என் மகனின் ஸ்கூல் டைரியில், 'நடக்கவிருக்கும் மாறுவேடப் போட்டிக்கு விருப்பமுள்ள மாணவர்களின் பெயர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து கொடுக்கலாம்' என்று எழுதியிருந்தனர். என்னால் பள்ளிக்குச் செல்ல இயலாததால், "அம்மா கலந்துக்க சொன்னாங்கனு மிஸ்கிட்ட சொல்லுடா. பழனியாண்டி வேஷம் ஓ.கே-யானு கேட்டுட்டு வா" என்று கூறி அனுப்பினேன். மாலையில் வீடு திரும்பிய என் பையன் துள்ளிக் குதித்து ஓடி வந்து, "அம்மா... இதை எங்க மிஸ் உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாங்க" என்று ஒரு பேப்பரை நீட்டினான். பிரித்துப் படித்தால், 'ப்ரணவ் அம்மா அவர்களுக்கு, மாறுவேடப் போட்டி குழந்தைகளுக்குத்தான். பெற்றோருக்கு அல்ல!' என்று எழுதியிருந்தனர். புரியாமல் நான் அவனிடம், "மிஸ்கிட்ட என்னடா சொன்ன?" என்று கேட்க, "எங்கம்மா போட்டியில கலந்துக்கறாங்களாம்... ஆண்டி வேஷம் போட்டுக்கப்போறாங்களாம்னு சொன்னேன்" என்று மழலையில் அவன் ஒப்பிக்க, "அடப்பாவி!" என்று என்னை வைத்து காமெடி பண்ணிய என் மகனை அள்ளிக் கொஞ்சிக் கொண்டேன்!
- விஜி விஜயசங்கர், சென்னை-59
"மூக்கு ஒழுகாட்டி ஐஸ்க்ரீம்!"
|