'ஜாலி டே, எங்கள் ஹோலி டே...!'

திருச்சியைத் திணறடித்த தோழிகளின் திருவிழா!

''அவள் விகடன் படிச்சியா... கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் இடைவெளிக்கு அப்பறம் மறுபடியும் 'ஜாலி டே' அறிவிப்பு வெளியிட்டிருக்காங்கப்பா! திருச்சியிலதான் ஆரம்ப விழாவாம். இனி எல்லா ஊர்களுக்கும் ஒரு ரவுண்ட் வருவாங்க. நமக்கு எல்லாம் கொண்டாட்டம்தான், பரிசுதான்..!"

- அவள் விகடனில் வெளியான 'ஜாலி டே' அறிவிப்பைப் பார்த்துவிட்டு செம்ம்மமம குஷியாகிவிட்டார்கள் வாசகிகள்.

அறிவிப்பு வெளியான சில தினங்களுக்குள்ளாகவே நிகழ்ச்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்பதற்கு எஸ்.எம்.எஸ். மூலமாக முன்பதிவு செய்த வாசகிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. அந்த அசுர ஆர்வத்துக்குத் தீனி போடுவதற்காகவே தயாரானது 'அவள் விகடன்' டீம். 'ஸ்பான்ஸர் பார்ட்னர்' விவெல் நிறுவனத்தினரும் பலமாக கைகோக்க, புதுத்தெம்புடன் தடதடவென தொடங்கின 'ஜாலி டே'வுக்கான ஏற்பாடுகள்! விழாவுக்கான தேதி நெருங்குவதற்குள்ளாகவே, இரண்டாயிரம் என்ற எண்ணிக்கையைத் தாண்டி, வேறு வழியில்லாமல் ஹவுஸ் ஃபுல் போட வைத்துவிட்டது வாசகிகளின் முன்பதிவு ஆர்வம்!

வாசகிகளின் கட்டுக்கடங்காத இந்த ஆர்வம்... ஆகஸ்ட் 8, 9 ஆகிய இரண்டு நாட்களும் ஆர்ப்பரிப்பு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்பதாக விரிய, 'கலர்ஃபுல்'லாக திருச்சி மாநகரில் களை கட்டியது 'அவள் விகடன்' மற்றும் 'விவெல்' நிறுவனம் இணைந்து வழங்கிய பெண்களுக்கான உற்சாக உத்சவமான 'ஜாலி டே'!

முதல் நாள் திருவிழாவின் ஹைலைட் விஷயங்களான முதற்கட்ட போட்டிகள்.... திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகே இருக்கும் தேசிய கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் 8-ம் தேதியன்று படுபரபரப்பாக நடை\பெற்றன. ரங்கோலி, மெகந்தி, வினாடி-வினா, மௌன மொழி, பாட்டுக்குப் பாட்டு, அம்மா-பெண், தோழி அறிதல் என பதினைந்துக்கும் மேற்பட்ட போட்டிகளை குறி வைத்து, ஏற்கெனவே தங்களின் பெயர்களைப் பதிவு செய்திருந்த வாசகிகள் காலை ஏழு மணியிலிருந்தே அணி வகுக்க ஆரம்பித்துவிட்டனர். இத்தனைக்கும் 'காலை பத்து மணிக்கு போட்டிகள் தொடங்கும்' என்றுதான் நாம் அறிவித்திருந்தோம்.

வாசகிகளுக்கு உதவுவதற்காகவே பள்ளியின் வாயிலில் காத்திருந்த வாலன்டியர்கள் (ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி மாணவிகள்), வரவேற்பு சொல்லி, கவுன்டர்களில் பெயர்களைப் பதிவு செய்து, கையில் போட்டிகளுக்கான படிவத்தைக் கொடுத்து, போட்டி நடக்கும் அறைகளுக்கு அக்கறையுடன் அனுப்பி வைத்தனர். பத்து மணிக்கு எல்லாம் வாசகிகளின் வருகைப் பல மடங்காகப் பெருக, இரண்டு கவுன்டர்கள்... நான்கு கவுன்டர்கள் என்று அதிகரிக்கப்பட்டன. போட்டிகளுக்காக நாம் ஏற்பாடு செய்திருந்த முப்பது நடுவர்கள், ஆன் டயத்துக்கு புடவை சரசரக்க வந்திறங்கினார்கள்... ஆரம்பமாயின போட்டிகள்!

சிறந்த 'அம்மா-பெண்' போட்டிக்கு, இருபது வயது மகள் - நாற்பது வயது அம்மா ஜோடி முதல், ஐம்பது வயது மகள் - எழுபது வயது அம்மா ஜோடி வரை வந்து கலந்துகொண்டு கலக்கினார்கள். அம்மாக்களிடம் ஒரு அறையிலும், பெண்களிடம் ஒரு அறையிலுமாக விடைகளை நாம் பெற்றுக்கொள்ள, போட்டி முடிந்து சந்தித்துக் கொண்டவர்கள், ஏதோ எக்ஸாம் ஹாலில் இருந்து வெளியே வந்த மாணவிகள் போல வினாத்தாளைப் பற்றி குதூகலத்துடன் பகிர்ந்துகொண்ட காட்சி... அடடா... அடடா!

'தோழி அறிதல்' போட்டியில், 'நாங்களும் நல்ல ஃபெரெண்ட்ஸ்தான்...' என்று சொல்லி ஆர்வமாக கலந்துகொண்ட மாமியார்-மருமகள் ஜோடிகளின் உற்சாக ஊர்வலம்... ஆஹா... ஆஹா!

போட்டிகள் செமையாக சூடு பிடிக்க... பதினோரு மணிக்கு எல்லாம் அந் தந்த இடத்திலேயே டீ, ஸ்நாக்ஸ் உபசரிப்பு நடக்க, தங்களை ரெஃப்ரெஷ் செய்துகொண்டு, இன்னும் புத்துணர்ச்சியுடன் களத்தில் இறங்கினர் பெண்கள்!

வேஸ்ட் பொருட்களை வைத்து கிராஃப்ட் அயிட்டங்கள் செய்யும் 'வீணாக்காதே' போட்டி... வானவில் வண்ணங்களைத் தரையில் பரப்பி கோலமிட்டிருந்த ரங்கோலி போட்டி... 'எதை தேர்வு செய்ய; எதை விட?' என்று நடுவர்கள் திணறிப்போகும் அளவுக்கு அத்தனை நேர்த்தியாக அமைந்திருந்தன ஒவ்வொரு படைப்பும்!

குறிப்பிட்ட காலக்கெடுவான மதியம் இரண்டு மணியைத் தாண்டிய பிறகும், போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வம் குறையவில்லை தோழிகளுக்கு. குறிப்பாக, மௌன மொழி போட்டிக்கு பெரிய க்யூவே காத்திருந்தது. இதில், டீன்-ஏஜ் குயில்களாக பள்ளி மாணவிகளும் கலந்துகொண்டு கலக்கியது கொள்ளை அழகு!

முன்தேர்வுப் போட்டிகள் நிறைவுக்கு வந்ததும்... 'போட்டி முடிவுகள் நாளை கலைஞர் அறிவாலயத்தில் அறிவிக்கப்படும். பரிசுகள், கொண்டாட்டங்கள் அனைத்தும் அங்கேதான்' என்று நாம் அறிவிக்க, 'அங்கயும் ஜமாய்ச்சுடுவோம்!' என்றபடி கலைந்தனர் வாசகிகள்!

ஆகஸ்ட்-9... காலை எட்டு மணிக்கெல்லாம் கல்யாணக் களை கட்ட ஆரம்பித்துவிட்டது சத்திரம்பேருந்து நிலையம் அருகே, கரூர் பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் கலைஞர் அறிவாலயம்! வாயிலில் ஒட்டப்பட்டிருந்த போட்டி முடிவுகளைச் சுற்றி மொய்க்க ஆரம்பித்துவிட்டனர் பெண்கள். 'யேய்... எனக்கு ஃபர்ஸ்ட் ப்ரைஸ்', 'நான் க்விஸ் பைனல்ஸ் போறேன்' என்றெல்லாம் ஆளாளுக்கு குதூகலிக்க, கொஞ்சம் பொறாமையுடனும், நிறைய சந்தோஷத்துடனும் அதைக் கண்டுகளித்தனர் மற்ற சகோதரிகள்.

கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் அமரக் கூடிய அந்த மிகப் பெரிய ஏ.சி. ஹாலின் கீழ்த்தளம், காலை 9 மணிக்கே சரசரவென நிறைய ஆரம்பித்துவிட்டது. மேற்கொண்டு வந்தவர்கள் எல்லாம் மேல் தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட, 10 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கத் தொடங்கினார் மதுரையைச் சேர்ந்த சுமதி ராஜகோபால்.

பலத்த கரகோஷத்துக்கிடையே மேடையேறிய 'வணக்கத்துக்குரிய' திருச்சி மாநகர மேயர் சுஜாதா, குத்துவிளக்கேற்றி வைத்தார். ''திரி முனையில துளி சூடத்தை வச்சா, விளக்கேத்தறது இன்னும் சுலபமா இருக்கும். அவள் 'டிப்ஸ்'ல படிச்சதுதான்!'' என்று சொல்லி, தான் ஒரு அக்மார்க் 'அவள் விகடன்' வாசகி என்பதை அழகாக நம்மிடம் பதிவு செய்துவிட்டு, மைக் பிடித்தார்.

''நான் மேயரா பொறுப்பேற்ற பிறகு பங்கேற்கிற மிக பிரம்மாண்டமான பெண்கள் நிகழ்ச்சி இதுதான். 'அவள் விகடன்', எப்பவுமே என்னோட ஃபேவரைட். அதுல நான் முதல்ல படிக்கறது... 'என் டைரி!' யார் கிட்டயும் சொல்ல முடியாம புழுங்கித் தவிக்கற பெண்களோட பிரச்னைகளை உலகத்துக்கே சொல்லி, அதுக்கான தீர்வை நிபுணர்கள், வாசகிகள்கிட்ட இருந்து வாங்கிக் கொடுக்கற அந்த ஆக்கப்பூர்வமான முயற்சியை படிச்சு, நான் பலமுறை அசந்திருக்கேன்'' என்றவர்,

''இந்த நாள் முழுக்க உங்களுக்கான திருநாள்... சந்தோஷமா இருங்க'' என்று வாழ்த்தி விடை பெற்றார்.

விகடன் நிர்வாக இயக்குனர் பா.சீனிவாசன், ''இங்கே வந்திருக்கும் இரண்டாயிரம் வி.ஐ.பி-க்களுக்கும் வணக்கம்'' என்று தன்னுடைய உரையை ஆரம்பித்ததுமே... அரங்கத்தை அதிர வைத்தன அப்ளாஸ்கள்.

தொடர்ந்து பேசியவர், ''திருச்சி மலைக்கோட்டை மேல தாயுமானவர் சாமியும் உட்கார்ந்திருக்கிறார். என்னோட அனுபவத்துல 'தந்தையானவர்'னு எங்கயுமே கேள்விப்பட்டதில்ல. ஆனா, ஆபத்து காலத்துல உதவறதுக்காக ஈசன், தாயும் ஆகியிருக்கார். பெண்களோட பெருமையை எடுத்துச் சொல்றதுக்கு இதை விட வேற எடுத்துக்காட்டு தேவையில்ல. அப்படிப்பட்ட மலைக்கோட்டை மாநகர்ல 'ஜாலி டே'யை துவக்கி வச்சிருக்கோம். இது, உங்களுக்கு மட்டும் ஜாலி டே இல்ல; எங்களுக்கும்தான்'' என்று நெகிழ, கை தட்டல் மழை ஓயாது பொழிந்து கொண்டிருந்தது.

பால கலா விதானத்தைச் சேர்ந்த மாணவிகளும்... ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளும் வரவேற்பு நடனத்துடன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க, பார்வையாளர்களில் மிகவும் வயதான எண்பத்தி யோரு வயது சரோஜா பாட்டி மேடைக்கு அழைத்து வரப்பட்டு, பரிசளித்து மரியாதை செய்யப்பட்டார்.

மௌன மொழி, அம்மா-பெண், தோழி அறிதல் என அன்று மேடையில் நடந்த ஃபைனல் போட்டிகளிலும் பெண்கள் வெளுத்துக் கட்டினார்கள். வழக்கம் போல வாசகிகள் இருந்த இடத்துக்கே காபி, டீ, ஸ்நாக்ஸ் கொண்டு செல்லப்பட, சில மணி நேரங்களில் மதிய உணவுக்கான அழைப்பும் வந்தது. ஜாங்கிரி முதல் ஐஸ்கிரீம் வரை அத்தனை அயிட்டங்களும் வரிசை கட்டிய அந்த அற்புதமான பஃபே லஞ்ச், வாசகிகளுக்கு மிகவும் இஷ்டமாகிப்போனது.

மதியம் 'பாட்டுக்குப் பாட்டு' போட்டியில் தூத்துக்குடியில் இருந்து வந்து கலந்து கொண்ட பெண்கள் பிளாக் அண்ட் வொயிட் பாடல்களாகப் போட்டுத் தாக்க, செம க்ளாப்ஸ்பா! கூடவே, அந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்த 'டிரம்ஸ் டி' இசைக்குழுவினர் குத்துப் பாடல் டியூன்களைத் தட்டிவிட, கேம்பஸ் திருவிழாவை மிஞ்சும் அளவுக்கு சூப்பர் டூப்பர் ஆட்டம் போட்டனர் வாசகிகள்! இந்த குதூகலத்தில் மாலை மங்கியதே தெரியவில்லை.

நிறைவாக... பரிசு மேளா! இதற்கான அறிவிப்பை வெளியிட்டதுமே... ''அட, அதுக்குள்ள ஜாலி டே முஞ்சுடுச்சா...?'' என்றபடியே மேடையிலிருந்து கீழே இறங்கினர் ஆட்டக்கார தோழிகள்.

திருச்சி, மாவட்ட கலெக்டரின் மனைவி உஷாவேணி சவுண்டையா மற்றும் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி முதல்வர் மீனா இருவரும்தான் பரிசுகளை வழங்கினார்கள்.

மீனா மேம் பேசும்போது, ''நான் 'அவள் விகடன்' தீவிர ரசிகை. இந்த விழாவுக்காக என்னைக் கூப்பிட்டப்போ, கரும்புத் தின்னக் கூலியானு சந்தோஷமா கிளம்பி வந்துட்டேன். இந்த 'ஜாலி டே', நம்மளோட ராஜ்ஜியம். இதழ்தோறும்... தன்னம்பிக்கை, மருத்துவ விளக்கம், பிஸினஸ் சூட்சமம்னு நமக்காக எவ்வளவோ செய்யற 'அவள் விகடன்', நம்ம சந்தோஷத்துக்காக ஏற்படுத்தி கொடுத்திருக்க உற்சாக மேடை இது. இங்க உங்களுக்கு பரிசு கொடுக்கும்போது, ஏதோ நானே பரிசு வாங்கற மாதிரி புத்துணர்வா உணர்றேன்'' என முடிக்க, சிரித்த முகம் மாறாமல் பரிசுகளை வழங்க ஆரம்பித்தார்கள் அவரும் உஷா மேமும்!

விகடன் பிரசுர புத்தகங்கள், அயர்ன் பாக்ஸ், தவா, எலக்ட்ரிக் குக்கர், மிக்ஸி, கேஸ் ஸ்டவ் என்று பயனுள்ள பரிசுகளாக வழங்கப்பட, நெஞ்சு கொள்ளாத சந்தோஷம்... கை கொள்ளாத பரிசு என்று குதூகலத் துடன் மேடையிலிருந்து இறங்கினார்கள் வெற்றியாளர்கள்.

ஒட்டுமொத்தமாக அரங்கை நிறைத்திருந்த வாசகிகள் அத்தனை பேரின் பெயர்களும் அடங்கிய பதிவுக் கூப்பன்கள் ஒரு பவுலில் போடப்பட்டு, அதிலிருந்து பம்பர் பரிசுக்கான கூப்பனை தேர்ந்தெடுத்தார் 'விவெல்' ஏரியா மேனேஜர் எஸ். அரவிந்த். இருபதாயிரம் மதிப்புள்ள ஃப்ரிட்ஜ் பம்பர் பரிசைத் தட்டிச் சென்றவர்... திருச்சியைச் சேர்ந்த சங்கீதா! இவருடைய பெயர் அறிவிக்கப்பட்டதுமே... ஏதோ தங்களுக்கே பரிசு கிடைத்தது போல... 'ஆ... ஊ...' என்று அலப்பறையை கிளப்பி அசத்திவிட்டனர் தோழிகள்... அதுதானே 'அவள் விகடன்' வாசகிகள்!

'ஜாலி டே' நடந்ததென்னவோ திருச்சியில்தான். ஆனால், கன்னியா குமரியில் ஆரம்பித்து, திருத்தணி... கோயம்புத்தூரில் ஆரம்பித்து நாகப்பட்டினம் என்று தமிழகத்தின் நாலா திசையிலிருந்து வந்து குவிந்திருந்தனர் வாசக தோழிகள்.

நிகழ்ச்சி நிறைவு பெற்றபோது, ஒரு சோறு பதமாக, '' 'ஜாலி டே'ங்கற பேரு இருநூறு சதவிகிதம் பொருத்தம்ங்க. வருஷம் முழுக்க கிச்சன்குள்ளயே கிடக்கற எங்களுக்கே எங்களுக்கான கொண்டாட்டமா இருந்துச்சு இந்த ரெண்டு நாள். மறக்கமுடியாத இந்த ஜாலி டே, எங்கள் ஹோலி டே. ரொம்ப தேங்க்ஸ§ங்க'' என்று நம் கைப்பிடித்து விடைபெற்றுச் சென்ற திருத்தணி வாசகி அலமேலுவின் உள்ளார்ந்த சந்தோஷம், மொத்த உழைப்புக்கான நிறைவையும் பலனையும் தந்தது.

வந்திருந்தவர்கள் அனைவருக்கும் 'விவெல்' சார்பாக கிஃப்ட்கள் கொடுக்கப்பட, சந்தோஷமாக பெற்றுச் சென்றனர். வீட்டு விசேஷத்துக்கு வருபவர்களுக்கு தாம்பூலம் கொடுத்தனுப்புவதுதானே நம் பண்பாடு!

- ஜாலி டே டீம்
படங்கள் என்.ஜி.மணிகண்டன்,
மு.நியாஸ் அகமது, மு.ராமசாமி

இலவச ஹேர் வாஷ்!

அரங்கத்தில் நுழைந்ததுமே வாசகிகள் முதலில் எதிர்கொண்டது... 'விவெல்' நிறுவனத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த ஒரு அறைதான். அது... வாசகிகளுக்கு இலவச ஹேர்வாஷ் செய்வதற்காக அமைக்கப்பட்ட அறை. நிகழ்ச்சியின் இடையே போட்டிப் போட்டுக் கொண்டு வாசகிகள் திரண்டு, அதையும் பயன்படுத்திக் கொண்டது ஜாலியான அனுபவம். கூந்தல் அழகு தொடர்பான வாசகிகளின் சந்தேகங்களுக்கு நிகழ்ச்சியின் இடையே மேடையில் பதில்கள் வழங்கப்பட்டன. இதற்காக 'விவெல்' சார்பில் சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தார் பிரபல பியூட்டி கன்சல்டன்ட் அபர்ணா!