Published:Updated:

கொஞ்சம் தமிழ் படிங்க ப்ரோ

கொஞ்சம் தமிழ் படிங்க ப்ரோ

கொஞ்சம் தமிழ் படிங்க ப்ரோ

கொஞ்சம் தமிழ் படிங்க ப்ரோ

Published:Updated:
##~##

''காலேஜ் லீவு நேரத்துலயும் இதே டிஃபனா? ஹோட்டலுக்குப் போயிடலாம் மம்மி'' என்றான் லோகேஷ்.

''ஹோட்டலும் வேணாம்.. கீட்டலும் வேணாம். ஃபேன் ரிப்பேர் ஆகிக் கெடக்குது. எலெக்ட்ரீஷியன் யாரையாவது பார்த்து ரிப்பேர் செய்து கொண்டுவா...''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பைக் கீ எங்க மம்மி?''

''டி.வி. ஸ்டாண்ட், சோஃபா எங்கயாச்சும் பாரு.''

''கம்ப்ளீட்டா சேர்ச் பண்ணிட்டேன்.''

கொஞ்சம் தமிழ் படிங்க ப்ரோ

''ஏண்டா டார்ச்சர் பண்றே... டி.வி. மேல கெடக்கு... கண்ணு தெரியலையா?''

''உனக்கு ஷார்ட் சைட்டானு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கேட்கறாங்க மம்மி...''

''டெஸ்ட் எடுத்துப் பாத்துற வேண்டியதுதானே?''

''நான் ஸ்பெக்ஸ்லாம் போடமாட்டேன். கான்டாக்ட் லென்ஸ்... இல்லேனா, லேஸிக் ஆபரேஷன்.''

''ஃபர்ஸ்ட்டு டெஸ்ட் எடுப்போம். டாக்டர் சொன்னதுக்கப்புறம் மத்தத பத்தி திங்க் பண்ணுவோம்.''

''தேங்ஸ் மம்மி.. இங்க செகண்ட் ஸ்ட்ரீட்ல எலெக்ட்ரீஷியன் கடை இருக்கே... அங்க கேட்டுப்பாக்கறேன்.''

''அதை, அதே ஸ்ட்ரீட்ல லாஸ்ட்ல ஷிஃப்ட் பண்ணிட்டாங்கடா.''

''செக்போஸ்ட் தாண்டி கார்னர்ல இருக்கே... அதுவா?''

- இது ஒரு தமிழ்நாட்டு அம்மாவும் பையனும் பேசிக்கொள்ளும் உரையாடல்தான்.

இதில் மொத்தம் இருக்கும் வார்த்தைகள்: 92,

அதில் ஆங்கிலம்: 43

காலேஜ்: கல்லூரி, லீவு: விடுமுறை, டிஃபன்: சிற்றுண்டி, ஹோட்டல்: உணவகம், மம்மி: அம்மா, ஃபேன்: மின்விசிறி, ரிப்பேர்: பழுது, எலெக்ட்ரீஷியன்: மின்பழுதுபார்ப்பவர், பைக்: இரு சக்கர வாகனம், கீ: சாவி,  டி.வி. ஸ்டாண்ட்: தொலைக்காட்சிப் பெட்டி வைக்கும் மேசை, சோஃபா: சாய்வு மெத்தை,  கம்ப்ளீட்: முழுமையாக, சேர்ச்: தேடு, டார்ச்சர்: தொல்லை, ஃப்ரெண்ட்ஸ்: நண்பர்கள், ஷார்ட் சைட்: கிட்டப் பார்வை, டெஸ்ட்: பரிசோதனை, கான்டாக்ட் லென்ஸ்: கண் ஒட்டு விழித்திரை, ஸ்பெக்ஸ்: மூக்குக் கண்ணாடி, லேஸிக் ஆபரேஷன்: ஒளிக்கதிர் அறுவை சிகிச்சை,  ஃபர்ஸ்ட்: முதலாவது, டாக்டர்: மருத்துவர், திங்க்: சிந்தனை செய். தேங்க்ஸ்: நன்றி, செகண்ட் ஸ்ட்ரீட்: இரண்டாவது தெரு, லாஸ்ட்: கடைசி, ஷிஃப்ட்: மாற்றம், செக்போஸ்ட்: சோதனைச் சாவடி, கார்னர்: முனை.

- தமிழ் டீச்சர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism