Published:Updated:

ப்ளஸ் டூ-வுக்கு பிறகு...

ப்ளஸ் டூ-வுக்கு பிறகு...

ப்ளஸ் டூ-வுக்கு பிறகு...

ப்ளஸ் டூ-வுக்கு பிறகு...

Published:Updated:

வெற்றிக்கு பாஸ்வேர்ட்!
ப்ளஸ் டூ-வுக்கு பிறகு...
ப்ளஸ் டூ-வுக்கு பிறகு...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ப்ளஸ் டூ-வுக்கு பிறகு...

"இந்தியாவில், தரமான, வேலை வாய்ப் புக்கு நூறு சதவிகிதம் உத்திரவாதமளிக்கும் பொறியியல் படிப்புக்கான முக்கியமான இரண்டு கல்வி நிறுவனங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?"

- இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால்... கிட்டத்தட்ட தொண்ணூற்றி ஒன்பது சதவிகித மாணவர்களுக்குப் பதில் தெரியவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்!

சரி, அதைப் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்!

ப்ளஸ் டூ-வுக்கு பிறகு...

காஞ்சிபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி டிசைன் அண்ட் மேனுஃபேக்சரிங் (Indian Institute of Information Technology Design and Manufacturing - IITDM) மற்றும் ஜபல்பூர்- பண்டிட் துவாரகா பிரசாத் மிஸ்ரா இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னா லஜி டிசைன் அண்ட் மேனுஃபேக்சரிங் ஆகிய இரண்டு கல்வி நிலையங்கள்தான் அவை. இங்கு கற்றுத்தரப்படும் ஆட்டோமொபைல் துறை சம்பந்தமான ‘டிசைன் அண்ட் மேனுஃபேக்சரிங்’ படிப்பு, வேறெந்த கல்வி நிறுவனங்களையும்விட சிறப்பாக, ஆழமாக, பிராக்டிகல் அனாலிஸிசுடன் கற்றுத் தரப்படுவதுதான் தனிச்சிறப்பு! இவை மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டவை. அதிலும், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அந்தக் கல்லூரி, தமிழக மாணவர்களுக்கான நம்பிக்கை!

இப்போது ஃபோர்டு, ஹ¨ண்டாய், கேட்டர்பில்லர் போன்ற வாகன தயாரிப்பு நிறுவனங்கள், சென்னையிலும் அதன் சுற்றுப் புறத்திலும் பெருகிவரும் காரணத்தாலும், சம்பந்தப்பட்ட இந்தத் துறைக்கான நிபுணர்களை உருவாக்கித் தரும் நோக்கத் துடனும் காஞ்சிபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டது இந்தப் படிப்பு. தற்போது சென்னை, ஐ.ஐ.டி. வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்தக் கல்லூரி, கூடிய விரைவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் காஞ்சிபுரம் வளாகத்துக்கு மாற்றப்படவிருக்கிறது.

பொதுவாக, வாகனங்கள் சம்பந்தமான பொறியியல் படிப்புகளை பொறுத்தவரை ‘உற்பத்தி’ பற்றிய பாடங்கள்தான் அதிக முக்கியத்துவம் பெறுமே தவிர, ஒரு மாணவனை நிறுவனத்தின் பொறுப்புகளுக்கு தயார்படுத்தும் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய விஷயங்கள் சிலபஸில் இடம் பெறுவதில்லை. ஆனால், இந்த ‘டிசைன் அண்ட் மேனுஃபேக்சரிங்’ படிப்பில், தயாரிப்பில் தொடங்கி, அதன் மூலப்பொருட்கள், உதிரிபாகங்கள் உருவாக்கம், இறுதி வடிவம், விலை நிர்ணயத்துக்கான தகுதிகள் என்று அனைத்துப் பிரிவுகளும் மாணவர்களுக்கு உள்ளூட்டப்படுகிறது.

நான்கு வருடப் படிப்பான இது, பி.டெக்., மெக்கானிக்கல் (டிசைன் அண்ட் மேனுஃபேக்சரிங்), பி.டெக்., எலெக்ட்ரானிக்ஸ் (டிசைன் அண்ட் மேனுஃபேக்சரிங்) மற்றும் பி.டெக் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் முதலிய பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. இப்போது ஐ.ஐ.டி. வளாகத்தில் செயல்படும் இந்தக் கல்லூரியின் மேற்கண்ட படிப்புகளுக்கு வகுப்பெடுப்பவர்கள், அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். மொத்தத்தில், பிராக்டிகல் கூறுகள் அதிகம் இடம் பெறும் பொறியியல் படிப்புடன் கணினி மற்றும் மேலாண்மை திறமைகளை ஒருங்கே அளிக்கும் இந்தப் படிப்பு, இக்கல்வி நிறுவனத்துக்கு உரிய தனிச் சிறப்பு! கூடவே, இதன் மேற்படிப்பான பி.ஜி. மற்றும் பி.ஹெச்டி. படிப்புகளும் இங்கே கற்றுத் தரப்படுகின்றன. இந்தக் கல்லூரி பற்றிய மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள, new.iiitdm.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

ப்ளஸ் டூ-வுக்கு பிறகு...

நிகர்நிலை பல்கலைக்கழகமான இந்தக் கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கு, ப்ளஸ் டூ-வில் ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, மேத்ஸ் பாடங் களை படித்திருக்க வேண்டியது அவசியம். மத்திய அரசால் நடத்தப் படும், ‘ஆல் இந்தியா இன்ஜினீயரிங் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்’ (AIEEE - All India Engginering Entrance Examination) என்கிற நுழைவுத் தேர்வுதான், இந்தக் கல்லூரிக்கான நுழைவு வாசலும். ஏப்ரல் மாதம் இந்த நுழைவுத் தேர்வு நடைபெறும்.

இந்தப் படிப்பு, கணினி, மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் ஆகிய மூன்று துறைகளைப் பற்றிய அறிவையும் வழங்குவதால், இந்த மூன்று துறைகளிலேயும் வேலை வாய்ப்புக் காத்திருக்கிறது. அரசு தொடர்பான அத்தனை தொழிற்சாலைகளிலும் இந்தப் படிப்பை முடித்தவர்களுக்குத்தான் முன்னுரிமை! இதுதவிர, பிரபல தனியார் ஆட்டோமொபைல் நிறுவனங்களான ஃபோர்டு, கேட்டர்பில்லர் போன்ற கம்பெனிகளும் இந்தப் பல்கலைக்கழகத்தின் ‘அவுட் கோயிங்’ மாணவர்களுடைய வரவை வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கின்றன!

டிரைவ் அப்!
- மீண்டும் சந்திப்போம்...

ப்ளஸ் டூ-வுக்கு பிறகு...
-
   
   
ப்ளஸ் டூ-வுக்கு பிறகு...
ப்ளஸ் டூ-வுக்கு பிறகு...