கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம் !

தீ்ராத வயிற்றுவலியை தீர்த்து வைக்கும் திருவாசி !

'வயித்து வலியும் காய்ச்சலும் வந்தாத்தான் தெரியும்...' என்பார்கள். வயிற்று வலியின் வீரியம், நம்மை ஒரு மூலையில் முடக்கிப் போடும் அளவுக்குச் செல்லும். இப்படி மக்களை வாட்டி எடுக்கும் தீராத வயிற்று வலியையும் தீர்த்து வைக்கும் திருத்தலம்தான் திருவாசி! 'காவிரியின் வடகரையில் உள்ள சிவ ஸ்தலங்களில் 67வது தலம். ஞானசம்பந்தரும் சுந்தரரும் பாடிக் களித்த ஆலயம், காசியை விடவும் ஒரு வீசம் அதீத சக்தி கொண்ட தலம்' என பல பெருமைகள் கொண்ட இந்த ஆலயத்தில், மாற்றுரைவரதீஸ்வரர், தன் நாயகியாம் ஸ்ரீபாலசௌந்தரியுடன் தம்பதி சமேதராக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருவாசி கிராமம். ஊரின் நடுவே பிரமாண்டமாக வீற்றிருக்கிறது ஆலயம்.

உட்பிராகாரத்தில் நடைபோட்டபோது எதிர்பட்டார் ராணி. முகத்தில் தன் வேண்டுதல் பலித்துவிட்ட பூரிப்பு எட்டிப் பார்க்க, அதைப் பற்றி அவரே ஆரம்பித்தார்.

"எனக்குச் சொந்த ஊரு கோயமுத்தூர். இது, என் கணவரோட ஊர். ரெண்டு பேருக்குமே டெய்லரிங்தான் தொழில். வேலை பாக்கற இடத்துல தூசு, மூக்கை அறுக்கற நெடி எனக்கு வயித்துவலியா மாறியிருச்சு. திருப்பூர், கோவை, திருச்சினு ஊர் ஊராப் போய் நிறைய டாக்டர்களைப் பாத்தோம். கலர் கலரா மருந்து, மாத்திரை சாப்பிட்டும் எதுக்கும் கேக்கல. இப்படியே ஏழு வருஷமா வயித்து வலியில போராடிட்டிருந்தேன். ஒருநாள், நாங்க வேல பார்க்கற டெய்லரிங் கம்பெனிக்கு வந்த ஒருத்தரு, 'திருவாசி கோயிலுக்குப் போய் வேண்டிக்கோ... வயித்து வலி, வந்த வேகத்துல ஓடிரும்னு'னாரு. 'பலமுறை இந்தக் கோயிலுக்கு வந்திருக்கேன். ஆனா, இதோட மகிமை தெரியாமப் போச்சே'னு இவரும் உடனே, என்னை இங்கே கூட்டிக்கிட்டு வந்தாரு.

தொடர்ந்து, பதினோரு வாரம் வெள்ளிக் கிழமையில இங்க வந்தேன். 'நீதாம்பா வலியைப் போக்கணும்'னு மனமுருகி வேண்டிக்கிட்டேன். வருஷக்கணக்கா தொல்லை கொடுத்திட்டிருந்த வயித்துவலி ரெண்டே மாசத்துல காணாமப் போச்சு. இன்னிக்கு நெனச்சாலும் பிரமிப்பா இருக்குங்க. இப்போ மாசம் தவறாம இங்க வந்து இந்த மாற்றுரைவரதீஸ்வரரை தரிசனம் பண்ணிட்டுப் போறேன்'' என்று நெக்குருகிச் சொன்னார் ராணி.

மூர்த்தம், தலம், தீர்த்தம் என மூன்று பெருமைகளையும் தன்னகத்தே கொண்டது திருவாசி திருத்தலம். ஆண்பெண் பேதமின்றி அவர்களுக்கான வயிற்று வலியைத் தீர்த்து வைக்கும் சிவனார், தீராத நோயால் அவதிப்பட்ட மன்னனது மகளுக்கு, அருள்பாலித்த வரலாறுதான் அவரின் நோயறுக்கும் சக்தியை உலகுக்கு உணர்த்திய தெய்வச் சம்பவம். அதை பக்தியுடன் விவரித்தார் ஓதுவார் சங்கரன்பிள்ளை.

"மலைநாட்டு மன்னன் கொல்லிமளவனோட மகளுக்கு தீராத வயிற்று நோய் (வலிப்பு நோய் என்பாரும் உண்டு). பல தேசங்கள்ல இருந்து வைத்தியர்கள் வந்து பார்த்தும், நோய் குணமாகல. இதனால மனம் நொந்த மன்னன், மகளை திருவாசி கோயிலுக்கு அழைச்சுட்டு வந்து, 'ஆண்டவனே, என் அருமை மகளை நீயே பார்த்துக்கோ'னு விட்டுட்டுப் போயிட்டான். அப்பறம், திருஞான சம்பந்தர் இந்த தலத்துக்கு வந்திருந்த சமயம், மன்னன் ஓடோடி வந்து சம்பந்தர்கிட்டயும் முறையிட்டு கதறினான். உடனே, 'துணிவளர் திங்கள்'னு தொடங்கற பதிகத்தை சம்பந்தர் பாட... நடராஜரா எழுந்தருளி, ஆனந்தக் கூத்தாடின தல மூர்த்தி, சகல நோய்களையும் முயலகனா மாத்தி அழிச்சிருக்காரு. சர்ப்பத்து மேலேறியும் ஆடினதால 'சர்ப்ப நடராஜர்'னுதான் இங்க அவருக்கு பேரு! சர்ப்பத்து மேல நின்னபடிதான் காட்சி தர்றார். இந்தக் காரணங்களாலதான்... மாற்றுரை வரதீஸ்வரர், சர்ப்ப நடராஜர் மற்றும் பாலாம்பிகை சந்நிதிகளுக்கு நோய் தீர வேண்டி அர்ச்சனை, அபிஷேகம் செஞ்சு வழிபடறாங்க பக்தர்கள்'' என்று நெகிழ்வோடு குறிப்பிட்டார்.

நாமக்கல், களங்காணியிலிருந்து வந்திருந்த தமிழ்ச்செல்வி, பாலாம்பிகை சந்நிதியில் நெக்குருகி வேண்டிக் கொண்டிருக்க... அதை முடித்துவிட்டு வரும் வரை காத்திருந்து சந்தித்தோம்.

"என் கணவர் ஈஸ்வரனுக்கு சொந்த லாரி பிசினஸ். கல்யாணம் ஆனதுலஇருந்து ரெண்டு வருஷமா தொடர்ந்து வயித்துவலியில துடிச்சிட்டிருந்தேன். சரியாவே சாப்பிட முடியாது. நாட்டு மருந்து, அலோபதினு பல வைத்தியம் பாத்தும் வலி நிக்கவே இல்ல.

அப்போதான் லோடு ஏத்திட்டு திருச்சி போயிட்டு வந்த என் கணவர், திருவாசி கோயில் பத்தி கேள்விப்பட்டதைச் சொன்னாரு. அடுத்த வாரமே இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக்கிட்டேன். வாரம் தவறாம இந்தக் கோயிலுக்கு வந்து சாமி கும்பிடறதையும் வழக்கமாக்கிட்டேன். ஆறே மாசத்துல வயித்துவலி பறந்து போயிடுச்சு. அதுமட்டுமில்லீங்க... இன்னிவரைக்கும், நோய் நொடியில்லாம என்னை காப்பாத்திட்டு வர்றதும் இந்த மாற்றுரைவரதீஸ்வரர் சாமிதான்!'' என்று நெகிழ்ந்துருகினார் தமிழ்ச்செல்வி.

சரி... இங்குள்ள சிவனுக்கு மாற்றுரைவரதீஸ்வரர் என்ற பெயர் வந்ததற்கான சுவாரஸ்ய காரணத்தைப் பார்ப்போமா..?!

திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்ட சுந்தரர், சிவனாரின் இனிய தோழர் என்பதால், எங்கு சென்றாலும் உரிமையுடன் பொன் கேட்பது வழக்கம். ஒருமுறை திருவாசியில் உறைந்திருக்கும் இறைவனிடமும் பொன் வேண்டினார். நீண்ட நேரமாக தன் வேண்டுதலுக்குச் செவி சாய்க்காத இறைவனைப் பார்த்து, 'இங்கு சிவன் இருக்கிறாரா இல்லையா...' என்று பதிகத்தில் பாடினார்! பிறகு, நண்பனின் கை நிறைய சிவபெருமான் அள்ளி தந்தது பொன்னை அல்ல... மண்ணாங்கட்டியை!

கோபமடைந்த சுந்தரர், 'நடையாக நடந்து, உன்னை தரிசித்து, போற்றிப் பாடி, பொன்னைக் கேட்டால்... நீ மண்ணையா தருகிறாய்?' என்று கோபப்பட்டார். உடனே, அங்கு வந்த இரண்டு அடியவர்களில் ஒருவர், மண்ணை வாங்கி உரசிக் காட்ட... அது தகதகவென பொன்னாக மின்னியது. ஆம்... அந்த அடியவராக வந்தவர்... சாட்சாத் சிவபெருமான்தான்! மற்றொருவர் மகாவிஷ்ணு. இதனால்தான், இங்கு குடிகொண்டிருக்கும் இறைவனுக்கு மாற்றுரைத்த வரதீஸ்வரர் என்று பெயர் வந்தது. இதுவே, பின்னர் மாற்றுரைவரதீஸ்வரர் என்று மருவியது என்கின்றனர்.

மண்ணையே பொன்னாக்கிய இந்த சிவபெருமான்தான், நோய் தாக்கிய உடலையும் தன் பக்தர்களுக்கு ஆரோக்கியமாக்கித் தருகிறார்.

நோய் நொடியில்லாத நிம்மதியான வாழ்வை தரும் மாற்றுரைவரதீஸ்வரரின் மகிமையை நினைத்து மெய்சிலிர்த்தபடியே புறப்பட்டோம்!

வி.ராம்ஜி, படங்கள் என்.ஜி.மணிகண்டன், மு.நியாஸ் அகமது

எப்படிச் செல்வது?

திருச்சி குணசீலம் சாலையில் சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது திருவாசி. மெயின் சாலையிலிருந்து உள்ளே சுமார் ஒரு கி.மீ. தூரம் சென்றால் ஊரும், ஊரையே கட்டிக் காக்கிற பிரம்மாண்ட ஆலயமும் வந்து விடும்! சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிறுகாம்பூர், ஆமூர், அய்யம்பாளையம் முதலான ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளும் திருவாசி வழியாகவே செல்கின்றன. கோயில் தொடர்புக்கு மோகன் குருக்கள் 0431 2908109, 98656 64870

வழிபடும் முறை

நோய் தீர பிரார்த்திப்பவர்கள், வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளி என்றில்லாமல் எந்தக் கிழமையிலும் வந்து வணங்கி வழிபடலாம். சிலர் தொடர்ந்து 9 வாரம் அல்லது 11 வாரம் என வேண்டிக் கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் சில பக்தர்கள் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்கின்றனர். இன்னும் சிலர் மாவிளக்கும் ஏற்றி வைத்து வேண்டுதலை நிறை வேற்றுகின்றனர்.