செய்திகள் யோசிப்பது...!

முனைவர் பர்வீன் சுல்தானா,பேராசிரியை

"திருமணமாகி ஐந்தே மாதங்களில் விவாகரத்து கேட்டு நடிகை காவ்யா மாதவன் நீதிமன்றத்தில் மனு"...

"காதல் திருமணம் செய்து கொண்ட இயக்குநர் செல்வராகவன், அவருடைய மனைவி நடிகை சோனியா அகர்வால் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு"...

"எப்போதும் இப்படி ஏதாவது ஒரு, இரு சினிமா பிரபலங்கள் விவாகரத்துக்காக நீதிமன்றம் செல்வதும், அது மீடியாக்ககளுக்குத் தீனியாவதும் வாடிக்கைதான். சினிமா குடும்பங்களாகிப் போவதால் அது வெளிச்சத்துக்கு வருகிறது. ஆனால், நம் மிடில் க்ளாஸ் குடும்பங்களிலேயே நூற்றுக்கணக்கான தம்பதிகள் தினந்தோறும் நீதிமன்றப் படியேறி விவாகரத்துக்காக வேண்டி நிற்பது, இப்போது வெகு சகஜமாகிவிட்டது.

ஆயுளுக்கும் கூட வரும் ஒரே பந்தமாகக் கொண்டாடப்பட்ட மணபந்தம், இப்போதெல்லாம் அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாக திரிந்து, பிரிந்து செல்வது ஏன்?

பெற்றோர்களில் இருந்தே ஆரம்பிப்போம். பொதுவாக, ஒரு பாடத் திட்டத்தைப் பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்வதற்கே, ஆசிரியர்களுக்கு அதைப் பற்றிய முழு விவரமும் முன்னரே கற்பிக்கப்படுகிறது. அதைப்போல, பெரும்பாலும் தங்களின் சுயவிருப்பங்களின்படியே வளர்ந்து நிற்கும் நம் பிள்ளைகள், விருப்புகள், வெறுப்புகள், பொறுப்புகள் நிறைந்த ஒரு இல்லற கூட்டுக்குள் செல்வதற்கு முன், அதைப் பற்றிய நெளிவு, சுளிவுகளை, நல்லது, கெட்டதுகளை அவர்களுக்கு பெற்றோர்கள்தான் சொல்லித்தர வேண்டும். தன்னை நம்பி வரப்போகும் அந்தப் பெண்ணை எப்படி கொண்டாட வேண்டும் என்பதை பையனின் பெற்றோர்களும், அவளுக்கான முழு முதற் துணையாக இருக்கப் போகும் அந்தப் பையனை எப்படி பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் என்பதை பெண்ணின் பெற்றோர்களும் அவரவருக்குச் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.

குடும்பத்துக்குள் சிக்கல் என்று வரும்போது, பரிதாபமான நிலைக்குத் தள்ளப்படுவது சந்தேகத்துக்கு இடமின்றி பெண்கள்தான். ஆண்களுக்கு பொருளாதார பலம் இருக்கிறது. அவனை குற்றம் சொல்லாமல் காப்பாற்றும் சமூகம் இருக்கிறது. ஆனால், பெண்ணுக்கு அவனைத் தவிர வேறு எந்த ஆதாரத்தையும் சமூகம் அங்கீகரிப்பதில்லை.

ஜெயபாஸ்கரனின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது...

'நீ எனக்கு இருப்பதை
யாரும் கேட்டால் ஒழிய
சொல்வதில்லை நான்!
நான் உனக்கு இருப்பதை
ஆபரணங்கள் அணிந்து
சொல்வாய் நீ!
உன் இனத்து
கற்புக்கரசிகளை காட்டி
மிரட்டுவேன் நான்!
என் இனத்து
அயோக்கியர்கள் பற்றி
தெரிந்தும் அமைதியாய்
இருப்பாய் நீ!'

இதுதான் இன்றைய பெண்களின் நிலைமை. அப்படி அவனையே முழுதாகச் சார்ந்திருக்கும் அவள், அவனிடமிருந்தே ஒரு பிரச்னையை எதிர்கொள்ளும்போது, தன்னில் நொடிந்து போகிறாள். அவள் புகுந்த இடத்தில் தன்னை அழுத்தும் சுமைகளை, பணிகளைப் பங்கிட்டுக் கொள்ள யாரும் இல்லாமல் போக, அந்த இடத்தில் அவள் நிம்மதியை இழக்கிறாள். அவனுக்கும் நிம்மதி தராமல் போகிறாள். அதிலும், வேலைக்குச் செல்லும் பெண் இந்த புள்ளியைச் சந்திக்கும்போது, அவளின் பொருளாதார தைரியம் அவளை அடுத்த கட்டம் நோக்கி தூண்டிவிட, பரஸ்பர விவாகரத்துகள் நீதிமன்றங்களில் பதிவாகின்றன.

இங்கு நம் குடும்ப அமைப்பிலும் கொஞ்சம் மாற்றங்கள் தேவை. முதலாளித்துவ நாடுகளில் ஒரு நடைமுறையுண்டு. ஒரு குடும்பத்தில் பெண் தொழில் திறமையுடையவளாக இருந்தால், அதில் தன் கவனத்தை செலுத்துகிறாள். ஆணுக்கு குடும்ப நிர்வாகம் பிடித்திருந்தால், அவன் அதை கவனித்துக் கொள்கிறான். ஆனால், இங்கே அதை கலாசார சீர்கேடு என்று கத்தி கூப்பாடு போடும் நம் சமூகம். சரி... அந்த மாற்றங்களுக்கு இன்னும் வருடங்கள் தேவைப்படலாம். ஆனால், கிடைக்கும் நேரங்களில் வீட்டுப் பணிகளை ஆண்கள் பகிர்ந்துகொள்வது... குறைந்தபட்சம் புரிந்துகொள்ளவாவது உதவும்!

இந்த விவாகரத்து விஷயத்தில், முழுச் சுமைகளும் பெண்களுக்குத்தான் என்று பேசுவதிலும் அர்த்தமில்லை. இந்த மணமுறிவின் வலிகளும் விளைவுகளும் ஆண்களுக்கும் பொருந்தும். தொழில் கவனங்கள் சிதைந்து, மன நிம்மதியை விலை கொடுத்து அவன் வாங்கும் இந்த விவாகரத்து கண்டிப்பாக அவன் வாழ்விலும் ஒரு தீராத வடுதான்.

கடைக்காலத்தில்... கொடுமைக்குள்ளான பெண்களை இந்தச் சமூகம் சலனமில்லாமல் கடந்தது. இடைக்காலத்தில்... அவளுக்கு இழைக்கப்படும் அநீதிகளை அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தது. இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில்... 'வெளியே வா... உன்னை துன்புறுத்துபவனை கூண்டில் நிறுத்து' என்று சட்டம் கற்றுத் தருகிறது. ஒருபுறம்... இந்த அரண், பாதிக்கப்படும் பெண்களுக்கு மிகச் சாதகமாக இருக்கிறதுதான். இன்னொரு புறம்... பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையால் சரி செய்யக்கூடிய குடும்ப விஷயங்களைக்கூட விவாகரத்தில் முடிப்பதற்கு, அந்தச் சட்டத்தையே சில பெண்கள் கருவியாக பயன்படுத்துவது, துரதிர்ஷ்டவசமானது.

மொத்தத்தில் ஆண்கள், பெண்கள்... இருவருமே குடும்ப நிர்வாகத்தில் தங்களை நிலைப்படுத்திக் கொள்ளும் பக்குவத்தை, பயிற்சியைப் பெறும் அந்த ஆரம்பக் கட்டத்தைக் கடந்துவிட்டால், இங்கு பல விவாகரத்துகளுக்கு அவசியமற்றுப் போகும் என்பது என் கருத்து.

நிறைய அன்பும் கொஞ்சம் பொறுமையுமே அவர்கள் வாழ்க்கை வீணாகாமல் காப்பாற்றிவிடும்தானே?!"

படம் என்.விவேக்

காதுல தாலி!

சமீபத்தில் சென்னை, ரெஸிடன்சி டவர்ஸ் ஹோட்டலில் காஷ்மீர் உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர், புகழ்பெற்ற செஃப், சுமன் கால் மேடம். காஷ்மீரைச் சேர்ந்த இவர், காஷ்மீரின் வெஜ் மற்றும் நான் வெஜ் அயிட்டங்களைச் செய்து அசத்தி, நிகழ்ச்சியைக் கமகமக்க வைத்தார். சுமனின் சமையலைவிட எல்லோரையும் கவர்ந்தது, அவருடைய காதில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த அந்த வித்தியாசமான தங்க நகைகள்தான். கூட்டத்தினரும் மீடியா ஆட்களும் ஆர்வத்தை அடக்கமுடியாமல் அவரிடமே அதைப் பற்றி விசாரிக்க, 'இதுதான் என் தாலி!' என்று கூறி சர்ப்ரைஸ் கொடுத்தார் மேடம்.

ஆம்... நாம் கழுத்தில் போட்டுக் கொள்வதைப் போல காஷ்மீர் பெண்கள் அவர்களின் தாலியை இரண்டு காதுகளிலும் மாட்டிக் கொள்வார்களாம். ''எந்த நாட்டுக்கு, என்ன ஃபங்ஷனுக்கு போனாலும் நான் இந்தத் தாலியை கழட்ட மாட்டேன். இதுதான் என் ஜீவன்'' என்று அவர் பன்ச் வைக்க, அசந்து விட்டது கூட்டம்!

நீங்களும் எங்க கட்சிதானா?!

மகிழ்ச்சி தரும் மகளிர் மட்டும்!

சென்னைப் பெண்களின் பல வருடக் கனவாக இருந்த, 'மகளிர் ஸ்பெஷல் ரயில்', இப்போது நனவாகியிருக்கிறது. சமீபத்தில் மத்திய அரசின் ரயில்வே மந்திரியாக பொறுப்பேற்ற மம்தா பானர்ஜி, 'பெரு நகரங்களில், அலுவலக நேர நெரிசல் அவஸ்தையைத் தவிர்க்க பெண்களுக்கென பிரத்யேக ரயில்கள் விடப்படும்' என்று அறிவித்தார். அதன்படி, மும்பை, கொல்கத்தா நகரங்களில் மகளிர் ஸ்பெஷல் ரயில்கள் ஓட ஆரம்பித்துவிட்டன. அதன் தொடர்ச்சியாக சென்னையிலும் கடந்த பதிமூன்றாம் தேதியன்று மகளிர் ஸ்பெஷல் ரயில்களை, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் துவக்கி வைத்திருக்கிறார்.

இதோடு இன்னும் ஒரு சர்க்கரைக்கட்டி நியூஸ்... இந்த ஸ்பெஷல் ரயில்களில், ரயில்வே கார்டு, டிக்கெட் பரிசோதகர்களும் பெண்களே!

வாழ்க மம்தாஜி!

ஒரு இனிய அங்கீகாரம்!

இந்தியப் பெண் ஒருவருக்கு சமீபத்தில் அமெரிக்காவில் கிடைத்துள்ளது ஓர் அசத்தல் அங்கீகாரம். அமெரிக்க ஜனாதிபதியின் மத ரீதியான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள அஞ்சு பார்கவா, சென்னையைச் சேர்ந்தவர். நாற்பத்தி இரண்டு வயதான இவர் சென்னை, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இருபது வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் குடியேறியவர், அமெரிக்க வங்கி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தவர். இப்போது அவர் ஏற்றுக்கொண்டுள்ள பதவிகள் பல. ஆம்... அங்கிருக்கும் வர்த்தகக் கல்லூரி ஒன்றில் கணிதவியல் துறை பேராசிரியர்; அமெரிக்காவில் உள்ள அனைத்து மத குருமார்கள் சங்கத்தின் இந்து மத பிரதிநிதி; ஆசிய&இந்திய பெண்கள் சங்கத்தின் தலைவர்.

எல்லாவற்றுக்கும் மகுடமாகத்தான் மேற்சொன்ன அமெரிக்க ஜனாதிபதியின் மத ரீதியான ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவி!