பிரீமியம் ஸ்டோரி
##~##

ல்லூரியில் 'மாம்ஸ்’ அடியெடுத்து வைக்கும்போதே 'ஆர் யூ இன் ரிலேஷன்ஷிப்?’ என்று கேட்கப்படும் கேள்விகள் ஒருபுறமிருக்க, பைக்கில் ஒன்றாகப் போகும் காதலர்களை எல்லாம் பார்த்து 'காலேஜ் படிக்கிறப்ப பாய்ஃப்ரெண்ட் அவசியம் இருக்கணும் போல’ என்ற நினைப்பு வலுக்கட்டாயமாக வரவழைக்கப்படுகிறது. இத்தனை தலையாய(?!) பிரச்னைகளுக்கு இடையிலும், 'சாமி... ஆள விடுங்க. பாய்ஃப்ரெண்டே வேண்டாம்’ என்கிற மாம்ஸ்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 'ஆஹா...’ என்றபடியே அவர்களிடம் பேசினோம்.

பிள்ளையார் சுழி போட்டது மஹிமா நம்பியார் 'அப்பா - அம்மா கூட அத்தனை கட்டுப்பாடும், யெல்லோ லைனும் போட மாட்டாங்க. ஆனா இந்த பாய்ஃப்ரெண்ட், 'நீ இப்படி டிரெஸ் பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கலை, காலேஜ் முடிச்சு ஏன் இவ்ளோ லேட்டா வர்ற?’ - இப்படி ஆரம்பிச்சு, 'யார் கிட்ட இவ்ளோ நேரம் பேசிட்டு இருக்க? என்னை செகண்ட் கால்ல வைக்கிற அளவுக்கு நீ பேசுற ஆள் உனக்கு முக்கியமா?’ என்று கேள்விகளால் மனுஷனை சாகடிப்பாங்க. நான் என்கிட்ட என்னென்ன விஷயத்தை எல்லாம் ரசிச்சேனோ, அதையெல்லாம் அந்த பையனுக்காக சிரிச்சுக்கிட்டே, சகிச்சுக்கிட்டே மாத்தியாகணும்'' என்று படபடவென பேசிக்கொண்டே போக,

''யேய்... கூல் டார்லிங்'' என்றபடியே தொடர்ந்தார் வைஷாலி... 'பாய் ஃப்ரெண்ட்ஸ் அகராதியில நம்பிக்கைனா, அவங்க நமக்கு பாய்ஃப்ரெண்டா ஆன உடனே நம்ம பேங்க் அக்கவுன்ட்ல ஆரம்பிச்சு ஃபேஸ்புக் வரைக்கும் எல்லா பாஸ்வேர்டையும் சொல்லிடணும். இல்ல, அவங்களோட பேரை 'ஸ்வீட்டி, ஸ்வீட் ஹார்ட்’னு அத்தனை கழுதைக்கும் பாஸ்வேர்டா வைக்கணும். இல்லாட்டி தொலைஞ்சோம். இதுக்கும் நீங்க மசியலைனா உங்க அக்கவுன்ட் அத்தனையும் நொடியில ஹேக் பண்ணி, 'இப்பவாவது புரியுதா, நான் உன்மேல எவ்ளோ அன்பு வெச்சிருக்கேன்’னு நம்மகிட்டேயே மொக்க டயலாக்கை ஃபீலிங்க்ஸா பேசுவாங்க'' என்று டாப் கியரில் எகிறியது வைஷாலியின் பாயின்ட்ஸ்.

எனக்கொரு boy friend வேணாம்டா!

''சரி பரவாயில்லை... விடுங்கப்பா. பாய்ஃப்ரெண்ட் இல்லாததுனால உள்ள பாஸிட்டிவ் பாயின்ட்ஸ் பத்தி சொல்லலாமே’ என்று கண்ணடித்தபடியே பேசினார் சிரி. ''ஒரு பெரிய கேங்கோட ஏதாவது ஒரு மால்ல ஆஜராகிடுவோம். கால் வலிக்க மூணு மணி நேரம் 'விண்டோ ஷாப்பிங்’ செஞ்சுட்டு, போனதுக்கு சின்னதா கர்ச்சீஃப் வாங்கிட்டு வருவோம். அப்புறம் ரூமுக்கு வந்து யார் முதல்ல பெட்ல விழுறாங்களோ அவ மேலேயே அத்தனை பேரும் விழுந்து தூக்கத்தை ஆரம்பிப்போம். மத்தியானம் எழுந்திரிச்சு 'ப்ரன்ச்’ முடிச்சா ஒரு சந்தோஷம் வரும் பாருங்க... சான்ஸ்லெஸ்!'' என்று காலரை தூக்கிவிட்டு முடித்தார் சிரி.

'பொண்ணுங்க கேங்கா சேர்ந்துட்டோம்னா, பசங்களுக்கு மார்க் போட ஆரம்பிச்சிருவோம். அதே போல யாரை வேணும்னா சைட் அடிக்கலாம், 'நீ அழகா இருக்க’னு எந்த பையனாவது சொன்னா, அழகான சிரிப்போட அதை காம்ப்ளிமென்டா எடுத்துட்டு போய்ட்டே இருக்கலாம். பாய்ஃப்ரெண்டோட போறப்ப உங்களை எவனும் பார்க்க மாட்டான். அப்புறம் எப்படி எங்களுக்கு நாங்க அழகா... இல்லியானு தெரியும்?'' (உங்க நேர்மை எங்களுக்கு பிடிச்சிருக்கு!) என்று சீக்ரெட்டை போட்டு உடைத்தார் ப்ரியா திரிவேதி.

எனக்கொரு boy friend வேணாம்டா!

''ஹேய்.. என்னை பேச விடு மாம்ஸ்'' என்று ஆஜரானார் பஞ்சமி. ''எங்க போகணும்னாலும் துப்பட்டாவால முகத்தை மூட வேணாம். எங்க லைஃப் மேல எங்களுக்கு மட்டுமே உரிமை, அக்கறை, அன்பு எல்லாம் இருக்குது. ஒருநாள் முழுக்க நடந்ததை யார்கிட்டேயும் ஒப்பிக்க வேண்டியம் அவசியம் இல்லவே இல்ல. மொத்தத்துல மொபைல் டாப்-அப் பண்ண அம்மா, அப்பா கிட்ட பொய் சொல்லி காசு வாங்க வேண்டியது இல்லை'' என்று கண்ணடித்து சிரிக்கிறார் பஞ்சமி.

''யெஸ்... பஞ்சமி சொல்றது கரெக்ட்! ஒவ்வொரு நாளும் கண்ணு முழிச்சு கருவளையம் வர்றதுக்கான வாய்ப்பு எங்களுக்கு இல்லையே'' என்று ஸ்ரீநிதி சொல்ல,

''கரெக்டா சொன்ன மாமா!'' என்று சியர்ஸ் சொன்னார் திரிஷா.

பின்குறிப்பு: இதெல்லாம் அவங்களோட சொந்த அனுபவம் இல்லையாம். ஃப்ரெண்ட்ஸோடதாம் (ப்ப்ப்பா... முடியலடா சாமி!)

இ.பிரியதரிசினி

படங்கள்: மு.லலித் குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு