Published:Updated:

ஃபீலிங்...ஹீலிங்...!

ஃபீலிங்...ஹீலிங்...!

ஃபீலிங்...ஹீலிங்...!

ஃபீலிங்...ஹீலிங்...!

Published:Updated:

ஃபீலிங்...ஹீலிங்...!
ஃபீலிங்...ஹீலிங்...!
ஃபீலிங்...ஹீலிங்...!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சி.ஆர்.எஸ்.

வில்லங்கத்தை விலைக்கு வாங்கிய 'வெகுளி'த்தனம்!

ஃபீலிங்...ஹீலிங்...!

உடல், மனம், மூளை... இவை மூன்றும் சேர்ந்து வளரும்போதுதான், ஒரு மனிதன், முழுமனிதன் ஆகிறான்.

உடல் வளர்ச்சி, தன்போக்கில் நடந்து கொண்டே இருக்க, மூளை வளர்ச்சி தேங்கும் நிலையை 'மென்ட்டல் டிஸார்டர்' என்கிறது மருத்துவ உலகம். அதேசமயம், உடலும் மூளையும் கைகோத்து சரசரவென வளர்ந்து, மனம் மட்டும் குழந்தையாகவே இருப்பவர்களை 'வெகுளி' என்று இந்தச் சமுதாயம் கௌரவப் பெயரிட்டு அழைக்கிறது! உண்மையில், மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டவர்களைவிட, இந்த 'வெகுளி'களைத்தான் அதிக அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும்!

பெண் குழந்தைகளுக்கு வளர வளர, அந்தந்த வயதுக்குரிய விஷயங்களை அவர்களுக்குச் சொல்லித் தராமல், 'அவ வெகுளி' என்று நாம் வாசிக்கும் பாராட்டுப் பத்திரம், இந்த உலகத்துக்கும் அவளுக்கும் இடையே ஒரு இரும்புத் திரையை விரித்துவிடும் என்பதுதான் உண்மை! 'குழந்தையும் தெய்வமும் ஒன்று' என்பார்கள். அதற்காக, ஒரு பெண்ணை, காலம் முழுக்க குழந்தையாகவே வைத்து வளர்க்காமல், 'வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும்' என்பதைச் சொல்லி வளர்க்க வேண்டிய யுகம் இது!

பொதுவாக, வெகுளிகளில் பல வகை. ''அத்தை... தீபாவளிக்கு அப்பா உங்களுக்கு எடுத்த சேலை பிடிக்கலைனு சொல்லிட்டீங்களாமே..! எங்கம்மா உங்களைத் திட்டி தீர்த்துக்கிட்டிருக்காங்க" என்று தேவையில்லாததைப் பேசுவது (உளறுவது) ஒருவகை.

''ஏன் ரேகாவைப் பார்த்து அசைன்மென்ட்டை காப்பி அடிச்சிருக்க?" என்று மேம் கேட்கும்போது, Ôகாப்பி அடித்தது நானல்ல, ரேகாதான்' என்ற உண்மையை மேமிடம் சொல்லாமல் 'தேமே' என்று விழித்து, பேச வேண்டியதைப் பேசாமல் விடுவது மற்றொரு வகை!

எங்கே மறைத்துப் பேச வேண்டுமோ, அங்கே பதுங்கியும், எங்கே வெளிப்படையாக பேச வேண்டுமோ, அங்கே தைரியமாகவும் பேச வேண்டும். ''ஐயோ... அவளுக்கு நான் ஊட்டி விட்டாத்தான் மிச்சம் வைக்காம சாப்பிடுவா" என்று பருவ வயதுவரை இப்படி 'ஸ்பூன் ஃபீட்' செய்யும் பெண்களுக்கு, அந்தப் பேச்சு சூட்சமமெல்லாம் தெரியாமலே போகிறது... ஷீலாவைப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) போல! 'இப்படியும் ஒரு பெண்ணா?!' என்ற ஆச்சர்யத்தை அல்ல, அதிர்ச்சியை ஏற்படுத்தினாள் ஷீலா, என்னைச் சந்தித்தபோது.

கோயம்புத்தூரின் ஒரு வசதியான மில் குடும்பத்துப் பெண் ஷீலா. அவள் பிறந்தபின்தான் அப்பாவுக்கு தொழிலில் அதிர்ஷ்டம் கொட்டியிருக்கிறது. எனவே, மகளுக்கு வீட்டில் ஓவர் செல்லம்.

''ஐயோ... தனியாவெல்லாம் அவளுக்கு எங்கயும் வெளிய போகத் தெரியாது", ''ஃப்ரெண்ட்ஸோட ஊர் சுத்தினா வீணாப்போயிடுவா", ''சொந்தக்காரங்க வீட்டுக்கு போனா கண்ணு பட்டுடும்", ''வீட்டுக்கு வந்திருக்கவங்களை 'வாங்க'னுகூட அவளுக்கு சொல்லத் தெரியாது. இன்னும் பழகல" என்றெல்லாம் வயதுக்கான பக்குவத்தை பெற்றோர் அறிமுகப்படுத்தவே இல்லை... அவளே பழகிக்கொள்வதற்கான வாய்ப்பையும் அவர்கள் அளிக்கவில்லை. இருபது வயதில் வளர்ந்த குழந்தையாக இருந்த அவளை, கல்லூரிப் படிப்புக்காக சென்னையில் ஒரு பிரபல கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள்! அங்கே, அவளுடைய வெகுளித்தனத்தோடு விளையாடியது விதி... நந்தினியின்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ரூபத்தில்!

ஆம்... விடுதியில் அவளுடன் தங்கியிருந்த நந்தினி, ஷீலாவின் குழந்தைத்தனத்துக்கு குரூரப் பரிசு தந்திருக்கிறாள்!

''ஃப்ரெண்ட்ஸ்னா திங்க்ஸ் ஷேர் பண்ணிக்கணும்" என்று தன் மெட்டல் கம்மலை கழட்டித் தந்தவளுக்கு, பதிலாக தன் தங்க கம்மலைக் கொடுத்திருக்கிறாள் ஷீலா. தொடர்ந்து, ஷீலாவின் செல்போனிலிருந்து தன் சிவகாசி சித்தப்பா முதல் சிங்கப்பூர் அத்தை வரை பேசி, பில்லை எக்குத்தப்பாக ஏற்றியிருக்கிறாள் நந்தினி. ஷீலாவின் காட்டன் சுடிதார்கள் எல்லாம் மடிப்புக்கலையாமல் எடுத்து உடுத்தியிருக்கிறாள். இன்னும், ஷீலாவின் செப்பல் முதல் க்ளிப் வரை எல்லாமே நந்தினியுடையது ஆகிவிட்டது. அவளுடைய அசைன்மென்ட்டுகளையும் ஷீலாவே எழுத வேண்டியதாயிற்று!

இத்தனைக்குப் பிறகும், நந்தினிக்கு ஷீலாவை தோழியாக கொள்வதற்குப் பிடிக்கவில்லை! அவளுடைய தோழிக் கூட்டம் வேறு! ஷீலா... அவளின் சுயநல விளையாட்டுக்குக் கிடைத்த ஓர் பொம்மை... அவ்வளவுதான்! பரிதாபம் என்னவென்றால், 'ஏண்டி?' என்று எந்த சந்தர்ப்பத்திலும் நந்தினியின் ஆட்டங்களை கேள்வி கேட்காது, 'தேமே' என்றே நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தாள் ஷீலா!

எல்லாவற்றுக்கும் உச்சமாக நடந்தது அந்தச் சம்பவம்! விடுமுறைக்கு நந்தினியை தன் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறாள் ஷீலா. தனக்கு நிச்சயத்திருந்த முறைப்பையனை அவளுக்கு அறிமுகப்படுத்த, 'ஃப்ரெண்டோட ஃப்ரெண்ட் எனக்கும் ஃப்ரெண்ட்' என்றிருந்தது போக, 'ஃப்ரெண்டோட லவ்வர் எனக்கும் லவ்வர்' என்று மாற்றிவிட்டாள் நந்தினி. ஆம்... ஷீலாவின் வெகுளித்தனத்தை பயன்படுத்தி அவள் வாழ்க்கையையே வாங்கிக்கொண்டாள் நந்தினி!

''வெகுளியாவே இருந்துட்டேன் டாக்டர்" என்று முதல்முறையாக தன் இயல்புக்காக வருந்தி ஷீலா என்னிடம் வெடித்தழுதாள். ''நல்லவளாக இரு. ஆனா, நம்ம இயல்பை மத்தவங்க தங்களுக்குச் சாதகமா பயன்படுத்திக்கற இந்த 'வெகுளி'ப்பட்டம் இனி உனக்கு வேண்டாம்!" என்று ஆரம்பமானது என் கவுன்சிலிங்!

சரி... இந்த வெகுளித்தனத்தால் ஏமாறுவது அவர்களின் குற்றமா... இல்லையா..?

- ஃபீல் பண்ணுவோம்...

ஃபீலிங்...ஹீலிங்...!
 
ஃபீலிங்...ஹீலிங்...!
ஃபீலிங்...ஹீலிங்...!