Published:Updated:

ஸ்டூடன்ட் வித் செலிப்ரிட்டி!

ஸ்டூடன்ட் வித் செலிப்ரிட்டி!

ஸ்டூடன்ட் வித் செலிப்ரிட்டி!

ஸ்டூடன்ட் வித் செலிப்ரிட்டி!

Published:Updated:
##~##
ஸ்டூடன்ட் வித் செலிப்ரிட்டி!

ரு துறையைத் தேர்ந்தெடுத்து படிக்கின்ற மாணவர்கள், கல்விக் கூடத்துக்கு வெளியில் தங்கள் துறையில் தலைசிறந்து விளங்கிக் கொண்டிருப்பவர்களைப் பிரமிப்பாகவே பார்ப்பார்கள். அதில் அவர்கள் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இப்படி பிரமிக்க வைக்கும் பிரபலத்தைச் சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிடைத்தால்... சூப்பர்தானே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதோ, தான் பணியாற்றிய முதல் படத்திலேயே (பரதேசி) ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருதுபெற்ற பூர்ணிமாவுடன் சந்தோஷ சந்திப்பு நிகழ்த்துகிறார்கள்... சென்னை, மயிலாப்பூர், 'டிரீம் ஸோன் ஸ்கூல் ஆஃப் ஃபேஷன்’ கல்வி நிறுவன 'ஃபேஷன் டிசைனிங்' மாணவ - மாணவிகள். தங்கள் கல்வி நிறுவனத்திலேயே நடந்த இந்த சந்திப்பின்போது... 'அவத்த பையா... செவத்த பையா’ என்று பாடியபடியே வரவேற்றவர்களிடம், ''நல்ல எதிர்காலம் இருக்குற இந்த துறையைத் தேர்ந்தெடுத்த உங்க எல்லோருக்கும் என்னோட வாழ்த்துக்கள்..!'' என்று  சொன்னார் பூர்ணிமா. அதையடுத்து, தங்களின் சந்தேகங்களைக் கேள்விகளாக அடுக்க ஆரம்பித்தனர் மாணவ - மாணவிகள்!

''மக்கள் மத்தியில எந்த அளவுக்கு நம்ம துறைக்கு வரவேற்பு இருக்கு?''

''சில வருஷத்துக்கு முன்ன மாதிரியெல்லாம் இப்போ கிடையாது. எல்லாருமே வெரைட்டீஸ் மேலதான் கிரேஸா இருக்காங்க. செப்பல் தொடங்கி, டிரெஸ் வரைக்கும் எதுவா இருந்தாலும் வித்தியாசமா இருக்கணும்ங்கறதுல உறுதியா இருக்காங்க. இதுதான் நம்ம துறைக்கு மக்கள் மத்தியில கிடைச்சிருக்கற மிகப்பெரிய வரவேற்புக்கான அறிகுறி!''

ஸ்டூடன்ட் வித் செலிப்ரிட்டி!

''என்னென்ன மாதிரியான வேலை வாய்ப்புகள் எங்களுக்குக் கிடைக்கும்?''

''உலக அளவுல நம்ம துறைக்கு வரவேற்பு அதிகம்ங்கிறதால... எங்க போனாலும் வேலை உறுதி! ஒருவேளை, சொந்தமா பணம் செலவு செய்து, வீட்டுல இருந்தபடியே ஆடைகள் வடி வமைச்சு ஏற்றுமதி செய்ய முடிஞ்சா... அதை தாராளமா செய்யலாம். பெரிய பெரிய நிறு வனங்கள் இளைய ஆடை வடிவமைப்பாளர்களை வேலைக்கு எடுக்கறதுக்காகவே காத்துக் கிடக்கறாங்க. அதுல சேர்ந்து உங்களோட திற மைகளை வெளிப்படுத்தலாம். சினிமா உள்ளிட்ட எத்தனையோ இடங்கள்லயும் எக்கச்சக்க வாய்ப்புகள் கொட்டிக்கிடக்குது... டோண்ட் வொர்ரி!''

''ஒரு ஃபேஷன் டிசைனருக்கு இருக்க வேண்டியது... இருக்கக் கூடாதது..?''

''கடின உழைப்பு, கிரியேட்டிவிட்டி, ஆர்வம், நம்பிக்கை, புதுப்புது முயற்சி இதெல்லாம் எப்ப வுமே ஒரு ஃபேஷன் டிசைனருக்கு இருக்கணும். ஈகோ... எப்பவுமே இருக்கக்கூடாது. உதா ரணமா... சினிமாவுல வேலை செய்யுற ஒருவர், தானும் அங்க ஒரு டெக்னீஷியன்னு நெனச்சு தான் செயல்படணும். 'நான் ஃபேஷன் டிசை னர்'னு மிதப்பா சொல்லிக்கிட்டு திரிஞ்சா... வெளியில துரத்திடுவாங்க.’'

''நம்மோட படைப்புக்கு மக்களிடம் சரியான வரவேற்பு கிடைக்கலைன்னா என்ன செய்யுறது?''

''நம்ம படைப்பு... இடத்துக்கும், சூழலுக்கும் ஏத்த மாதிரி இருக்கணும். அப்படி இருந்தா கண்டிப்பா அங்கீகாரம் கிடைத்தே தீரும். உதாரணத்துக்கு, என் முதல் படத்தையே சொல்லலாம். ரிலீஸான முதல் நாள்... முதல் ஷோ, ஆடியன்ஸோட சேர்ந்து தியேட்டர்ல படத்த பார்த்தோம். ஒரே அமைதி. எந்தவித பாஸிட்டிவ் ரிசல்டும் வரல. 'இவ்ளோ கஷ்டப்பட்டு உழைச்சது  வீணாபோச்சே'னு ரொம்ப வருத்தப்பட்டேன். அடுத்த ஷோ... அடுத்த ஷோ... மெதுவா நல்ல ரிசல்ட். நல்ல படைப்பு... கண்டிப்பா ஜெயிக்கும். மக்கள் கட்டாயம் வரவேற்பாங்கனு அப்பதான் தெரிஞ்சிகிட்டேன்.''

ஸ்டூடன்ட் வித் செலிப்ரிட்டி!

''சினிமாவுக்கும் பெண்களுக்கும் சரிப்பட்டு வராதுனு வீட்டுல அனுமதிக்கமாட்டாங்களே... உங்க வீட்டுல எப்படி சமாளிச்சீங்க?''

''வீட்டுக்குத் தெரியாமத்தான் சினிமாவுல வேலை செய்ய ஆரம்பிச்சேன். வழக்கமான என் வேலைகளுக்குப் போற மாதிரியேதான் போயிட்டுஇருந்தேன். ஒரு கட்டத்துல ஷூட்டிங் மதுரை யிலனு சொன்னதும், 'இனி மறைக்கவேணாம்'னு சொல்லிட்டேன். ஒருவழியா எல்லாரும் ஏத்துக்கிட் டாங்க. 6 வயது குழந்தை, குடும்பம், வேலைனு எல்லாத்தையும் சமாளிச்சு பார்த்துக்கிறேன்.''

''வருங்கால ஃபேஷன் டிசைனர்களான எங்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க?''

''எப்படி மருத்துவத் துறையில ஒவ்வொரு வகையான பிரச்னைகளையும் சரிசெய்ய அதை சார்ந்த சிறப்பு நிபுணர்கள் இருக்குறாங்களோ... அதேபோலத்தான் ஃபேஷன் டிசைனர்கள்லயும் இருக்கறாங்க. அதனால உங்களுக்கு எதுல ஆர்வமும், திறமையும் இருக்கோ... அதையே தேர்ந்தெடுத்து உழைக்க ஆரம்பிங்க. இன்டர்நெட்ல புதுப்புது டிசைன்களைத் தேடித்தேடிப் பாருங்க. அப்பதான் கிரியேட்டிவிட்டி இன்னும் அதிகமாகும்.

ஸ்டூடன்ட் வித் செலிப்ரிட்டி!

இன்னொரு முக்கியமான விஷயம்... படிச்சு முடிச்சதுக்கப்புறம் சினிமாவுலதான் வேலை செய்வேன்ங்கிற மாதிரி எந்தவொரு இடத்தையும் முன்கூட்டியே முடிவு பண்ணாதீங்க. கிடைக்கற வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டு முதல்ல முன்னேறப் பாருங்க. அதுதான் புத்திசாலித்தனம். நல்லா பிளான் பண்ணிக்கோங்க. அப்பதான் அதை வெற்றிகரமா செய்ய முடியும்.

முடிஞ்சவரை நிறைய பேரை 'லைக் லிஸ்ட்’ல வெச்சுக்கோங்க. ஒரு நாள் இல்ல ஒரு நாள், நிச்சயம் பயன்படும். மேலும் நீங்க செய்யுற டிசைன்களை நெட்ல போடுங்க. அதை ரசிக்கறவங்க உங்களைத் தொடர்புகொள்ள அதிக வாய்ப்பிருக்கு. அப்படி உங்களை நம்பி, வேலை கொடுக்குறவங்களோட நம்பிக்கையை எப்பவுமே காப்பாத்துங்க'' என்ற பூர்ணிமாவிடம் மாணவர்கள், தங்களது படைப்புகளையெல்லாம் காட்ட... அனைவரையும் பாராட்டியவர்,

''நீங்க எல்லாரும் ஃபீல்டுல பேசக்கூடிய இடத்துக்கு வருவீங்க. என்னோட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..!'' என்று சொல்லி விடைபெற்றார் பூர்ணிமா.

- சா.வடிவரசு, படங்கள்: ஆ.முத்துக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism