குழந்தை சரியாகச் சாப்பிடவில்லையா...
காரணம் நீங்கள்தான்!

"எப்படிதான் இந்தப் பசங்களுக்குச் சமைக்கிறதுனு தெரியலை. எதை வெச்சு அனுப்பிச்சாலும் டிபன் பாக்ஸோடு பத்திரமா திருப்பி கொண்டு வந்துடுதுங்க...''

- இப்படி புலம்பும் அம்மாக்களின் லிஸ்ட்டில் நீங்களும் ஒருவரா..?

"பிடிக்காது, சாப்பிட மாட்டார்கள் என்று முத்திரை குத்தி அவர்களை அப்படியே பழக்கப்படுத்துவது உங்கள் குற்றம்தானே தவிர, அவர்கள் குற்றமில்லை'' என்று தொடங்கும் ஸ்ரீ வர்மா குருகுலத்தின் சித்த மருத்துவர் வேல்மணி சொல்வதை கேளுங்கள்.

" 'இந்தக் காய் பிடிக்காது, அந்தக் கீரை வேண்டாம்' என்று உங்கள் குழந்தைகள் ஒதுக்குகிறார்களா? ஏன் என்று சற்று யோசியுங்கள். திடீரென்று ஒருநாள் 'குழந்தைக்கு இந்தக் கீரை கொடுத்தால் நன்றாக படிப்பார்கள்' என்று யாராவது கூறினாலோ, புத்தகத்தில் படித்தாலோ உடனே அதை அவர்களுக்குச் சமைத்துக் கொடுப்பீர்கள். அப்படி செய்யும்போது குழந்தைகள் ஏதோ கட்டாயத்தால் சாப்பிடுவது போல் உணர்கிறார்கள். இதைத் தவிர்ப்பதும், அவர்களுக்கு நீங்கள் எந்தப் பொருளைச் சமைத்துக் கொடுத்தாலும் விரும்பிச் சாப்பிட வைப்பதும் உங்கள் அன்பில்தான் இருக்கிறது.

'இதோ பார் செல்லம். நாளைக்கு நீ ஸ்கூலுக்கு கொண்டுபோக மார்க்கெட்டுல புதுசா, இளசா கிடைச்ச காய்கறியெல்லாம் வாங்கி வந்திருக்கேன். உனக்குப் பிடிச்சதை எடுத்துக் கொடு. நாளைக்கு சூப்பரா சமைச்சுத் தர்றேன். உன் ஃப்ரெண்ட்ஸ§களுக்கும் கொடு. சூப்பர்னு சொல்வாங்க' என்று ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளை புதிது புதிதாக அறிமுகப்படுத்தி தினம் ஒரு சுவையில் செய்து கொடுங்கள்.

'இப்பல்லாம் இந்தக் கீரை மார்க்கெட்ல கிடைக்கிறதேயில்ல. உனக்குனு தேடினப்ப கிடைச்சது. அப்படியே அள்ளிட்டு வந்தேன். நீ ஸ்ட்ராங்கா இருக்கணுமில்லே. ஸ்போர்ட்ஸ்ல ஜெயிக்கணுமில்லே. இதை நான் நாளைக்கு சமைக்கட்டுமா? நாளைக்கு மறுநாள் சமைக்கட்டுமா? நீயே சொல்லு' என்று ஆசையைத் தூண்டுவது உங்களிடம்தான் இருக்கிறது.

இப்போதெல்லாம் பல வீடுகளில் பெண்கள் சுவைக் காக மட்டுமே சமைக்கிறார்கள். ஆரோக்கியத்துக்காக இல்லை. அவர்களைச் சாப்பிட வைப்பதற்காக கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் மசாலா பொருட்கள், செயற்கை சுவையூட்டிகளை தூவி சமைக்காதீர்கள். கேரட், பீன்ஸ், தக்காளி, முட்டை கோஸ், பீட்ரூட், கீரை வகையைப் பொரியலாக செய்து கொடுத்தால் சாப்பிடுவதில்லை என்றால் சூப் செய்து தரலாம். இட்லி பிடிக்கவில்லை என்றால் நிறைய பருப்பு வகையைச் சேர்த்து உப்புமா செய்து தரலாம்'' என்று சொல்லும் வேல்மணி,

"முக்கியமான விஷயம்... முறையான, சத்தான உணவை குழந்தைக்குக் கொடுக்கும் முன் முதலில் நீங்களும் பின்பற்றுங்கள். உங்களைப் பார்த்துச் சாப்பிட அவர்கள் தானாகவே கற்றுக்கொள்வார்கள்!'' என்ற டிப்ஸோடு முடித்தார்.

ஒவ்வொரு குழந்தையின் தினசரி உணவிலும் இருக்க வேண்டியவை பால் - 2 கப், ஏதாவது ஒரு கீரை, காய், தானிய வகைகள், பயறு வகைகள், பல வகை பழத்துண்டுகள் - ஒரு கப். கொறிப்பதற்கு எண்ணெயில் பொரிக்'காத, வீட்டில் தயாரான பலகாரம். காய்கறி சூப், சுண்'டல்'கள், உலர்ந்த பழங்கள், சாலட், பழச்சாறு.

- என்.மாலதி, படம் கே.கார்த்திகேயன்