Published:Updated:

ஆசெ...ஆசெ...அம்மா வீட்டுத் தோச !

ஆசெ...ஆசெ...அம்மா வீட்டுத் தோச !

ஆசெ...ஆசெ...அம்மா வீட்டுத் தோச !

ஆசெ...ஆசெ...அம்மா வீட்டுத் தோச !

Published:Updated:

கி.ரா-வின் ஃப்ளாஷ்பேக்
ஆசெ...ஆசெ...அம்மா வீட்டுத் தோச !
ஆசெ...ஆசெ...அம்மா வீட்டுத் தோச !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆசெ...ஆசெ...அம்மா வீட்டுத் தோச!

நாஞ்சொல்ற தீபாவளி 75 வருஷத்துக்கு முந்தினது (முக்கால் நூற்றாண்டு!). அதை இப்போ நெனைச்சிப் பார்க்கேன். சிறு பையன்களா இருந்த எங்களுக்கு தீபாவளினா பலகாரம், புத்தாடை, மத்தாப்பு வெடி இதெல்லாம்தான்... பெரியவங்களுக்குத்தான் கஷ்டமெல்லாம்.

ஆசெ...ஆசெ...அம்மா வீட்டுத் தோச !

பெரும்பாலும் அந்தக் காலத்து தீபாவளிங்க அடைமழை காலத்துலான் வரும். எப்பப் பார்த்தாலும் 'பொணு பொணு'னு தூறல் போட்டுக்கிட்டே இருக்கும். வெந்நீர்தான்னாலும் அரப்பு, சீயக்காய் இதையெல்லாம் நினைக்குறப்ப... பயமா இருக்கும். காரணம்... பெரும்பாலான பசங்களுக்குச் சொறி, சிரங்கு இருக்கும்.

தீபாவளினாலே எண்ணெய் தேய்ச்சிவிடறதுக்குனே தனியா ஆட்கள் உண்டு. பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு போட்டுக் காய்ச்சி, வெதுவெதுப்பான எண்ணெயைத் தலையில் வெச்சு தாளத்தோட, கடம் வாசிக்கறது மாதிரி தட்டித் தேய்க்குறப்ப... படுசுகமா இருக்கும்; சிரிப்பா வேற வரும். உடம்ப எண்ணெய் வெச்சு நீவி நீவித் தேய்க்கறது சுகமோ சுகம். பின்னால விசாரிச்சப்ப... அந்தக் காலத்து ராஜாக்களுக்கு இப்படித்தான் இவர்களுடைய முத்தாத்தாமார் எண்ணெய் தேய்ச்சி விடுவாங்களாம்; அந்தப் பரம்பரையில வந்தவங்களாம்.

தீபாவளிப் பலகாரம்கிறது அப்போல்லாம் எங்க ஊர்ல பெரும்பாலும் தோசைதான். அதுல கருப்பட்டித் தோசைங்கறத இப்ப நினைச்சாலும் அதோட மணம், ருசி இதெல்லாம் சேர்ந்து ஆசை கிளப்புது. சும்மாவா... 'ஆசெ, ஆசெ அம்மா வீட்டுத் தோச. திங்கத் திங்க ஆசெ... திரும்பிக் கேட்டா வாழை மட்டைப் பூச'னு ஒரு பாட்டே இருக்கே!

தோசைக்கு அடுத்த பலகாரம் இட்டிலிதான். இட்டிலியோட இடத்தை எந்தப் பலகாரமும் வந்து இதுவரைக்கும் பிடிக்கலை. இட்டிலினா அந்தக் காலத்துல உலை மூடி இட்லிதான். இதுதான் ஆதி. ஒரு இட்டிலியை நம்மால் சாப்பிட முடியாது. பிறந்த நாள் கேக் போல அம்புட்டுப் பெரிசு... கனம். பணியாரம், சுசியம், முந்திரிக்கொத்து, நெய் உருண்டை இதெல்லாம் கொஞ்சம் வசதியானவங்க வீட்டு தீபாவளிப் பலகாரங்க.

'வருசத்துக்கு ஒரு தரம்தானே'னு மாறி மாறித் தின்னுட்டா... செரிக்க வேணாமா? அதுக்குனே ஒரு லேகியம் வேற தயாரா இருக்கும். அது தீபாவளி மருந்து. அது இல்லனா... தீபாவளி முடிஞ்ச கையோட கும்பலா வைத்தியரு, டாக்டர்னு வீடு தேடியில்ல போய் நிக்கணும். அந்தப் பிரச்னையே இல்லாம... இந்த லேகியமே பூரண குணத்தைக் கொடுத்துடும்.

'ம் அதெல்லாம் அந்தக்காலம்'னு சொல்லிக்கிட்டே இருக்கறது இந்தக் காலம் வேறென்ன நாஞ்சொல்ல!

ஆசெ...ஆசெ...அம்மா வீட்டுத் தோச !
 
ஆசெ...ஆசெ...அம்மா வீட்டுத் தோச !
ஆசெ...ஆசெ...அம்மா வீட்டுத் தோச !