சமீபத்தில் நான் ரயிலில் சென்றபோது, எதிரில் ஓர் இளைஞன் அமர்ந்திருந்தான். அவன் வெள்ளரிக்காயைச் சாப்பிட்டுவிட்டு அது சுற்றியிருந்த காகிதத்தை ஓடும் ரயிலில் ஜன்னல் வழியாக வீச, அதிலிருந்த மிளகாய்த்தூள் எதிர்காற்றில் பறந்து வந்து அவன் எதிரில் அமர்ந்திருந்த வயதானவரின் கண்ணில் பட்டுவிட்டது. அவர் எரிச்சலில் அவஸ்தைப்பட, உடனே அவர் மனைவி பதறி, தன்னிடமிருந்த தண்ணீரை எடுத்து, அவர் கண்களை கழுவிவிட்டார். நல்லவேளையாக சிறிது நேரத்தில் சரியாகிவிட்டது. இருந்தாலும், அந்த வயோதிகர் என்ன வேதனைப்பட்டிருப்பார்? கொடுமை என்னவென்றால், நடந்ததற்காக அந்த இளைஞன் ஒரு 'ஸாரி'கூட கேட்கவில்லை. நடந்தது எதையும் கவனிக்காதது போல செல்லில் யாருடனோ பேசிக்கொண்டே வந்தான்... பண்பற்றவன்.
ரயில் பயணங்களில் சாப்பிட்ட பொருட்களின் மிச்சம், தண்ணீர் பாட்டில்களை வெளியே போடுவது, கை கழுவுவது, எச்சில் துப்புவது போன்றவை சக பயணிகளை எந்தளவுக்கு சங்கடத்தில் ஆழ்த்தும் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் அறிய வேண்டும். கம்பார்ட்மென்ட் பாத்ரூம், வாஷ் பேஸினில் சென்று கைகழுவுவது, 'வேஸ்ட்' பொருட்களை ரயில் நிறுத்தத்தில் நிற்கும் போது வெளியே போடுவது என அவர்கள் கொஞ்சம் நாகரிகம் பழகுவார்களாக!
- கௌரி ராமச்சந்திரன்,சென்னை-40
இதல்லவோ வளர்ப்பு!
|