இதயா

ரொமான்ஸ் ரகசியங்கள்!

வீட்டில் சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிறது. மனைவி சுகந்தி யோடு 'டூக்கா' விட்டிருக்கிறான் ரமேஷ். திருமணமான இந்தநான்கு வருடங்களில், சுகாவோடு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பேசாமல் இருப்பது இதுதான் முதல் முறை.

சண்டை ஆரம்பித்தது... சாப்பாட்டில்தான்!

அன்று ரமேஷ் ஆபீஸில் இருந்து திரும்பியதே இரவு பத்து மணிக்குதான். நல்ல பசி வேறு. வந்ததும் 'சாப்பாடு வை' என்றபடி கைலிக்கு மாறினான். ஆபீஸில் இருந்து மாலை ஆறு மணிக்கு வருவதாக தான் வாக்கு கொடுத்தது பற்றி அவனுக்கு நினைவிருந்ததாகத் தெரியவில்லை. அடுத்த வாரம் குட்டி மகளுக்கு பர்த்டே. அதற்கு டிரெஸ் வாங்க இருவரும் கடைக்குப் போவதாகத் திட்டம்.

ஆனால், ஆபீஸ் போனதும் மதியம் ஜி.எம். விசிட் இருப்பது தெரியவர, பரபரப்பு பற்றிக்கொள்ள, வீட்டையே மறந்துபோனான் ரமேஷ். நினைவுபடுத்துவதற்காக மாலை சுகந்தி போன் செய்ய... 'ஸ்விச்ட் ஆஃப்'! மீட்டிங்குக்காக செல்போனை ஆஃப் செய்தவன், வீடு திரும்பும்போதுதான் ஆன் செய்தான். வீட்டுக்கு வந்தவனை 'ஏன் லேட்?' என்றுகூட கேட்கவில்லை சுகந்தி. எல்லாம் போகட்டும்... வந்தவன் தனக்காக காத்துக்கிடந்தவளுக்கு ஒரு 'ஸாரி'கூட சொல்லவில்லையே என்பதுதான் சுகந்தியின் வருத்தம், கோபம்.

சாப்பாட்டை எடுத்து வைத்தாள். சாப்பாடு மிக எளிமையாக இருந்தது. எது இருக்கிறதோ இல்லையோ... அவனுக்கு சாப்பாட்டில் கட்டாயம் அப்பளம் வேண்டும். அன்று அப்பளம்கூட இல்லை. வந்தது கோபம்.

''அப்பளம் இல்லையா..?"

''சுத்தமா எண்ணெய் இல்லை. 'சரி, இன்னிக்கு வெளிய கிளம்புறப்போ வாங்கிக்கலாம்'னு நினைச்சேன்" - குத்தாமல் குத்தினாள். அப்போதுதான் அவர் களின் ஷாப்பிங் பிளானே நினைவுக்கு வந்தது ரமேஷுக்கு. தான் செய்தது தவறுதான் என்பதை உணர்ந்தாலும், அந்தக் கோபத்தை சுகந்தி சாப்பாட்டில் காட்டியதில் அவனுக்கும் கோபம் உரசிக்கொள்ள, பணிந்து போக புத்தி மறுத்தது. வார்த்தை வலுத்தது.

''நான் அப்பளம் இல்லாம சாப்பிட மாட்டேன்னு தெரியும்ல..? ஏன்... நீயே கொஞ்சம் பக்கத்துல இருக்கற கடைக்குப் போய் எண்ணெய் மட்டும் வாங்கிட்டு வந்திருக்கக்கூடாதா? போன மாசம் உங்க மாமா திடீர்னு போன் பண்ணி வர்றேன்னு சொன்னப்போ மட்டும், வேகமா கடைக்குப் போய் காய் வாங்கிட்டு வந்து சமைச்சல்ல..." - கோபமாக மனைவியைப் பார்த்தவன், ''எனக்கு சாப்பாடு வேணாம்..." என தட்டைத் தள்ளிவிட்டபடி பட்டென எழுந்து, சட்டையை போட்டுக்கொண்டு ஹோட்டலுக்கு புறப்பட்டுவிட்டான். சுகந்தியும் தடுக்கவில்லை.

"ஸாரிம்மா.. மறந்துட்டேன்'னு ஒரு வார்த்தை சொல்லி என்னைச் சமாதானப் படுத்த அவருக்குத் தோணலையா?' என்ற வருத்தம், அவளுக்குள் அழுகையாகப் பொங்கியது. அன்று இரவு சாப்பிடாமலே படுத்துவிட்டாள்.

தொடர்ந்து மூன்று நாட்கள்... வீட்டில்இருந்து காலையில் சீக்கிரம் புறப்படுவதும், இரவு குழந்தை தூங்கியதும் திரும்புவதுமாக இருக்கிறான் ரமேஷ். சுகந்திக்கு அவன்போல கல்லாக இருக்க முடியவில்லை. காலையில் காபி தந்தாள். குடிக்கவில்லை. ஆபீஸ§க்கு சாப்பாடு கட்டித் தந்தாள். எடுத்துச் செல்லவில்லை. அதற்குமேல் எப்படி இளகி வருவதென்று அவளுக்கும் தெரியவில்லை.

வாடிப்போனாள். தன்னுடைய மன உளைச்சல்களை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் போல் இருந்தது. ஆனால், தனக்கும் தன் கணவருக்குமான அந்தத் தற்காலிக இடைவெளியை மற்றவர்களிடம் கடைவிரிக்க அவள் விரும்பவில்லை. எப்போது இந்த சண்டை முடிவுக்கு வரும் என தவித்தது மனம். அவனின் செல்ல செல்ல கொஞ்சல்களுக்கும் சீண்டல்களுக்கும் உள்ளூர ஏங்கத் தொடங்கினாள் சுகந்தி

ரமேஷும் ஏதோ அந்த நேர ஆத்திரத்தில் அப்படி நடந்து கொண்டாலும், சுகந்தியிடம் பேசாமல் அவனுக்கும் ஆகவில்லை. ஆனாலும், அவனின் ஈகோ திரை போட்டது. 'முதலில் 'டூ' விட்டவர்தானே 'பழம்' விடவேண்டும்' என சுகந்தியும் காத்திருந்தாள்.

நான்காவது நாள்... அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் சாப்பிடுவதற்காக ஒரு ஹோட்டலில் நுழைந்த ரமேஷுக்கு எதிர்பாராத அதிர்ச்சி. அங்கே சிரித்த முகமாக எதிர்வந்தார் மாமனார். அவரும் உள்ளூர்தான். உறவால் மாமனார் என்றாலும், அன்பால் இருவரும் நண்பர்கள் போல பழகிக்கொள்ளக்கூடியவர்கள்.

ரமேஷுக்கு சுகந்தி எப்படியும் அவள் அப்பாவிடம் தன்னைப் பற்றி முறையிட்டிருப்பாள் என்று தோண, அவரை எதிர்கொள்வதை சங்கடமாக உணர்ந்தான். சில நொடிகளில், அவர் கேட்கும் முன் நாமே சொல்லி விடுவது உத்தமம் என எண்ணி, ''என்னை பத்தி சுகந்தி என்ன கம்ப்ளெயின்ட் சொன்னா மாமா?" என்று ஆரம்பித்தான்.

''கம்ப்ளெயின்ட்டா... ஒண்ணும் சொல்லலையே மாப்ள..." என்று அவர் மறுக்க, அதோடு வார்த்தைகளை விடாமல் நிறுத்தப் பார்த்தான். ஆனாலும், அவர் பேசி வாங்கிவிட்டார். பின் அவர் பேச ஆரம்பித்தார்.

''மூணு நாளா மனைவிகூட பேசாம, வீட்டுல சாப்பிடாம இருந்திருக்கீங்க. உங்க வாழ்க்கையில மூணு இன்பமான நாட்கள இழந்துட்டீங்களே மாப்ள. ஒருத்தரை ஒருத்தர் துன்பப்படுத்தி வாழறதுக்கு நீங்க என்ன எதிரிகளா? எத்தனை பேர் கண்ணு வச்ச அம்சமான தம்பதி நீங்க? இப்போ ஈகோவால இப்படி பிரிஞ்சு கிடக்கீங்களே! உங்களுக்கு நீங்களே தேவைஇல்லாம தண்டனை கொடுத்துட்டு இருக்கீங்க. கணவன்-மனைவிக்குள்ளே ஈகோங்கிற பேய்க்கு இடமே இருக்கக்கூடாது. அப்பளம் பொரிக்கலையினு இந்தச் சின்ன விஷயத்துக்கே மூணு நாள் சண்டை. நாளைக்கு நிஜமாவே ஒரு சீரியஸான பிரச்னை உங்களுக்குள்ள வந்துட்டா, அப்போ இந்த இடைவெளி இன்னும் எவ்வளவு பெருசாகும்? அதுக்கு இடம் கொடுக்காம ரெண்டுபேரும் நடந்துக்கணும்.

வீட்டுக்குப் போனதும், என்னைச் சந்திச்ச தகவலையே துருப்புச் சீட்டா வச்சு, பேச்சை தொடங்குங்க" என்றவர், ''அப்பறம் மாப்ள.. இந்த விஷயம் எனக்குத் தெரிஞ்சதா நீங்க சுகந்திகிட்ட சொல்லிக்க வேண்டாம். அவகிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயமே... உங்களை எப்பவும் யார்கிட்டயும் எள்ளளவும் விட்டுக் கொடுக்கறதை விரும்பமாட்டா!"

- இறுதியாக வைத்த இந்த பன்ச், ரமேஷின் மூன்று நாள் உறுதியை உடைத்துப்போட... 'வீட்டுச் சாப்பாட்டின்' ருசியை மன துக்குள் அசைபோட்டபடியே வண்டியை விரட்டினான் வீடு நோக்கி!

- ரகசியங்கள் தொடரும்...