதாஞ்சலி. இவங்களும் அதே காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் மெக்கானிக்கல் படிக்கற 'சிங்கிள்’ பார்ட்டி!

'சிங்கிள் சிங்கங்கள்'!
'சிங்கிள் சிங்கங்கள்'!

 '' 'உனக்கு 'கட்ஸ்’தான். மெக்கானிக்கல் டிபார்ட்மென்ட் எடுத்திருக்கியே’னு ஆரம்பத்துல ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ஆச்சர்யமா பார்த்தாங்க. ஆனா, கிளாஸ்ல இப்படி ஒரே பொண்ணா இருக்கறதுல எனக்கு எந்த சிரமமும் தெரியல. இந்த மாதிரியான எக்ஸ்போஷரை எல்லாம் எதிர்கொண்டாதான் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். 'இது ஆண்களுக்கானது’னு இனி எந்த ஃபீல்டுமே மிச்சம் இருக்கப் போறதில்லை. அதனால, காலம் காலமா தொடர்ந்திட்டிருக்கற தயங்கங் களை நீக்கி, நிறைய பொண்ணுங்க மெக்கா னிக்கல் டிபார்ட்மென்ட்டுக்கு வரணும்!''னு அழைப்பு வெச்சாங்க கீதாஞ்சலி!

''மரைன் இன்ஜினீயரிங் படிக்கணும்ங்கறதுதான் என் ஆசை. ஆனா, கவுன்சிலிங்ல... பொண்ணுங்களுக்கு ஸீட் கிடையாதுனு சொல்லிட்டாங்க. மெக்கானிக்கல் படிச்சு, மரைன் போலாம்னும் சொன்னாங்க. அதான் இதை டிக் பண்ணினேன்!''னு காரணம் சொல்ற ரூபினி, திருச்சியில இருக்கற அண்ணா பல்கலைக்கழகத்துல தேர்ட் இயர் மெக்கானிக்கல் ஸ்டூடன்ட்.

''இந்த 'சிங்கிள் என்ட்ரி’யால எங்க ஹாஸ்டல்ல நான் ரொம்ப பிரபலம். 'மெக்கானிக்கல் சிங்கத்துக்கு ஒரு 'ஓ’ போடுங்க’னு ஃப்ரெண்ட்ஸ் என்னைக் கொண்டாடுவாங்க. கிளாஸுலயும் செல்லப் பிள்ளை. மூணு அண்ணன்களுக்கு ஒரு செல்ல தங்கைனு தமிழ் சினிமாவுல ஒரு டிராக் இருக்குமே... அப்படி ஒரு அக்கறையும், அன்பும் கிளாஸ்ல எனக்கு இருக்கும்! சூப்பர்ல?!''னு சிரிக்கறாங்க ரூபினி!

அப்போ... 'ஆனந்தக் குயிலின் பாட்டு’!

- ம.பிருந்தா,
மோ.கிஷோர்குமார்
படங்கள்:
சொ.பாலசுப்பிரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism