Published:Updated:

ச்சோ ஸ்வீட்...அச்சச்சோ வெயிட் !

ச்சோ ஸ்வீட்...அச்சச்சோ வெயிட் !

ச்சோ ஸ்வீட்...அச்சச்சோ வெயிட் !

ச்சோ ஸ்வீட்...அச்சச்சோ வெயிட் !

Published:Updated:

ச்சோ ஸ்வீட்... அச்சச்சோ வெயிட்!
ச்சோ ஸ்வீட்...அச்சச்சோ வெயிட் !
ச்சோ ஸ்வீட்...அச்சச்சோ வெயிட் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெரைட்டியான ஸ்வீட்கள், காரங்கள், தடபுடலான சமையல் இதெல்லாம் இல்லாமல் தீபாவளியா..? விதம்விதமாக வீடே கமகமக்க... ‘ஒரு கை பார்க்காம விடமாட்டேன்’ என்று சிறுசுகள் முதல் பெரிசுகள் வரை அரவை மெஷினை ஓட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.

ச்சோ ஸ்வீட்...அச்சச்சோ வெயிட் !

இப்படி கைக்கும், வாய்க்குச் சண்டை போட்டுவிட்டு, அப்படியே போய் டி.வி-யின் முன்பாக உட்கார்ந்தால்... உண்டது ஜீரணமாகாமல் வயிறு கடமுடவென மிருதங்கம் வாசிக்கத் தொடங்கிவிடும். ஏற்கெனவே... கொலஸ்ட்ரால், அல்சர் என்று நோயின் பிடியில் சிக்கித் தவிப்பவர்களாக இருந்தால்... திண்டாட்டம்தான். மொத்தத்தில், சந்தோஷமான நாள், சங்கட நாளாக மாறி... ஒட்டுமொத்த உற்சாகத்தையும் குலைத்துப் போட்டுவிடும்.

"அப்படியெல்லாம் ஏதும் ஆகிவிடாமல், துளிகூட உற்சாகம் குலைந்துவிடாமலும் தீபாவளியைக் கொண்டாட முடியும்" என்றபடி இங்கே ஆலோசனைகளை பந்தி வைக்கிறார் 'டயட்டீஷியன்' பூங்கோதை.

சர்க்கரைக் குறைபாடு இருப்பவர்களுக்கு ஸ்வீட்டை பார்த்தாலே சாப்பிடத் தோன்றும். இவர்கள், சுகர் ப்ரீ சாக்லெட்ஸ், ஸ்வீட்ஸ் சாப்பிடலாம். 4 இட்லி சாப்பிடுபவர்கள், 2 இட்லி மட்டும் எடுத்துக் கொண்டு, குறிப்பிட்ட அளவு ஸ்வீட் சேர்த்துக் கொள்ளலாம். உதாரணத்துக்கு ஒரு குலோப் ஜாமூனில் 250 கிலோ கலோரி இருக்கிறது. ஒரு இட்லியில் 65 கிலோ கலோரி இருக்கிறது. 2 இட்லியைச் சாப்பிட்டு ஒரு குலோப் ஜாமூன் சாப்பிடலாம் (பொதுவாகவே அன்றாடம் கலோரி அளவைக் கணக்கிட்டு சாப்பிடுவது நல்லது).

அல்சர் பாதிப்பில் இருப்பவர்கள் கவனத்துக்கு... முறுக்கு, அதிரசம் என்று எண்ணெயில் பொரித்தவற்றை ஓரளவே எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரே நேரத்தில் சாப்பிடுவதைவிட, இடைவெளிவிட்டுச் சாப்பிடலாம். காரம் சாப்பிடுவதால் அல்சர் வருகிறது என்பார்கள். அது தவறு. ஆனால், அல்சர் இருப்பவர்கள் காரம் சாப்பிடும்போது வயிற்றில் எரிச்சல் ஏற்படும். மிளகில் ‘கேப்சைஸின்’ எனும் பொருள் இருக்கிறது. இது அல்சரை தடுக்கும். எனவே, மிளகு பயன்படுத்தி கார பட்சணங்களைத் தயாரிக்கலாம்.

மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள், எண்ணெய் பதார்த்தங்களைச் சாப்பிடவே கூடாது. இப்படிப்பட்டவர்களுக்கு, மைதா மாவில் பட்சணங்களை செய்துகொடுப்பதைவிட, கோதுமை மாவில் செய்யலாம்.

பயறு வகைகள், தானியங்களில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இதில் லட்டு, ஸ்வீட், காரங்களை செய்து கொடுத்தால், நோய்களும் கிட்டே நெருங்காது... உடல் ரீதியான பிரச்னைகள் இருந்தாலும் பெரிதாக பாதிப்பு இருக்காது.

மாரடைப்பு, இதயக் கோளாறு இருப்பவர்கள், பாலில் தயாரிக்கப்பட்ட உணவுப் பதார்த்தங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. தேவைப்பட்டால்... கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் செய்து சாப்பிடலாம்.

கொலஸ்ட்ரால் பிரச்னை இருப்பவர்கள் எண்ணெய் பதார்த்தங்களை அறவே தவிர்த்துவிடுங்கள். எந்த எண்ணெயில் தயாரிக்கப்பட்டது என்பதே தெரியாமல் அக்கம் பக்கத்தினர் தந்தார்கள் என்பதற்காக வெளுத்துக் கட்டுவது... அசிடிட்டி மற்றும் இதயக் கோளாறுக்கு வழிவகுத்துவிடும்.

என்னதான் (ஸ்)வீட்டு பலகாரம் டேஸ்டாக இருந்தாலும்... அளவுக்கு மிஞ்சும்போது ஆபத்துதான். எனவே, அதிலும் 'நா'வடக்கம் தேவை!

ச்சோ ஸ்வீட்...அச்சச்சோ வெயிட் !
-ரேவதி
   
   
ச்சோ ஸ்வீட்...அச்சச்சோ வெயிட் !
ச்சோ ஸ்வீட்...அச்சச்சோ வெயிட் !