இப்போது அந்தப் போட்டோவைப் பார்த்தா-லும்... 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே' என்று மனம் பாட ஆரம்பித்துவிடும்.
என் பிள்ளையும், பெண்ணும் 'என்னம்மா ‘பிளாக் அண்ட் ஒயிட்டுக்கு போயிட்டியா... இன்னிக்கு எங்களுக்கு ‘பூவா’ உண்டா... இல்லை ஹோட்டலா?'னு கேலி செய்வது தொடர்கதையாகிவிட்டது!
- சியாமளா சுவாமிநாதன், திருவனந்தபுரம் 695008.
கொலம்பஸ்... கொலம்பஸ்... எடுத்தாச்சு போட்டோ!
நம்ம ஊரில் எம்.ஜி.ஆர்., அண்ணா, கருணாநிதி, ரஜினி என்று கட்-அவுட்களின் அருகில் நின்று போட்டோ எடுத்துக் கொள்வதைப் பார்த்தால்... 'இதெல்லாம் நம்ம நாட்டுலதான் நடக்கும்' என்று அலுத்துக் கொள்ளும் ஆளா நீங்கள்? அமெரிக்காவிலும்கூட இதெல்லாம் உண்டு என்பது தெரியுமோ?! ஒருமுறை அங்கு சென்றிருந்தபோது வெள்ளை மாளிகை அருகே புஷ் மற்றும் கிளின்டன் இருவரின் கட்- அவுட்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ள பலரும் முட்டி மோதியதைப் பார்த்தோம்.
|