Published:Updated:

'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!

'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!

'சென்னையோட வரம்... பீச். ஆனா, நாம அக்கறையில்லாம அங்க கொட்டற குப்பைகளால... செய்யற அசுத்தங்களால... அதையே சாபமா மாத்திடக் கூடாது இல்லையா..?''

- வார்த்தைகளில் மெல்லிய கோபம் தேக்கி ஆரம்பித்தார்கள் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் அர்ச்சனா மற்றும் பூஜாகுமார்.

'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

'கடற்கரையை மீட்டெடுப்போம்...’ என்ற சமூக அக்கறையின் கீழ் சென்னையின் பல கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளும் ஒருங்கிணைந்து, கடற்கரைகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளார்கள்.

''சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானாந்த ஜெயராம் சார்தான், கடற்கரை குப்பைமேடாகற அவலத்தை ஒருமுறை எங்களுக்கு புரிய வெச்சார். 'ஏதாச்சும் செய்யணுமே சார்’னு நானும், என் தோழி அர்ச்சனாவும் அவர்கிட்ட ஆதங்கத்தோட சொல்ல, 'கல்லூரி மாணவர்களே சேர்ந்து அதைச் சுத்தப்படுத்தற வேலைகள்ல ஏன் இறங்கக் கூடாது?!’னு வழியும் காட்டினார். எம்.ஓ.பி. வைஷ்ணவா காலேஜ்ல படிக்கற நானும், எத்திராஜ் காலேஜுல படிக்கற அர்ச்சனாவும் எங்களுக்குத் தெரிஞ்ச, மத்த கல்லூரிகள்ல படிக்கற ஃப்ரெண்ட்ஸ்களை ஒருங்கிணைச்சோம். ரெண்டு வருஷத்துக்கு முன்னால நாங்க அஞ்சு பேரும் சேர்ந்து பீச்சை சுத்தப்படுத்த மணல்ல இறங்கினோம்'' என்ற பூஜாகுமாரைத் தொடர்ந்தார் அர்ச்சனா.

''களத்துல இறங்கி குப்பைகளை அகற்றினப்போதான், இந்தப் பிரச்னைக்கான முக்கிய காரணங்கள் எங்களுக்கு புரிஞ்சுச்சு. தினமும் ஆயிரம் பேர் கூடற பீச்சுல, போதுமான அளவு குப்பைத் தொட்டிகள் இல்ல. கூடவே, நம்ம மக்களுக்கு பொறுப்புணர்வும் இல்லாததால கடற்கரை மணல்  முழுக்க பிளாஸ்டிக் பை குப்பை. இன்னொரு முக்கிய பிரச்னை, தேவையான இடைவெளியில கழிப்பறைகள் வசதி இல்லாதது. இதனாலதான் கண்ட இடத்துலயும் ஆண்கள் அசிங்கம் பண்றாங்க. இன்னொரு பக்கம், கழிப்பறைகள் இல்லாம பெண்கள் படற அவஸ்தை பரிதாபம். இந்தப் பிரச்னைகள் எல்லாம்

'வரம்' ஒன்று 'சாபம்' ஆகிறதே...!

பத்தாதுனு, தொடர் ஓட்டம்... அது, இதுனு போட்டிகள் நடத்தி மக்கள திரட்டறாங்க. ஆனா, நிகழ்ச்சி முடிஞ்சதும் அதன் அமைப்பாளர்கள் கழிவுகளைச் சுத்தப்படுத்தாம அப்படியே விட்டுட்டுப் போயிடறாங்க...'' என்று பட்டியலிட்டார் அர்ச்சனா.

''இப்போ எழுநூறு கல்லூரி மாணவர்கள் எங்ககூட சேர்ந்து இந்த க்ளீனிங் வேலைகள்ல இறங்கியிருக்காங்க. இந்த ரெண்டு வருஷத்துல பத்து தடவைகளுக்கும் மேல கடற்கரையை சுத்தப்படுத்தியிருக்கோம். இனி மாசத்துக்கு இரண்டு தடவை சுத்தப்படுத்தற திட்டம் வகுத்திருக்கோம். தவிர, கடற்கரையைத் தூய்மையா வெச்சுக்கறதோட அவசியம் பத்தின விழிப்பு உணர்வுக்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள், குப்பத்து மக்கள்கிட்ட எல்லாம் தொடர்ந்து பேசறோம்...'' என்ற ஸ்ரீகிருஷ்ணா சேகரின் குரலில் அக்கறை.

''மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, 'சிறந்த சமூக செய்தியைப் பரப்புவதற்கான விருதை' எங்களுக்கு கொடுத்தாங்க. போத்தீஸ் ஜவுளி நிறுவன உரிமையாளர் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். இந்த அங்கீகாரங்கள் எல்லாம், எங்களுக்கு இன்னும் பலம் சேர்க்குது. விருப்பமும், சமூகப் பொறுப்பும் இருக்கற கல்லூரி மாணவர்கள் இன்னும் அதிகமா எங்ககூட கை கோக்கணும்... நம் கடற்கரையை மீட்டெடுக்க!''

- கௌஷிக் சுப்பிரமணியனின் குரலில் நம்பிக்கை நிரம்ப இருந்தது.

அடுத்தத் தடவை நீங்கள் பீச்சுக்குப் போகும்போது, இந்த இளைய தலைமுறை உங்கள் எண்ண அலைகளில் வந்துபோனால்... அதுவே இவர்களுக்குக் கிடைத்த வெற்றி!

                         - க.நாகப்பன்
படங்கள்: து.மாரியப்பன்