Published:Updated:

ஒன்றைரை லட்சம் புள்ளியில் ஒரு கோலம்....!

ஒன்றைரை லட்சம் புள்ளியில் ஒரு கோலம்....!

ஒன்றைரை லட்சம் புள்ளியில் ஒரு கோலம்....!

ஒன்றைரை லட்சம் புள்ளியில் ஒரு கோலம்....!

Published:Updated:

ஒன்றரை லட்சம் புள்ளியில் ஒரு கோலம்...!
ஒன்றைரை லட்சம் புள்ளியில் ஒரு கோலம்....!
ஒன்றைரை லட்சம் புள்ளியில் ஒரு கோலம்....!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காலேஜ் ஸ்டார்!

"வாழ்க்கையே ஒரு சிக்கு கோலம் மாதிரிதான். ஆனா, கோலம்தான் என் வாழ்க்கையில சாதனை படைக்க உதவியிருக்கு..."

ஒன்றைரை லட்சம் புள்ளியில் ஒரு கோலம்....!

- புரிஞ்சிருக்குமே தேன்மொழியோட சாதனை என்னனு?! யெஸ்... கோலம்தான்!

கும்பகோணம், அரசு ஓவியக் கல்லூரியில இரண்டாமாண்டு வண்ணக்கலை படிக்கிற இந்த அம்மணி, கோலத்துல மட்டுமில்ல... ஓவியம், ஜெ.ஆர்.சி, ஸ்போர்ட்ஸ், படிப்புனு எல்லாத்துலயும் ஆயிரம் வாட்ஸ் பல்பு மாதிரி அசத்துறாங்க. இன்னொரு சுவாரஸ்யமான பிட் நியூஸ்... இவங்க 'புதுப்பட்டி பையன்... திருச்சி பொண்ணு’ங்கற குறும்படத்துல ஹீரோயினா வேற நடிச்சிருக்காங்களாம்!

நாலு புள்ளி வச்சு கம்பி இழுக்கவே திணறுவோம் நாம. ஆனா, தேன்மொழி ரீசன்ட்டா லட்சத்தி அம்பத்தி நாலாயிரத்தி நானூத்தி இருபத்தி ஆறு புள்ளி (ஸ்ஸ்ஸப்பா!) வச்சு ஒரு கோலம் போட்டிருக்காங்க. ஒரு சார்ட் பேப்பருக்கு பதினைஞ்சாயிரம் புள்ளினு பத்து சார்ட் பேப்பர்களை இணைச்சு, இருபத்தி அஞ்சு நாள் உழைச்சு, இந்தக் கோலத்தை வரைஞ்சிருக்காங்க.

'வாழ்த்துகள்’ சொன்னா, "இது டிரைலர்தான்பா(!). இன்னும் அதிக புள்ளிகள் கொண்ட கோலம் போடற கின்னஸ் சாதனைக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கேன்"னு சொல்றாங்க!

'அவள் விகடன்' நடத்தின 'கோலாகோலம்’ல ஆரம்பிச்சு, சேனல்கள், எஃப்.எம்-கள்னு பல கோலப்போட்டியில பரிசுகளை வாங்கி குவிச்சிருக்க தேன்மொழி, மாடர்ன் ஆர்ட், ஆயில், வாட்டர் பெயின்ட்டிங்னு எல்லா வெரைட்டிலயும் கலக்கி மாநில அளவுல பல பரிசுகள் வாங்கியிருக்காங்க. இவங்களோட ஹைலைட், கோலத்தைப் பத்தி எழுதியிருக்கற புத்தகம்தான். அதை வெளியிடறதுக்கான வேலைகள்லயும் தேன்மொழி பரபர!

"ஸ்போர்ட்ஸ்லதான் எனக்கு ஆர்வம். ஆனா, ஹார்ட் பிரச்னைக்காக ஆபரேஷன் பண்ணிக்கிட்டதால 'ஸ்போர்ட்ஸ் வேண்டாம்’னு டாக்டர் முற்றுப் புள்ளி வச்சுட்டாங்க. அதையே தொடக்கப் புள்ளியா வச்சு, கோலத்துல ஆர்வத்தை திருப்பினேன், சாதிச்சேன்!"னு தன்னம்பிக்கையோட பேசற தேன்மொழி,

"இப்போ இருக்கற ஜெனரேஷன் கண்டிப்பா கோலம் போடக் கத்துக்கணும். கலாசார காரணத்துக்காக மட்டும் சொல்லல. கோலம் ஒரு அருமையான பிரெய்ன் கேம். தினமும் அதிகாலையில அஞ்சு நிமிஷம் குனிஞ்சு கோலம் போட்டா, நம்ம உடம்பு, மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்குங்கற அக்கறையிலயும்தான் சொல்றேன்!"னு கூப்பிடறாங்க!

வாங்க கோலம் பழகலாம்!

- அ.சரண்யா
படம் எம்.ராமசாமி

ஒன்றைரை லட்சம் புள்ளியில் ஒரு கோலம்....!
 
ஒன்றைரை லட்சம் புள்ளியில் ஒரு கோலம்....!
ஒன்றைரை லட்சம் புள்ளியில் ஒரு கோலம்....!