Published:Updated:

அறுபது வயசு... ஹை ஹீல்ஸ§!

அறுபது வயசு... ஹை ஹீல்ஸ§!

அறுபது வயசு... ஹை ஹீல்ஸ§!

அறுபது வயசு... ஹை ஹீல்ஸ§!

Published:Updated:

'அவள் - விவெல்’ இணைந்து நடத்தும் 'ஜாலி டே’ திருவிழா, வாசகிகளின் உற்சாக கொண்டாட்டங்களுடன் இந்த முறை அரங்கேறியது... வேலூரில்!

27.11.10 சனிக்கிழமையன்று தோட்டப்பாளையம், நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முன் தேர்வுப் போட்டிகளில் ஆர்வத்தோடு பங்கேற்று திறமை காட்டிய வாசகிகள், அடுத்த நாள் ஆர்ப்பாட்டமாக 'ஜாலி டே’வில் கலக்கி எடுத்தனர் அப்படியரு ஃபெர்பார்மன்ஸ் கொடுத்து!

அறுபது வயசு... ஹை ஹீல்ஸ§!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

28-ம் தேதி காலை... வாசகிகளோடு சேர்ந்து தொகுப்பாளினி அபீக்ஷா பட் குத்துவிளக்கேற்ற, தமிழ்த்தாய் வாழ்த்துடன் குதூகலமாக ஆரம்பமானது ஜாலி டே நிகழ்ச்சி.

வழக்காடு மன்றத்தில், 'பெண்ணுக்குக் குழந்தை பிறந்த பின் அழகு, ஆரோக்கிய பராமரிப்பு அவசியமா... அநாவசியமா?’ என்ற தலைப்பில் இருதரப்பு போட்டியாளர்களும் பேசிய பேச்சுக்கு கைதட்டல்கள் அரங்கத்தைப் பிளந்தன.

தொடர்ந்து... நகைச்சுவை நேரம், சவாலே சமாளி, வினாடி வினா, அந்தாக்ஷரி என்று எல்லாப் போட்டிகளிலும் அசரடித்தனர் தோழிகள். 'பாரதியார் பாடல்கள்’ போட்டியில் கலந்துகொண்ட பிரேமலதா, '' 'ஜாலி டே’வுக்காக பெங்களூருவுல இருந்து வந்திருக்கேன்!'' என்று பெருமூச்சோடு சொன்னது, புதுவித ராகத்தில் அமைந்துபோக.... வெகுவாக ரசித்துக் களித்தனர் தோழிகள்.

அறுபது வயசு... ஹை ஹீல்ஸ§!

பார்வையாளர்கள் கூட்டத்திலிருந்து மேடைக்கு வந்த ஜி.வி சசிகலா, ''நான் ஒரு பாட்டுப் பாடலாமா..?'’ என்று கேட்க, மைக் அவரிடம் சென்றது. ''என் 'அவளே’ அடி என் 'அவளே’...’' என்று முழுப்பாடலையும் 'அவள் விகடன்' பற்றி அவருடைய வார்த்தைகளில் இயற்றிப் பாடி சர்ப்ரைஸ் தந்தார் சசிகலா!

அடுத்து... பெங்களூரு பிரேமலதாவுக்கு டஃப் பைட் கொடுக்கும் விதமாக மேடை ஏறிய ஐரின், ''ஜாலி டே’வுக்காக நான் நார்வே நாட்டுல இருந்து வந்திருக்கேன்!'’ என்று சொல்ல... கூட்டம் மொத்தமும் பட்டையைக் கிளப்பியது கைதட்டலில்.

'ஜோடி அறிதல்' போட்டியில் குதூகலத்துடன் கலந்து கொண்டு, சந்தோஷத்துடன் அசத்தியவர், ''சர்ப்பரைஸ் போட்டியில் நான் நடுவராக இருக்கிறேன்'' என ஆர்வமாக வந்து பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்தார் நார்வே நாட்டிலிருந்து வேலூருக்கு படிக்க வந்திருக்கும் இந்த ஐரின்.

''எங்களுக்கும் மைக்'' என்று சான்ஸ் கேட்டு மேடையேறிய தோழிகள் துர்காராணி- இளவேணி, ஒட்டுமொத்த கூட்டத்தையும் உருக வைத்துவிட்டனர்.

''ரெண்டுபேருமே பாண்டிச்சேரியில ஒரே ஸ்கூல்லதான் படிச்சோம். க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் ஒவ்வொரு திசையில போயிட்டதால தொடர்பில்லாமப் போயிடுச்சு. இருபது வருஷம் கழிச்சு, இன்னிக்கு இந்த வேலூர்ல எதேச்சையா நாங்க ரெண்டு பேரும் சந்திச்சிக்கிட்டோம். எங்க சந்தோஷத்தை வார்த்தைகளால சொல்ல முடியல. எங்க நட்புக்கு மறுபடியும் உயிர் கொடுத்திருக்கற 'அவள் விகட’னுக்கு நன்றி!'' என்று இருவரும் ஆனந்தக் கண்ணீர்விட, அரங்கமே உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தது.

உணவு இடைவேளை... அறுசுவை உணவு ஒரு பக்கம் நடந்து கொண்டே இருக்க... இன்னொரு பக்கம் குத்துப்பாட்டு, சர்ப்பரைஸ் போட்டிகள் என்று நிகழ்ச்சி தொடர்ந்தது. அதிலும் தொகுப்பாளர் அபீக்ஷா அன்று அறிவித்த திடீர் போட்டி, படுசுவாரஸ்யம்! ''அறுபது வயசுக்கு மேல உள்ள ஹை ஹீல்ஸ் அணிந்த பெண்கள் எல்லாம் மேடைக்கு வாங்க...'' என்று அபீக்ஷா அழைக்க, தங்கள் மருமகள்களின் ஹீல்ஸைகளை அவசரமாக மாற்றி வாங்கிப் போட்டுக்கொண்டு மேடையேறிய மாமியார்கள் சிலர், பரிசையும் வாசகிகளின் சிரிப்பையும் பெற்றுச் சென்றனர்.

அறுபது வயசு... ஹை ஹீல்ஸ§!

விவெல் நிறுவன கூந்தல் பராமரிப்பு நிபுணர் அபர்ணா, வாசகிகளின் கூந்தல் சந்தேகங்களுக்கு அழகாக பதில் கூறியது அனைவருக்கும் எக்ஸ்ட்ரா சந்தோஷம். முடிவில் வெற்றியாளர்களுக்கு மொத்தம் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன.

இறுதியாக, பம்பர் பரிசுக்குரிய அதிர்ஷ்டசாலிக்கான கூப்பனை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க, '1692 - ஜி.சசிகலா’ என்று அறிவித்ததும், மகிழ்ச்சியில் திளைத்து ஓடி வந்து பரிசுகளை அள்ளிக்கொண்டார் சசிகலா.

நிகழ்ச்சி நிறைவடைய, அனைவருக்கும் 'விவெல்’ நிறுவனத்தின் 'கிஃப்ட் ஹேம்பர்’கள் வழங்கப்பட... ''வீடு, வேலைனு எல்லாத்தையும் மறக்கடிச்ச இந்த டே... நிஜமாவே செம்ம ஜாலி டே!'' என்று நன்றியும் அன்பும் நிரம்பிய வார்த்தைகளை நமக்கு பதில் பரிசாகத் தந்து விடைபெற்றனர் தோழிகள்!

படங்கள்: பா.கந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism