Published:Updated:

படிப்பது கம்ப்யூட்டர் சயின்ஸ்.... மாத வருமானம் 5,000 ரூபாய்

படிப்பது கம்ப்யூட்டர் சயின்ஸ்.... மாத வருமானம் 5,000 ரூபாய்

படிப்பது கம்ப்யூட்டர் சயின்ஸ்.... மாத வருமானம் 5,000 ரூபாய்

படிப்பது கம்ப்யூட்டர் சயின்ஸ்.... மாத வருமானம் 5,000 ரூபாய்

Published:Updated:

படிப்பது கம்ப்யூட்டர் சயின்ஸ்... மாத வருமானம் 5,000 ரூபாய்!
படிப்பது கம்ப்யூட்டர் சயின்ஸ்.... மாத வருமானம் 5,000 ரூபாய்
படிப்பது கம்ப்யூட்டர் சயின்ஸ்.... மாத வருமானம் 5,000 ரூபாய்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படிப்பது கம்ப்யூட்டர் சயின்ஸ்.... மாத வருமானம் 5,000 ரூபாய்

படிச்சுக்கிட்டே 'பார்ட் டைம் ஜாப்' பார்க்கற சமர்த்து காலேஜ் பொண்ணுங்க வரிசையில, 'வெரிகுட்' வாங்கறாங்க.. மன்னார்குடியைச் சேர்ந்த தமிழருவி.

"ஒரு சின்ன கரெக்ஷன்... பார்ட் டைம் 'ஜாப்' இல்ல... 'பிசினஸ்'! ஏன்னா... நான் யார்கிட்டயும் வேலைக்குப் போகல. நானே ஒரு தொழிலை ஏற்படுத்திக்கிட்டேன்!''

-தெம்பா பேசற தமிழருவி மேடமோட மாத வருமானம்... ஐந்தாயிரம் ரூபாய்!

'அட்றா சக்க... என்ன பிசினஸ் அது?'னு ஆவலாகறீங்கதானே? மன்னார்குடி, செங்கமலத்தாயார் விமன்ஸ் காலேஜ்ல பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கற தமிழருவி உங்ககிட்ட பேசுவார்...

"நமக்கு ஏத்த கலர்ல, பிடிச்ச டிசைன்ல, பட்ஜெட்டுக்குள்ள புடவை செலக்ட் பண்றதுது, கஷ்டமான வேலை. இந்தப் பிரச்னைக்கு ஒரு ஜில் ஐடியாதான், புடவையில பண்ற ஃபேப்ரிக் பெயின்ட்டிங், டிசைன்ஸ்! அதாவது நமக்கு பிடிச்ச கலர்ல, சீப்பான விலையில ஒரு சேலையை வாங்கிட்டு, அதுல நமக்குப் பிடிச்ச டிசைன்ஸை பண்ணி, 'ரிச்' ஆக்கிக்க வேண்டியதுதான்''னு சிரிக்கற தமிழருவி, அது எப்படினும் ஒரு ஈஸி டெமோ சொன்னாங்க.

"சேலையில நமக்குப் பிடிச்ச டிசைன்ஸ்-ஐ டிரேஸ் எடுத்தோ, வரைஞ்சோ வச்சுக்கணும். அப்பறம் அதுல 3டி கலர், ஆயில் பெயின்ட், ஸ்டோன், ஜமிக்கினு விதவிதமா நம்ம விருப்பத்துக்கு ஏற்ப டிசைன்ஸ் செஞ்சுக்கணும். அந்தப் புடவையை ஒருநாள் நிழல்ல காய வைச்சு, திருப்பிப் போட்டு (ரிவர்ஸ்) அயர்ன் பண்ணனும். அவ்வளவுதாங்க... கடையில விக்கற டிஸைனர் புடவையெல்லாம் தோத்துப்போயிடும்! துவைச்சாலும் டிசைன்ஸ் போகாது!''னு கியாரன்ட்டி கார்டோட பேசற தமிழருவிக்கு ஒரு புடவை வொர்க் பண்ண ரெண்டு மணி நேரம் போதுமாம். ஒரு புடவைக்கு நூத்தி ஐம்பது ரூபாய் வாங்குவாங்களாம். கூடவே, கிளாஸ் பெயின்ட்டிங், எம்போஸ் வொர்க்னு வீட்டு அலங்காரப் பொருட்களும் செஞ்சு விக்கிறாங்க அம்மணி.

"படிப்பையும் பிசினஸையும் ஒரே சமயத்துல எப்படி கவனிச்சுக்கறீங்க?''னு வியப்பு விலகாம கேட்டோம்.

"டைம் மேனேஜ்மென்ட்தான்''னு சிம்பிளா சிரிச்சுட்டே பதில் சொன்ன தமிழருவி, "இப்போ தேடி வர்றவுங்களுக்கு மட்டும்தான் புடவை, சுடி-னு டிசைன் பண்ணித் தர்றேன். இதையே டெக்ஸ்டைல் கடையில கான்ட்ராக்ட் எடுத்து செஞ்சா, வீட்டுல இருந்துட்டே மாசம் பத்தாயிரம் சம்பாதிக்கலாம்!''னு இல்லத்தரசிகளுக்கு நம்பிக்கை தர்றாங்க.

" 'இப்போவே இவ்ளோ பொறுப்பா சம்பாதிச்சு குடும்பத்தை காப்பாத்தறாளே...'னு எல்லாம் எனக்காக சிம்பதி க்ரியேட் பண்ணிக்காதீங்க. டாக்டரா இருக்கற எங்கப்பா, என்னை வளர்த்தெடுக்கறதுக்கு சேர்த்து போதுமான அளவுக்கு சம்பாதிக்கிறார். நான் பண்ணிக்கிட்டிருக்கறது... என்னோட கிரியேட்டிவிட்டிக்குத் தீனி... அவ்ளோதான்!''னு சொல்லி அனுப்பி வச்சாங்க தமிழருவி!

படிச்சுக்கிட்டே பட்டைய கிளப்புங்க!

- அ. சரண்யா
படங்கள் எம்.ராமசாமி

படிப்பது கம்ப்யூட்டர் சயின்ஸ்.... மாத வருமானம் 5,000 ரூபாய்
 
படிப்பது கம்ப்யூட்டர் சயின்ஸ்.... மாத வருமானம் 5,000 ரூபாய்
படிப்பது கம்ப்யூட்டர் சயின்ஸ்.... மாத வருமானம் 5,000 ரூபாய்