அனுபவங்கள் பேசுகின்றன !

ஏமாற்றிய ஏ.டி.எம்!

சமீபத்தில், நெருங்கிய சொந்தமொன்றின் திருமணத்துக்காக வெளியூர் கிளம்பினோம். நிறைய மொய் செய்ய வேண்டிய சூழல். ஆனால், பணத்தை பயணத்தில் எடுத்து செல்வது ரிஸ்க் என்பதால், அந்த ஊரில்இருக்கும் ஏ.டி.எம். மெஷினில் எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். அதிகாலை முகூர்த்தம் என்பதால், இரவு பணம் எடுக்கச் சென்றார் கணவர். ஆனால், கரன்ட் இல்லாததால், திரும்பி வந்து விட்டார். பின் அதிகாலையில் மீண்டும் பணம் எடுக்கச் செல்ல, அப்போதும் கரன்ட் வந்தபாடில்லை. அந்தச் சிறுநகரத்தில், வேறெந்த ஏ.டி.எம்-மும் இல்லாமல்போக, கலங்கிவிட்டோம். வந்த இடத்தில் உறவுகளிடம் கடன் கேட்பதற்கும் தயக்கமாக இருக்க, கேட்டாலும் விசேஷத்துக்கு வந்த இடத்தில் அவ்வளவு பெரிய தொகையை கையில் யார் வைத்திருப்பார்கள் என்ற உண்மையும் உறைக்க, சோர்ந்துவிட்டோம். பின் ஒருவாறாக, நண்பர் ஒருவரிடம் விஷயத்தைக் கூறி, கடன் பெற்றோம். ஏ.டி.எம்-ஐ நம்பி மட்டுமே எங்கேயும் போகக்கூடாது என்பதுதான் நாங்கள் கற்ற பாடம்.

பின்குறிப்பு நினைத்தபோது நினைத்த இடத்தில் பணம் எடுக்கும் வசதிக்குத்தானே ஏ.டி.எம்! அப்படியிருக்கும்போது பவர்கட் அதற்கு தடையாக இருக்கலாமோ? 'ஜெனரேட்டர்' போன்ற மாற்று ஏற்பாடுகளை வங்கிகள் பரிசீலிக்கலாமே?

- சித்ரா கோபிநாத், காரைக்கால்

ஊட்டிவிட உறவுகள் இல்லை!

சில மாதங்களுக்கு முன்பு அநாதை இல்லம் ஒன்றுக்கு என் கணவருடன் முதல்முறையாகச் சென்றிருந்தேன். அங்கே மனநலம் குன்றிய சிறுமிகளும்கூட பராமரிக்கப்படுவதைக் கண்டேன். அந்த இல்ல நிர்வாகியைச் சந்தித்தபோது மூன்று சிறுமிகள் எங்களுக்கு காலை வணக்கம் கூறினர். பதிலுக்கு நாங்களும் வணக்கம் சொல்ல, ஒரு சிறுமி தனது கையில்இருந்த சாக்லெட்டை என் கையில் கொடுத்தாள். அதை வாங்க நான் யோசித்தபோது, ''வாங்கிக்கோங்க... இல்லைனா அந்தக் குழந்தை வருத்தப்படும்" என்றார் நிர்வாகி. நானும் வாங்கிக் கொண்டேன். அதன்பிறகு அந்தக் குழந்தை தனது கைகளால் ஏதோ சைகை செய்தது. என்னைச் சாப்பிடத்தான் சொல்கிறதோ என்று கூச்சப்பட்டு நிற்க, இதைப் பார்த்த நிர்வாகி, ''சாக்லெட்டைப் பிரித்து அந்த குழந்தையின் வாயில் போடுங்கள்" என்றார். அப்படியே நான் செய்ய, அந்தக் குழந்தை அடைந்த சந்தோஷத்துக்கு அளவில்லை.

''அந்தக் குழந்தைகளுக்கு அன்பாக ஊட்டிவிட உறவுகள் யாரும் இல்லை. அதனால்தான்..." - நிர்வாகி சொன்னதைக் கேட்டதும் நானும் கணவரும் கண்ணீர் விட்டபடி அங்கிருந்து நகர்ந்தோம்.

- மஞ்சு வாசுதேவன், நவி மும்பை

ஜாக்கெட் சண்டை!

எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களில் இருவருக்கு நல்ல டிரெஸ்ஸிங் சென்ஸ். ஒரு நாள், அவர்களில் ஒருவர் அணிந்து வந்த பிளவுஸ், மிகவும் மாடர்னாக, ஃபிட்டாக, குறிப்பாக அவருக்கு மிகவும் அழகாக இருக்க, மற்றொருவர் தன்னுடைய பிளவுஸ் பிட் ஒன்றை தந்து, ''எனக்கும் நீ தைச்ச இடத்துலயே இதே மாதிரி மாடல்ல தைச்சுட்டு வா" என்றார். அவரும் அதேபோல தைத்து வந்து கொடுக்க, ஆனால், இந்த தோழிக்கு அந்த கட்டிங்கும் மாடலும் கொஞ்சம்கூட பொருந்தவில்லை. ''என் பிளவுஸ் துணியை வாங்கிட்டுப்போய் கெடுத்துட்ட" என்று இவர் கோபப்பட, அவரோ, ''உனக்கு இது சூட் ஆகலனா நான் என்ன பண்ணமுடியும்?" என்று திருப்பிப்பேச, வாக்குவாதமாக முற்றி, அலுவலகமே வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. சக ஊழியர்கள் சமானப்படுத்திய பிறறே சண்டை ஓய்ந்தது.

மாத்திரைகள் போலத்தான் நமது உடை போன்ற விஷயங்களும். ஒருவருக்கு பொருந்துவது, மற்றவருக்கு பொருந்தாமல் போகலாம். எனவே, மற்றவர்களைப் பார்த்து தானும் அது போல உடுத்த ஆசைப்படுவதைவிட, நமக்குச் சிறந்ததை தேர்ந்தெடுப்பதே நலம்.

- மகாலட்சுமி, பாலூர்

நிறம் மாறும் பூக்கள்!

நான் நல்ல நிறமாக இருப்பது பற்றி எனக்கு அவ்வளவு சந்தோஷம். வளர வளர அது கர்வமாக மாற, கறுப்பானவர்களை எல்லாம் குறைவாக மதிப்பிட ஆரம்பித்தேன். என்னைப்போல நிறமானவர்களுடன் மட்டுமே பழகினேன். அப்படித்தான் எனக்குப் பழக்கமானாள் என் தோழி. அவளுக்கும் என்னைப் போலவே நிறம் பற்றிய கர்வம் உண்டு. இருவருக்கும் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தபோது, 'கறுப்பான மாப்பிள்ளைக்கு நோ. எங்களுக்கு மேட்சா, சிவப்பா பாருங்க' என்று கண்டிஷன் போட்டோம். ஆசைப்படி, என் தோழிக்கு வாய்த்த மாப்பிள்ளை அப்படி ஒரு எலுமிச்சம் நிறம். ஆனால், சந்தேக குணம், குடிப்பழக்கம் என அவனின் மனசு முழுக்க அழுக்கு அப்பியிருந்தது, திருமணத்துக்குப் பின்தான் தெரிய வந்தது. விளைவு... ஒரே வருடத்தில் உலகத்தின் அத்தனை துன்பங்களையும் பார்த்துவிட்டாள் தோழி.

எனக்கு கறுப்பாக ஒரு வரன் அமைந்தபோது, ''அவள மாதிரியே அடம் பிடிச்சு, வீணாப் போயிடாத" என்று என் வீட்டில் என்னை பயமுறுத்த, அரை மனதுடன்தான் ஒப்புக்கொண்டேன். ஆனால், அத்தனை அன்பும், பண்பும் அந்த கறுப்புத் தோலுக்குப்பின் ஒளிர்ந்ததை திருமணத்துக்குப் பின்புதான் புரிந்துகொண்டேன். ஒருவேளை என் எண்ணம் மாறாதிருந்தால், இந்த பொக்கிஷத்தை இழந்திருப்பேன். எனக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளும் அவரைப்போலவே நல்ல கறுப்பு. ''உன்னை மாதிரி கலரா பிறந்திருக்கலாம்" என்று பார்ப்பவர்கள் சொல்லும்போதுகூட, நான் சலனப்படுவதில்லை. 'நல்லதோ... கெட்டதோ... நிறத்தை வைத்து எதையும் முடிவு செய்யக்கூடாது' என்ற பாடம் என் மனதில் ஆழமாகப் பதிந்திருப்பதுதான் காரணம்.

- காந்திமதி ராமகிருஷ்ணன், மதுரை

மண வாழ்க்கை மலர ஜால்ரா!

என் தோழி வீட்டுத் திருமணத்துக்கு வந்திருந்த பரிசுப் பொருட்களை நானும் அவளும் பிரித்துக் கொண்டிருந்தோம். ஒரு சிறிய பெட்டி சற்று கனமாக இருக்க, ஆவலோடு பிரித்த எங்களுக்கு ஒரே சிரிப்பு. உள்ளே இருந்தது.. ஒரு செட் ஜால்ரா... ப்ளஸ் ஒரு கடிதம். 'உன் ந்மணவாழ்க்கை சொர்க்கமாக இருக்க, உன் மனைவி கோபப்பட்டு வாயைத் திறக்கும்போது, நீ வாயை மூடிக்கொள்! கஷ்டமாக இருந்தால், இந்த ஜால்ராவை தட்டிக் கொண்டிரு. போகப் போக அந்த சுருதி உனக்குப் புலப்பட்டுவிடும்... என்னைப்போல!' என்று எழுதியிருந்தார் பரிசளித்த நண்பர்!

அந்த நண்பரையும் அவரது குறும்பையும் வீடு முழுக்க நாங்கள் சொல்லிக் களிக்க, அத்தனை பரிசுகளிலும் எங்களுக்குப் பிடித்துப் போனது மறக்க முடியாத அந்தப் பரிசுதான்!

- பி.சங்கவி, குளித்தலை