கோலி சோடா ராஜி !

'வணக்கம்ம்ம்ம்ம்ம்...’னு ஆரம்பிச்சு 'வர்ட்டா, டாட்டா’னு முடிக்கறதுக்குள்ள... சினிமா, நாட்டுநடப்பு, தத்துவம், பித்துவம் எல்லாத்தையும் 'கோலி சோடா’ங்கற பேர்ல 'ரேடியோ மிர்ச்சி'யில மினி ஜுகல்பந்தி விருந்து வைக்கற 'ஆர்ஜே' ராஜி... 'தூங்கா நகர' மக்களோட டார்லிங்!

''ராஜேஸ்வரி பிறந்தது, வளர்ந்தது, நடந்தது, ஒடுனது எல்லாமே மதுரையிலதான் (நின்னதை சொல்லல?). ஸ்கூல் படிக்கும்போதே மிமிக்ரி, பாட்டு, டான்ஸ், ஆக்ட்டிங், கதைனு படிப்பைத் தவிர எல்லாத்துலயும் ஆர்வமா இருப்பேன். படிப்பை முடிச்சிட்டு, கோவையில் வேலை பார்த்துட்டிருந்தேன். அப்பத்தான் மதுரை, ரேடியோ மிர்ச்சியில 'ஆர்ஜே ஹன்ட்’ நடக்கப் போகுதுனு கேள்விப்பட்டேன். வேலையை ரிஸைன் பண்ணிட்டு கிளம்பிட்டேன்!

இங்க வந்தா... 1,300 பேர் போட்டிக்கு நிக்கறாங்க. ஃபைனலா வந்த அஞ்சு பேர் லிஸ்ட்ல என் பேர் இல்ல. ஷாக்கா£££யிட்டேன் (அச்சச்சோ... அப்புறம்?). 'பார்த்துட்டு இருந்த வேலையும் போனதுதான் மிச்சம்’னு எல்லாரும் கேலி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அப்போதான்... அது நடந்தது (பில்ட் அப்)!

மிர்ச்சியில இருந்து கால் பண்ணினாங்க. அது வெறும் கால் இல்ல, 'நீங்க ஆர்ஜே-வா செலெக்ட் ஆயிட்டீங்க... கங்கிராட்ஸ்!’னு எனக்கு சொன்ன தெய்வீக கால் (ஏம்ப்பா அசிஸ்டென்ட்ஸ்... நோட் பண்ணுங்கப்பா). ஆறாவது ஆளா இருந்த என்னோட பெர்ஃபார்மன்ஸும் பிடிச்சுப் போனதால, 'போனா போகட்டும்’னு என்னையும் ஆட்டத்துக்கு சேர்த்துக்கிட்டாங்க (ஆனா, உங்க நேர்மை எங்களுக்குப் பிடிச்சிருக்கு). அப்புறமென்ன... இந்த ஒண்ணரை வருஷமா ஒரே அதகளம்தான்.

நாலு இடத்துல... 'நீங்க ரேடியோ மிர்ச்சி ராஜிதானே!’னு நம்மையும் ஒரு ஆளா மதிச்சு நிறைய பேர் ஆர்வமா கேட்டு... நெஞ்சுக்குள்ள பட்டர்ஃப்ளைஸ் பறக்க விடுறாங்க. ஒரு தடவை, ஆறு வயசுப் பையனை எங்க ஆபீஸுக்கு கூட்டிட்டு வந்தார் அவனோட அப்பா. 'ராஜியைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டான்... அதான்!’னு சொன்னார். அந்த வாண்டு எங்கூட செம்ம ஃப்ரெண்ட் ஆயிடுச்சு. போகும்போது, 'ராஜி ஆன்ட்டி ஸோ ஸ்வீட்!’னு சொன்னது சந்தோஷமா இருந்துச்சு. ஆனா, 'ஆன்ட்டி’னு சொன்னதுதான் கொஞ்சம் ஃபீலிங்ஸாப் போச்சு. ஐம் ஜஸ்ட் 21 பா..! எங்க ஆபீஸ் ஜூனியர் மோஸ்ட் செல்லம்!''

- உ.அருண்குமார்
படங்கள்: ஜெ.தான்யராஜு