Published:Updated:

ரெஸ்லிங் வீரரை கன்னத்தில் அறைந்த ரூனி

ரெஸ்லிங் வீரரை கன்னத்தில் அறைந்த  ரூனி
ரெஸ்லிங் வீரரை கன்னத்தில் அறைந்த ரூனி

ரெஸ்லிங் வீரர் ஒருவரை இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டன் ரூனி, கன்னத்தில் அறைந்தார்.

            

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர வீரரான ரூனி, நேற்று மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற, ரெஸ்லிங் போட்டியை காண வந்திருந்தார். அப்போது அவருக்கும் ரெஸ்லிங் வீரர் வேட் பேரட்டுக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதத்தின் போது, வேட் பேரட், ‘இந்த மேடையில் உள்ள நாங்கள் இருவரில் ஒருவர் வெல்லப் போகும் இந்த பட்டம் உன்னை விடவும் மான்செஸ்டர் யுனைடெட்டை விடவும் பெரியது ‘ என்று கூறினார்.

இதனால் ரூனியும் பதிலுக்கு ஏதோ கூறினார். அதோடு, தனக்கு அருகில் வருமாறு வேட் பேரட்டிடம் கூறினார். அவரது அருகில் வந்து பேரட் ஏதோ சொல்ல, ரூனி அவரது கன்னத்தில் பளாரென்று அறைந்து விட்டார்.

ஆனால் இது விளையாட்டுக்காக செய்யப்பட்டதாக பின்னர் ரூனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.