தேவையான பொருட்கள் சிவப்பு மற்றும் நீல நிற சார்ட் பேப்பர், கட்டர், மஞ்சள் நிற கண்ணாடி பேப்பர். ஃபெவிகால்.
செய்முறை நீள்செவ்வக வடிவ நீல நிற சார்ட் பேப்பரில் நான்கு சம அறைகளை வரைந்து கொள்ளுங்கள் (படம்1). அவற்றை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள் (படம்2).
அடுத்து, வெட்டப்பட்ட அறை பகுதி நான்கிலும் சிவப்பு நிற சார்ட் பேப்பரை பொருத்தவேண்டும். ஏற்கெனவே அறைகளுக்காக வெட்டப்பட்டதைவிட நீள, அகலத்தில் 1 செ.மீ அதிகமாக இருப்பது போல் சிவப்பு நிற பேப்பர்களை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள் (படங்கள் 3,4).
கொடுத்துள்ள டிசைனை சிவப்பு சார்ட் துண்டுகளின் மீது கார்பன் வைத்து வரைந்து கொள்ளுங்கள் (படம் 5). கட்டர் பயன்படுத்தி பெரிய க்ஷி சிறிய ஸ் என்று மாறி மாறி முழுவதும் வெட்டிவிடுங்கள் (படம்6).
கோபுரம் போன்ற பகுதியிலிருந்து மடித்துக்கொண்டே வரவேண்டும். முதல் பெரிய ‘க்ஷி’ துண்டை எடுத்து (படம்7), இரண்டாம் சிறிய ‘ஸ்’ துண்டின் மேல் மடக்கி அழுத்திவிட வேண்டும் (படம்8). மற்ற துண்டுகளை (படம்7&ல் உள்ளது போல்) ஸ்கேல் உதவியால் தூக்கி விடுங்கள் (படம்9). அதேபோல் மூன்றாவது பெரிய துண்டை நான்காவது சிறிய துண்டின் மீது அழுத்தி விடுங்கள்.
|