Published:Updated:

‘பசங்க, நமத்துப்போன அப்பளம்... நாங்க, மொறுமொறு பானிபூரி’

அவள் டீன்ஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

'ஒருவருக்கு நன்மை நடக்குதுனா, அதுக்காக பொய் சொல்றது தப்பு இல்லை’னு திருவள்ளுவரே சொல்லியிருக்கார். அப்படி பார்த்தா, 'நல்ல விஷயத்துக்காக பொய் சொல்றது பாய்ஸா... கேர்ள்ஸா?’ங்கற கேள்வியை சொன்ன மாத்திரத்திலேயே...

''இதுக்கு எதுக்கு பாய்ஸ்?'’ என்று 'டாக்க' வந்தார்கள்... காரைக்கால், ஓளவையார் மகளிர் கல்லூரி மாணவிகள்.

''பாரதியார் சொன்னது போல (கஷ்ட காலம். அது நம்ம திருவள்ளுவர்ம்மா), ஒரு நல்ல காரியத்துக்காக கன்னாபின்னானு ஆயிரம் பொய்களை ஆன் தி ஸ்பாட்ல இன்ஸ்டன்டா சொல்றதுல கேர்ள்ஸான எங்களை அடிச்சுக்க முடியாது. பசங்க சொல்ற பொய்... நமத்துப் போன அப்பளம். ஆனா, நாங்க சொல்ற பொய்... எப்பவும் மொறுமொறுனு இருக்கிற பானிபூரி'' என்று அடிக்காமலே நம் காதில் ரத்தம் வரவைத்தார் தியானிகா!

''சொல்லப் போற பொய்ல சுத்தம் இருக்கணும். பொய் சொன்ன பின்னாடியும் அந்த சுத்தத்தை காப்பாத்தணும். ஒரு பொய்யை எத்தனை முறை கேட்டாலும், முதல் முறை சொன்னது போலவே சொல்லணும். அதுதான் சொல்ற பொய்க்கும், நமக்கும் அழகு'' (புதிய தத்துவம் 10,333) சிரிக்காமல் சுஜிதா சொல்ல...  

''ஆமாமா... பொய் சொல்றதை மெயின்டெயின் பண்றதும் ஒரு தனிக்கலை. பாய்ஃப்ரெண்ட்க்கு மெசேஜ் பண்ணிட்டு இருக்கிறப்ப ஏதாவது சண்டை வந்தா, பொண்ணுங்க நாங்க டென்ஷன்ல தூங்கிடுவோம் (?!). ஆனா, அந்த பித்துக்குளி (பொய் சொல்வதை நம்பும் பசங்களுக்கு கேர்ள்ஸ் வைத்திருக்கும் பெயர்) நாம கோவத்துல இருக்கோம்னு, நமக்கு பக்கம் பக்கமா 'ஸாரி மெசேஜ்’ அனுப்பிட்டு இருப்பாங்க. எழுந்திரிச்சு மெசேஜ் பார்த்த பிறகு, 'ஆமா, நான் கோவம்தான்பட்டேன்’னு ஒரு பொய்யை எடுத்துவிட்டு நம்ம இமேஜை காப்பாத்திக்கிடணும். ஒரு 'பேக்’கோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னா... பொய் சொல்றதுல தப்பே இல்லை'' என்று இந்து சொல்லி முடிக்க, க்ளாப்ஸ் காதைக் கட்டியது.

 ‘பசங்க, நமத்துப்போன அப்பளம்... நாங்க, மொறுமொறு பானிபூரி’

''அதுக்குனு ஒரேயடியா பசங்க எல்லாம்    அப்புராணி, சப்புராணினு சொல்லாதடி. நாம் நூறு ரூபாய்க்கு பொய் சொன்னா, அவனுக 90 ரூபாய்க்கு பொய் சொல்வாங்க. அவ்ளோதான்'' என்று வாலன்டியராக டிலைட் நியாயம் பேச,

''ரூபாய்னு சொன்னதுதான் ஞாபகம் வருது. ரெக்கார்ட் ஃபீஸுக்கு ஐநூறு  ரூபாய் வேணும்னா, வீட்ல நாங்க கேட்குறது எண்ணூறு ரூபாய். அதேபோல வீட்டு வேலைக்காக கடைக்குப் போனா, குறைஞ்ச காசுல பொருளை வாங்கிட்டு அப்படியே எம்ப்டி பில் வாங்கிட்டு வந்து நீட்டா அதிக பணத்தை அதுல ஃபில் பண்ணி கொடுத்துருவோம்'’ என்று நான்ஸி சீக்ரெட்டை உடைக்க,

''ஆமாமா... உடனே பெத்தவங்க சின்ஸியரா, 'இந்தா... கடையில மீதி பணத்தையும் கொடுத்திரு’னு கொடுக்கிற காசை வெச்சு எங்க பர்ஸை நிரப்புவோம்'' என்று தன் அனுபவத்தை சொன்னார் சாஷித்யா.

''பசங்க கூட கடலை போட்டுட்டு இருக்கிறப்ப, செகண்ட் கால்ல நமக்கு பிடிச்ச இன்னொரு பையன் வந்தா... உடனே 'அப்பா கூப்பிடுறாங்க, அண்ணா கூப்பிடறாங்க, அம்மா கூப்பிடறாங்க’னு குடும்பத்துல உள்ளவங்கள சொல்லி, காலை கட் பண்ணிட்டு, நியூ கம்மர் கூட பேச ஆரம்பிச்சுருவோம்'' என்று சுஜிதா பெருமையைப் பீற்ற,

''ஆமாங்க... பொய்க்கும் உயிர் இருக்கு (புதிய தத்துவம் 10,334) அந்த பொறுப்புணர்வோட பொய் சொல்லணும். பசங்க தன்னோட தேவைக்காக பொய் சொல்வாங்க. ஆனா, நாங்க பொறுப்புணர்வோட பொய் சொல்வோம்'' என்று சஞ்சனா ஃபீலிங்க்ஸ் டயலாக் விட...

''இதுக்கும் மேலயும் கேட்டுட்டிருந்தா... ரெண்டு காதுலயும் ரத்தம் வழிய ஆரம்பிச்சுடும். விடுங்க தாயீகளா...'’ என்றபடியே 'எஸ்' ஆனோம்.

- மா.நந்தினி

படம்: ர.அருண்பாண்டியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு