Published:Updated:

கல்லூரி கன்னிகள் கலக்கிய 'கஷ்மீர் அல்வா'!

கல்லூரி கன்னிகள் கலக்கிய 'கஷ்மீர் அல்வா'!

கல்லூரி கன்னிகள் கலக்கிய 'கஷ்மீர் அல்வா'!

கல்லூரி கன்னிகள் கலக்கிய 'கஷ்மீர் அல்வா'!

Published:Updated:

இந்திய தீபாவளியில் முதன் முறையாக....
கல்லூரி கன்னிகள் கலக்கிய 'கஷ்மீர் அல்வா'!
கல்லூரி கன்னிகள் கலக்கிய 'கஷ்மீர் அல்வா'!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கல்லூரி கன்னிகள் கலக்கிய 'கஷ்மீர் அல்வா'!

'விக்கலுக்குக் கூட கிச்சன் பக்கம் ஒதுங்காத டீன்வாலாக்களுக்கு ஏதாச்சும் ஒரு தீபாவளி ஸ்வீட் செய்யக் கத்துக் கொடுக்கணும்... நம்ம உடல், பொருள், ஆவி(!) எல்லாத்தையும் கொடுத்தாவது!'

- இப்படி ஒரு நல்ல்ல்ல்லெண்ணம் (!) நம்ம மனசுல மத்தாப்பா பூத்துச்சு! களத்தேர்வுக்கு கல்லூரி கல்லூரியா கிளம்பினோம்!

''சமையலா... அய்யய்யய்யய்யோ... நான் வரலை"னு ஏதோ காண்டாமிருகத்துக்கு கால் நகம் வெட்டி விடறதுக்கு கூப்பிட்ட மாதிரி பொண்ணுங்க எல்லாம் ஓவரா பிளிற (!), ஒருவழியா, ''எஸ்... லெட்ஸ் டூ!"னு தெகிரியமா (!) வந்தாங்க கோவை, ஸ்ரீகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில படிக்கற பொண்ணுங்க!

கல்லூரி கன்னிகள் கலக்கிய 'கஷ்மீர் அல்வா'!

அடுத்த சில மணி நேரங்கள்ல அந்த அஞ்சு பொண்ணுங்களையும் கூப்பிட்டுக்கிட்டு கோவை, 'பார்ஷன் அபார்ட்மென்ட்'ல இருக்கற அம்பிகா மேம் வீட்டுல ஆஜரானோம். மேம்தான் கிளாஸ் எடுக்கப்போற 'செஃப்'னு தெரிஞ்சவொடன, ஹால்ல கொஞ்சம் நெர்வஸாதான் இருந்தாங்க கேர்ள்ஸ். ஆனா, பரஸ்பர இன்ட்ரோவுக்கு அப்பறம் கிச்சனுக்குள்ள நுழைஞ்சதும், மொத்த டீமும் பண்ணின அதகளத்துல அந்தக் கிச்சனே கல்லூரி கேன்டீனாகிப் போச்சு!

''அக்கா... ரெட் கலர்ல இருக்கே இதான் சிலிண்டரா?!"னு கிச்சனை பத்தி கிஞ்சித்தும் தெரியாதது மாதிரி வனிதா கலாய்க்க, அவங்கள மத்த வாலுக எல்லாம் கலாய்க்க, தாங்கமுடியாம 'சைலன்ட்!'னு 'டீச்சர்' கியர் எடுத்தாங்க அம்பிகா. ''இப்போ நான் உங்களுக்கு சௌராஷ்டிரா ஸ்டைல்ல 'கஷ்மீர் அல்வா' செய்ய கத்து தரப்போறேன்! நீங்கள்லாம் கிச்சனுக்கு புதுசுங்கிறதால, சிம்பிளான ஸ்வீட்டாதான் செலக்ட் செஞ்சிருக்கேன். ஆனா, படு ச்வீட்டா இருக்கும். ஸ்டெப்ஸ் ஸ்டார்ட் பண்ணுவோமா?"னு சின்சியரா ஆரம்பிச்சாங்க அம்பிகா.

ஓவர் டு பிரிப்பரேஷன்!

மளமளவென 'கஷ்மீர் அல்வா' பண்றதுக்கான பொருட்களை எடுத்து வச்ச அம்பிகா, ''முதல்ல பிரெட் ஸ்லைசை எடுத்து நல்லா டோஸ்ட் பண்ணிக்கணும். இப்போ ஆறு பேருக்கு பண்றதால அஞ்சு ஸ்லைஸ் எடுத்துக்கிட்டேன். எத்தனை பேருக்கு அல்வா பண்ணப் போறோமோ அதுக்கு ஏத்த மாதிரி எடுத்துக்கணும். பிரெட் நல்லா மொறு மொறுனு ஆனதும் அதை மிக்ஸியில போட்டு அடிச்சு பவுடர் பண்ணிட்டு, சலிச்சு எடுத்துக்கணும். குக்கர்ல அந்த பவுடரைக் கொட்டி, அதைவிட ரெண்டு மடங்கு தண்ணீரை ஊத்தி, ஸ்டவ் பத்த வெக்கணும்"னு முதல் ஸ்டெப்பை முடிச்சதுமே,

கல்லூரி கன்னிகள் கலக்கிய 'கஷ்மீர் அல்வா'!

''அக்கா... பக்காவா பத்த வைக்கிறீங்க!"னு வித்யா கிண்டல் பண்ண, வீடே அதிரும்படி சிரிச்சவங்களை விசிலடிச்சு அவுட்டாக்குச்சு குக்கர்.

அம்பிகா குக்கரை திறக்க, உள்ள கூழாகியிருந்துச்சு பிரெட். ''அய்யய்யோ! அல்வானு சொல்லிட்டு கடைசியில ஆடி வெள்ளியில மாரியாத்தா கோயில்ல ஊத்தற கூழ் பண்றீங்களேக்கா?!"னு ஷர்மிளா பதற, ''ஷ்ஷ்... ஓவரா சவுண்ட் விட்டா உன்னை ஜே.கே ரித்தீஷ்ட்ட பிடிச்சுக் கொடுத்துடுவேன்!"னு எய்லின் அவங்களை அதட்ட, ஷர்மிளா கப்சிப் (தோடா!).

தொடர்ந்தாங்க அம்பிகா...

''இந்தக் கூழை இன்னொரு கடாயில ஊத்தி இப்படி சூடு பண்ணிட்டே இருந்தா..., மெதுவா இறுக ஆரம்பிச்சிடும். நம்மளோட டேஸ்ட்டுக்கு ஏத்த மாதிரி சர்க்கரையைக் கொஞ்சம் கொஞ்சமா கொட்டி நல்லா கிளறணும். ஏற்கெனவே நெய்யில வறுத்து வச்சிருக்கற ஏலக்காய் விதைய பொடி பண்ணி இப்போ இதுல தூவணும். அடுத்து, உருக்கி வெச்சிருக்கிற நெய்யை தேவைக்கு ஏத்த மாதிரி இந்த கலவை மேலே ஊத்தி, கிளறிக்கிட்டே இருக்கணும். அப்டியே கொஞ்ச நேரம் ஆனதும் கூழ் இறுகி அல்வா பதத்துக்கு வந்து, நெய் மேல மிதந்து நிக்கும். இப்போ ஸ்டவ்வை ஆஃப் பண்ணிட்டு, மேலே இருக்கிற நெய்யை தனியா வடிச்சு எடுத்துட்டு, அல்வாவை அழகான ப்ளேட்ல எடுத்து வெச்சிடணும்"னு சொல்லிட்டே கண்ணாடி கிண்ணத்துல அதை எடுத்து வைச்ச அம்பிகா, நெய்யில வறுத்த முந்திரிப் பருப்புகள அதில சேர்த்து லேசா கிளறினாங்க.

''அக்கா... அல்வா கலர்ஃபுல்லா இருக்க ஏதாச்சும் பவுடர் சேர்க்கலாமா?"னு முதல் தடவையா ஒரு சின்சியர் கேள்வி வந்து விழுந்தது வித்யாகிட்டயிருந்து.

கல்லூரி கன்னிகள் கலக்கிய 'கஷ்மீர் அல்வா'!

''ஆர்டிஃபிஷியல் கலர் எல்லாம் உடம்புக்கு கெடுதி. இதோ... இப்படி அல்வாவுக்கு நடுவுல ஒரு பெரிய செர்ரி பழத்தை வெச்சு, சுத்தி முந்திரி பழங்களை வெச்சீங்கனா... நீங்க கேட்ட கலர்ஃபுல் விஷயம் வந்துடும்! ரொம்ப காஸ்ட்லியா வேணும்னா பாதாம், பிஸ்தா எல்லாம் சேர்த்து அப்பாவோட பர்ஸை காலி பண்ணிக்கலாம். அது உங்க சாமர்த்தியம். ஆக... இப்போ கஷ்மீர் அல்வா ரெடி!"னு அம்பிகா முடிக்க, 'டேஸ்ட் பண்றோம்'னு பொண்ணுங்க அல்வாவை எடுத்தது ஸ்பூன்ல இல்ல... கால் கிலோ கொள்ற கரண்டியில!

''ஆஹா... ஒரு ஸ்வீட்டே ஸ்வீட் பண்ணியிருக்கே!"னு அடுத்த கரண்டிக்காக அம்பிகாவுக்கு அந்த ஐவர் அணி பிட்டைப்போட,

''அக்கா! அடுத்த ரம்ஜானுக்கு இதை நான் பிரிப்பேர் பண்ணி உங்களுக்கு கூரியர்ல அனுப்பி வைக்கிறேன்!"னு க்ளைமாக்ஸ் சிக்ஸர் அடிச்சாங்க பவிஷா!

ஆட டட டட டா... நம்ம நல்லெண்ணம் நிறைவேறிடுச்சுப்பா!

- எஸ்.ஷக்தி
படங்கள் தி.விஜய்

கல்லூரி கன்னிகள் கலக்கிய 'கஷ்மீர் அல்வா'!
 
கல்லூரி கன்னிகள் கலக்கிய 'கஷ்மீர் அல்வா'!
கல்லூரி கன்னிகள் கலக்கிய 'கஷ்மீர் அல்வா'!