Published:Updated:

ஆரோக்கியத்துக்கு கியாரன்டி...பர்ஸுக்கு பாதுகாப்பு !-

ஆரோக்கியத்துக்கு கியாரன்டி...பர்ஸுக்கு பாதுகாப்பு !-

ஆரோக்கியத்துக்கு கியாரன்டி...பர்ஸுக்கு பாதுகாப்பு !-

ஆரோக்கியத்துக்கு கியாரன்டி...பர்ஸுக்கு பாதுகாப்பு !-

Published:Updated:

"ஆரோக்கியத்துக்கு கியாரன்டி... பர்ஸுக்கு பாதுகாப்பு!"
ஆரோக்கியத்துக்கு கியாரன்டி...பர்ஸுக்கு பாதுகாப்பு !-
ஆரோக்கியத்துக்கு கியாரன்டி...பர்ஸுக்கு பாதுகாப்பு !-

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம்ம வீட்டுத் தோட்டம் !

''வீட்டுத் தோட்டம் போடற எங்களோட நெடுநாள் ஆசையை நாடி பிடிச்சாப்ல சொல்லியிருந்தீங்கப்பா! இப்பவே நர்சரி எல்லாம் போய் செடிகளைப் பார்த்து வச்சுட்டு வந்துட்டோம். நீங்க சொல்லிக் கொடுத்தவொடன பாத்திப் போட வேண்டியதுதான்!" என்று 'நம்ம வீட்டுத் தோட்டம்' என்ற புதிய பகுதியை வரவேற்று வாசகிகளிடமிருந்து சந்தோஷ தொலைபேசி நம் அலுவலகத்தில் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. கூடவே, கேள்விகளையும் அடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆரோக்கியத்துக்கு கியாரன்டி...பர்ஸுக்கு பாதுகாப்பு !-
மனைவி, மருகளுடன் ஆராவமுதன்.....

வெயிட்... வெயிட்..! உங்கள் தோட்டத்தில் விதைத்து காய்த்து, அது உங்கள் அடுப்பங்கரை குழம்பில் கொதிக்கும் வரை நாங்கள் உங்களை விட்டு விலகப்போவதில்லை... எனவே, இன்னும் உற்சாகமாக, நம்பிக்கையோடு தயாராகுங்கள்! அப்புறம், ஒரு விஷயம்... 'மண்ணை கொட்டிக் கொள்ளவும்... மண்வெட்டியை எடுத்துக் கொள்ளவும்' என்றெல்லாம் இங்கு தியரி வகுப்பு எதையும் எடுக்கப் போவதில்லை! 'நாங்க இப்படி செஞ்சோம்... விளைச்சல் இப்படி வந்தது' என்று பிராக்டி கலாக தங்களின் அனுபவத்தையே உங்களுக்கு வழிகாட்டலாக வைக்கப் போகிறார்கள் ஏற்கெனவே வீட்டுத்தோட்டம் போட்டிருக்கும் குட்டிக் குட்டி விவசாயிகள்... சரியா?!

தங்கள் வீட்டு மண்ணைத் தோட்டத்துக்குத் தயார்படுத்தியது பற்றி பேசுகிறார்கள் அம்பத்தூர், விநாயகபுரத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி - ஆராவமுதன் தம்பதியர்!

''எங்க குடும்பம் விவசாயக் குடும்பம். கரும்பு, நெல், கடலை, ஊடு பயிரா காராமணினு விளைச்சல் பார்த்த அப்பாவுக்கு உதவியா இருந்தப்பவே தோட்ட வேலை மேல எனக்கு ஆர்வம் வந்துருச்சு. ஆனா, படிப்ப முடிச்சி அரசாங்க வேலையில சேர்ந்தப்ப, அடிக்கடி படுத்தற டிரான்ஸ்ஃபரால ஒரு இடத்துல நிலையா இருக்க முடியாமப் போக, என்னோட வீட்டுத்தோட்ட ஆசை தூங்கிப் போயிடுச்சு! பதினாலு வருஷத்துக்கு முன்னால நான் ரிட்டயர்டு ஆனப்போ, அம்பத்தூர்ல சொந்த வீடு கட்டும்போது, வீட்டைச் சுத்தி மனசுபோல தோட்டத்துக்கு இடம் விட்டுக் கட்டிட்டேன்!" என்ற ஆராவமுதன், தோட்டத்தை செம்மைப்படுத்தியது பற்றி விளக்கினார்...

''கட்டடத்தை இடிச்சா தூளான செங்கலும் சிமென்ட்டுமா கிடைக்குமே கழிவு... அதை முதல்ல தோட்டம் முழுக்க கொட்டினோம். அதன் மேல செம்மண் அடிச்சோம். அதுக்கு மேல பசுந்தாள் உரம் போட்டோம். பசுந்தாள் உரம் ரொம்ப விலையில்ல. பக்கத்துல இருக்கற மாட்டுத் தொழுவத்துல இருந்து நல்லா காய வச்ச சாணி வரட்டியை வாங்கி, அதை செம்மண் மேல உதிர்த்து விட்டோம். அவ்வளவுதான்!

இப்போ அந்த மண்ணு, செடிகள அப்படி செழிக்க வைக்குது..! முக்கியமான விஷயம்... மழை வந்தா தோட்டத்துல தண்ணி தேங்காது. ஏன்னா, செங்கல் சல்லி, செம்மண், பசுந்தாள் உரம்னு இந்த மூணு அடுக்குகளும் தண்ணீரை உள்ள இழுத்துக்கறதோட, மண் வளத்தையும் காக்குது! ஆறு மாசத்துக்கு ஒரு முறை மண்ணைக் கிளறி விட்டா போதும்! இந்த மண்ணுல நாங்க என்ன செடி வச்சாலும் நல்லா வேர் பிடிக்குது!" என்று சொன்னார்!

ஆரோக்கியத்துக்கு கியாரன்டி...பர்ஸுக்கு பாதுகாப்பு !-

வீட்டுக்குப் பின்னே... கத்திரி, வெண்டை, பாகற்காய், புடலங்காய் என காய்த்துக் குலுங்க... நட்டு வைத்துள்ள மஞ்சள்கிழங்கின் தாள்கள் பசுமையாகச் சிரிக்க.. ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக கதை பேசிக்கொண்டிருக்கின்றன சில பல கீரை வகைகள்! வீட்டுப் பூஜைக்குத் தேவையான சாமந்தி, நித்யமல்லி, பாரிஜாதமும் மணக்கின்றன!

அதையெல்லாம் பார்த்து பரவசப்பட்டு நின்ற நம்மிடம் தொடர்ந்தார் ராஜலட்சுமி...

''வெண்டைச் செடிதான் முதல்ல பயிர் பண்ணினோம். அப்பறம் எங்க சொந்தக்காரங்க ஒருத்தவங்க கோவைக்காய் கொடுத்தப்போ, அதையும் நட்டோம். இடையில ஒரு முறை கம்பளிப்பூச்சி வந்துருச்சு. முழுசா வெட்டிட்டு, மறுபடியும் நட்டோம். அப்பறம் நல்லா வந்துடுச்சு.

பொதுவா, ரெண்டு, மூணு மாசத்துல கோவைக்காய் அறுவடைக்கு வந்துடும். ரெண்டு நாளைக்கு ஒரு தடவை அரை கிலோ காய் பறிக்கலாம். இது டயபடீஸ்க்கு ரொம்ப நல்லது! இங்க விளையற காய் எல்லாம் கொஞ்சம்கூட ரசாயனக் கலப்பில்லாததால, ஆரோக்கியத்துக்கும் கியாரன்டி... பர்ஸ§க்கும் பாதுகாப்பு!" என்றவர், வாரத்தில் நான்கு நாட்கள் தன் தோட்டத்துக் காய்களையே சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்கிறாராம். இதனால் அவருக்கு காய்கறி செலவுக்கு மிச்சமாவது, மாதம் நானூறு ரூபாய்!

''ரெண்டு வேளை தண்ணி ஊத்தறது, வீட்டைத் சுத்தியிருக்கற தோட்டத்துல வாக்கிங் போறதுனு எங்க உடம்பும், மனசும் நல்லாவே இருக்குது!" எனும் இந்த தம்பதி, தங்களின் இரண்டு மகன்களுக்கும் மணம்முடித்துவிட, மருமகள்களும் தோட்ட பராமரிப்புக்கு தோள் கொடுக்கிறார்கள்!

- செழிக்கும்...
படங்கள் பா.பரத்வாஜ்

பூச்சிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி?

ஆரோக்கியத்துக்கு கியாரன்டி...பர்ஸுக்கு பாதுகாப்பு !-

வீட்டுத்தோட்டம் பற்றிய உங்களின் சந்தேகங்களுக்கு பதில் தருகிறார் இயற்கை வேளாண்மை வல்லுநரான பட்டுக்கோட்டை ஏங்கல்ஸ் ராஜா.

"செடிகளை பூச்சிகள் பாதிப்பிலிருந்து எப்படி பாதுகாப்பது?"

- ஜெ.சித்ரா, நாமக்கல்

"சிறிதளவு இஞ்சி, இரண்டு பல் பூண்டு, ஐந்து பச்சைமிளகாய், சிறிதளவு பெருங்காயத்தூள் ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் தண்ணீரில் ஊற வைத்த புகையிலையையும் சேர்த்து செடிகளுக்கு தெளித்து வர, பூச்சித் தாக்குதல் நிகழாது!"

"கம்பளிப்பூச்சி தாக்குதலிலிருந்து கோவைக் கொடியை எப்படிக் காப்பாற்றுவது?"

- ராஜலட்சுமி, அம்பத்தூர்

"ஒரு சோற்றுக் கற்றாழை இதழை பன்னிரண்டு மணிநேரம் வரை ஊற வைத்து சாறு எடுங்கள். அதனுடன், இடித்துப் பொடி செய்த வேப்பங்கொட்டையைக் கலந்து, பதினைந்து நாட்கள் தொடர்ந்து தெளித்து வந்தால்... கம்பளிப்பூச்சி அண்டாது.

மேற்குறிப்பிட்ட இரண்டு வழி முறைகளும் எத்தகையப் பூச்சி தாக்குதல்களிலிருந்தும் செடி, கொடிகளைப் பாதுகாக்கும்."

வாசகிகளே... உங்களுக்கும் வீட்டுத் தோட்டம் பற்றிய

பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். அத்தனையையும்

'நம்ம வீட்டுத் தோட்டம்' அவள் விகடன், 757 அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். குரல்பதிவு சேவை மூலம் கேட்க விரும்புபவர்கள், 42890002 என்ற எண்ணில் பதிவு செய்யலாம்.

ஆரோக்கியத்துக்கு கியாரன்டி...பர்ஸுக்கு பாதுகாப்பு !-
 
   
   
ஆரோக்கியத்துக்கு கியாரன்டி...பர்ஸுக்கு பாதுகாப்பு !-
ஆரோக்கியத்துக்கு கியாரன்டி...பர்ஸுக்கு பாதுகாப்பு !-