பிரீமியம் ஸ்டோரி
##~##

ன்னல் ஓர ஸீட், மனதை வருடும் காற்று... என்று பேருந்து பயணம் ஆல்வேஸ் 'எங்கேயும் எப்போதும்’ ஸ்பெஷல்தான்! அதிலும் 'லேடீஸ் ஸ்பெஷல் பஸ்' என்றால், கொண்டாட்டத்துக்கு அளவே இல்லை. 'தினமும் பஸ்ஸில் காலேஜ் பெண்கள் ஃபுட்போர்ட் அடிக்கிறார்கள்' என்று கூடுதல் தகவலும் கிடைக்க... சும்மாவா இருக்க முடியும். இனி ஓவர் டு மதுரை, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட்!

'மகளிர் பேருந்து' என்கிற பெயர்ப்பலகையோடு ஆளே இல்லாமல் நின்று கொண்டிருந்தது அந்த அரசு பேருந்து. நாம் யோசிப்பதற்குள் ''யேய், வாடீ... இன்னிக்காவது ஜன்னலோர ஸீட் பிடிக் கலாம். அசைன்மென்ட் எழுதணும்'' என்றபடியே 'திமுதிமு’வென ஏற ஆரம்பித்தது டீன்ஸ் கூட்டம். கொஞ்ச நேரத்திலேயே... ஒட்டுமொத்த பஸ்ஸும் 'சேர்மத்தாய் வாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி’ பெண்களால் நிரம்பி வழிந்தது!

''நீங்கள்லாம் ரொம்ப நல்லவய்ங்கனு எனக்கு தெரியும். ஆனாலும் கடமைனு ஒண்ணு இருக்குல்ல... எல்லாரும் பஸ் பாஸ் காண்பிங்கம்மா'’ என்று 'கடமை கண்ணாயிர'மாக மாறினார் கண்டக்டர். அதேநேரம்... 'போலாம் ரைட்’ என்று கூட்டத்துக்கு நடுவிலிருந்து விசில் பறக்க... ''ஆரம்பிச்சுட்டாய்ங்கப்பா கலவரத்த! இனி, டிரைவர் பக்கத்துல போய் நின்னுட வேண்டியதுதான்’' என்றபடியே இடத்தை காலி செய்தார் கண்டக்டர்.

‘வருத்தப்படாத வாலிபி’கள் சங்கம்!

''காலேஜ் ஆரம்பிச்ச நாள்ல இருந்து இந்த பஸ்லதான் வர்றேன். வீட்ல பிரச்னை, காலேஜ்ல மேம் திட்டினாங்கனு மனசுக்குள்ள என்ன நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சரி, பஸ்ஸுக்குள்ள ஏறிட்டா... ஃபீனிக்ஸ் பறவைதான்'' என்று ஆரம்பித்திலேயே சிக்ஸர் அடித்தார் கிரிஜா.

புகைப்படக்காரர், கேமராவை கையில் எடுத்ததும்... ஸீட்டில் ஒழுங்காக உட்கார்ந்திருந்த கேர்ள்ஸ், சட்டென்று 'ஃபுட்போர்டு’க்கு தாவினார்கள். ''இப்பதான் பாரதி சொன்ன சுதந்திரத்தை (?!) நாங்க ஃபீல் பண்றோம். பசங்கள்லாம் ஃபுட்போர்ட் அடிக்கறதை பாக்குறப்ப எல்லாம்... ஆசையும், ஆதங்கமும் பொங்கும். ஆனா... அடக்கம், ஒடுக்கம்னு கை, காலை கட்டி போட்டு வெச்சுருக்கறதால... அடங்கியேதான் கிடப்போம். இப்ப கேமராவுக்காகத்தான்...'' என்று சங்கீதா சொல்ல...

''ஆமாண்டியம்மா... அதான் இப்ப (ª)கரகம் எடுத்து ஆடிட்டுகிட்டு இருக்கியா?'’ என்று சந்தடி சாக்கில் சரண்யா குரல் கொடுக்க ''யேய்.. பப்ளிக், பப்ளிக்'' என்று வெட்கத்தோடு முகம் மறைத்தார் சங்கீதா.

''காலை நேர அவசரத்துல... சாப்பிடாம, அசைன் மென்ட் எழுதாம வந்துருவோம். இந்த பஸ், காலேஜுக்கு போக ஒரு மணி நேரம் ஆகுங்கறதால இதுலயே சாப்டுட்டு, தெம்பா அசைன்மென்ட் எழுதி, மேம்கிட்ட குட் வாங்கிடுவோம்'' என்று ஊர்மிளா பெருமை பீற்ற,

''வாடி என் டொமாட்டோ... (என்னது பொம்பளைங்கள்லாம் கூட இப்படி பேச ஆரம்பிச்சுட்டாங்க?) இவ டெய்லி பஸ்ல இடம் கிடைக்காம நின்னுட்டு வருவா. எப்படியாவது உட்கார்ந்தே தீரணும்ங்கறதுக்காக, 'அசைன்மென்ட் எழுதணும்க்கா'னு சீனியர்ஸ்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி ஸீட் வாங்கிட்டு... இப்ப ஸீன் போடுறா'' என்று சீக்ரெட்டை உடைத்தார் வளர்மதி.

ஜன்னல் ஓரமாக யாரையோ பார்த்து கொண்டிருந்த மஞ்சுளாவைப் பார்த்த கும்பல், ''பாக்காத பாக்காத... ஐயையோ பாக்காத'’ என்று சத்த மாக பாட, ''ஏண்டி நிம்மதியா சைட் (?!) அடிக்கக்கூட விடமாட்டீங்களா? உங்க ரவுசு தாங்கல'’ என்று அடுத்த ஸீட்டுக்கு ஜம்ப் ஆகி ஃப்ரீயாக சைட் அடிக்க ஆரம்பித்தார் கிரிஜா!

‘வருத்தப்படாத வாலிபி’கள் சங்கம்!

'’யேய்... நம்ம பஸ்ல ரொம்ப காலமா ரெண்டு பேரு டிக்கெட் எடுக்காமலே வர்றாங்களே, அவங்க அநியாயத்தை தட்டிக் கேட்க ஒரு 'அந்நியன்’ கூடவா நம்ம கூட்டத்துல இல்ல'’ என்று சங்கீதா சவுண்ட் விட,

''ஏம்மா, நாங்கதான் உங்க சங்காத்யமே வேணாம்னு... சிவனேனு வர்றோம். அதுவும் உங்களுக்கு பொறுக்கலியா. உங்ககூட அட்டகாசம் பண்ணினா... எங்க வேலை போயிடும் தாயீ... '' என்று கப்சிப் ஆனார்கள் டிரைவரும் கண்டக்டரும்!

சந்தோஷம் பொங்கி வழிந்து கொண்டிருந்த கூட்டத்தை விலக்கிவிட்டு, முன்வந்த ஊர்மிளா... ''காலேஜ் பஸ்ல நிறைய காசு செலவாகும்னுதான் கவர்மென்ட் பஸ்ல வர்றோம். ஆனா, இதுல கூட்டம் அம்முது. அதனால இன்னும் நாலு ஸ்பெஷல் பஸ் விடணும்'' என்று நாட்டாமையாகத் தீர்ப்பு சொல்லி முடிக்க... செம க்ளாப்ஸ்.

ஒரு வழியாக... மதுரை ரிங் ரோடு அருகில் இருக்கும் கல்லூரியை பஸ் தொட... 'இந்த கேட் கூட மில்க் குடிக்குமா’ என்பதுபோல ஒட்டுமொத்த பெண்களும் பவ்யமாக (இதுவரைக்கும் ஒண்ணுமே நடக்கலியாம்) காலேஜுக்குள்ள என்டர் ஆக... 'ரை... ரைட்' என்று ஜூட் விட்டோம்!

- ந.ஆஷிகா

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு