Published:Updated:

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா ?

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா ?

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா ?

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா ?

Published:Updated:

"எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?"
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா ?
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா ?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'நீங்க வந்தா, நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம்! வருவீங்களா?'

ரொம்ப சிம்ப்பிளா... ஆனா, சின் சியரா நம்மள லெட்டர் எழுதிக் கூப்பிட்டாங்க, ராமநாதபுரம், செய்யது அம்மாள் இன்ஜினீயரிங் காலேஜ் பொண்ணுங்க. 'சிக்கு புக்கு சிக்கு புக்கு...'னு போயி இறங்கிட்டோம் ராமநாதபுரம்!

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா ?

வாசல்ல உப்புக் கல்லை வச்சே சூப்பரா ஒரு ரங்கோலி போட்டிருந்தாங்க பாருங்க... 'உப்பிட்டவரை உள்ள ளவும் நினை'னு சொல்லாம சொல்லிட் டாங்கப்பா. ஆடிட்டோரியத்துக் குள்ள போனவொடனே போட் டாங்கய்யா ஒரு சிச்சுவேஷன் சாங்...

'இதுதானா... இதுதானா...எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?'

பொண்ணுங்க அன்புல நாம அப்படியே ஃப்ரீஸ் ஆகிட்டோம்ல?!

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா ?

''எங்க காலேஜ்ல இதுவரைக்கும் 'ஆன்வல் டே'தான் நடந்திருக்கு. 'அவள் விகடன்'ல இருந்து 'கல்சுரல்ஸ்' நடத்த வர்றாங்கனு சொன்னதுல இருந்து எங்க பொண்ணுங்கள்லாம் ஏக குஷியா காத்திட்டு இருக்காங்க''னு சந்தோஷமா வரவேற்புரை கொடுத்தாங்க கரஸ்பாண்டன்ட் சின்னத்துரை அப்துல்லா.

சீஃப் கெஸ்டா வந்திருந்த டாக்டர் மதுரம் மேடம், 'அவள் விகடனை' அட்டை டு அட்டை படிக்கற தீவிர வாசகியாம். பிரசுரமான பல விஷயங்களை அவங்க பாயின்ட் அவுட் பண்ணி பேச... சரியான க்ளாப்ஸ்!

'ஊர் பக்க காலேஜா இருக்கே... நம்ம பாசக்காரப் பயபுள்ளைகளோட பெர்ஃபாமன்ஸ் எப்படி இருக்குமோ தெரியலையே..?'னு ஒரு சின்ன ஜெர்க்கோட உட்கார்ந்திருந்தோம். ஆனா, முதல் போட்டியான பாட்டுப் போட்டியிலயே 'சிட்டி எல்லாம் டூப்பு... நாங்கதான் டாப்பு!'னு சொல்லி அடிச்சுட்டாங்கப்பா! அதுவும் 'ஒன்றா ரெண்டா ஆசைகள்...' பாட்டைப் பாடின அந்த ஸ்டூடன்ட்ஜி, சூப்பர்ப் ஜி! ஜட்ஜஸ் எல்லாம் ரூம் போட்டு யோசிக்கற அளவுக்கு எல்லாருமே திறமையக் கூவிட்டாங்கள்ல!

நடுவர்கள்
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா ?

அடுத்து, சோலோ டான்ஸ்! 'அட்றா அட்றா நாக்கு மூக்க'ல தொடங்கி, 'அலேக்ரா' வரைக்கும் ஆடாத ஆட்டமெல்லாம் பொண்ணுங்க ஆடித் தீர்க்க, நமக்கும் காலேஜ் லைஃப்க்கே திரும்பிப் போயிடலாம் போல ஒரே ஃபீலிங்ஸ். 'நோ நோ... அழப்புடாது'னு நாம கண்ணைத் தொடச்சுட்டே திரும்பிப் பார்த்தா, அதே ஏக்கத்தோட உட்கார்ந்திருந்தாங்க ரெண்டு யங் லெக்சரர்ஸ்!

நமக்குத்தான் யாரு மனசு 'ஃபீலிங்ஸ்' விட்டாலும் தாங்காதே... அவங்களை கொஞ்சம் ஹேப்பியாக்கலாமேனு யோசிச்சு, 'உங்க லெக்சரர்ஸ்க்கும் ஆட ஆசையாம்... கூப்பிடுங்க?'னு கண்ணைக் காமிச்சு பொண்ணுங்களை ஏவி விட்டோம். வொர்க் அவுட் ஆயிடுச்சுல?! 'மதுரைக்கு போகாதடி... அந்த மல்லிப்பூ கண்ணு வைக்கும்'னு மொத பாட்டே ரணகளமா போட்டாலும், ம்ம்ஹ§ம்ம்ம்ம்ம்ம்... அசரலையே அந்த லெக்சரர்ஸ்! ச்ச்சும்மா வெளுத்துக் கட்டிட்டாங்க. தொடர்ந்து, 'எங்க மேம் ஆடணும்', 'எங்க மேம் ஆடணும்'னு எல்லா டிபார்ட்மென்ட் பொண்ணுங்களும் நேயர் விருப்பம் வைக்க, அந்த ஆடிட்டோரிய வரலாற்றில் முதல் முறையாக, எல்லா லெக்சரர்ஸ§ம் குஷியாகி சேர்ந்து ஆடி அசத்திப்புட்டாங்க!

ஓவர் சந்தோஷத்துல, 'ஆட்ஸ் ஆப்ட்' போட்டிக்கு நாம 'சின்னக் கவுண்டர் சோப்', 'கந்தசாமி விளக்குமாறு'னு எக்குத்தப்பா ரவுசு டாப்பிக் கொடுத்தாலும், பசங்க அசரல (வாட் எ ஷேம்... வாட் எ ஷேம்!)... பின்னிட்டாங்க!

நெக்ஸ்ட்... க்ரூப் டான்ஸ்! ஆத்தாடி... சாமியாட்டம் இல்லீங்க... பேயாட்டம் ஆடிட்டாங்க (உங்களை எல்லாம் 'ஜகன்மோகினி' படத்துக்கு ரெஃபர் பண்ணியிருக்கணும். மிஸ் பண்ணிட் டோம்)!

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா ?
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா ?

ஒருவழியா, 'வெரைட்டி என்ட்டர்டெயின்மென்ட்'டோட நிகழ்ச்சி நிறைவுக்கு வர, ''காலேஜ்ல சேர்ந்துட்டு இவ்வளவு சந்தோஷமா, சுதந்திரமா இன்னிக்குதான் நாங்க என்ஜாய் பண்ணியிருக்கோம். 'அவள் விகடனு'க்குதான் அத்தனை தேங்க்ஸ§ம்!''னு நம்மள சுத்தி நின்னுக்கிட்டு அத்தனை புள்ளைகளும் ஒரே பாசமழை. அவங்களை எல்லாம் கூல் பண்ணி, முருகேசன் சார் (ராமநாதபுரம் டி.எஸ்.பி) கையால பிரைஸ் கொடுத்து இன்னும் மனச குளிர வச்சு, 'பை பை' சொல்லிட்டு வந்தோம்!

கேம்பஸ் டீம்
படங்கள் உ.பாண்டி

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா ?
 
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா ?
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா ?