Published:Updated:

கவிதை பாடும் கைத்தறி !

கவிதை பாடும் கைத்தறி !

கவிதை பாடும் கைத்தறி !

கவிதை பாடும் கைத்தறி !

Published:Updated:

கவிதை பாடும் கைத்தறி !
கவிதை பாடும் கைத்தறி !
கவிதை பாடும் கைத்தறி !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆலிலையில் ஆனந்தமாக சிரிக்கும் கண்ணன், சுவடிகளுடன் திருத்தமாக நோக்கும் திருவள்ளுவர், கொள்கை கொப்பளிக்கும் பார்வையுடன் பேரறிஞர் அண்ணா... என்று பார்வைக்கு விருந்தாக பட்டுத் தறியில் 'பின்னி' எடுத்திருக்கிறார்கள் அந்த நெசவாளர்கள். கைத்தறியில் கவிதை பாடியிருக்கும் அந்தக் கைகளை பாராட்டி, தங்க காப்பு போட்டாலும் அது தகுதி குறைவுதான்!

கவிதை பாடும் கைத்தறி !
 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து பவானிசாகர் செல்லும் வழியில் இருக்கிறது சிறுமுகை. வனத்தை உரசியபடி வளமாக இருக்கும் இந்த ஊரின் அட்டகாசமான விசிட்டிங் கார்டு, நெசவுதான். ஊருக்குள் எங்கே காது வைத்தாலும் 'சடக்..சடக்..சடக்' என்று சைஸாக ட்யூன் போடுகிறது கைத்தறி. தாங்கள் தயார் செய்யும் சேலை, திரைச்சீலை போன்றவற்றை எந்த தடையுமில்லாமல் மார்க்கெட் செய்வது உள்ளிட்ட பல விஷயங்களுக்காக சிறு நெசவாளர்கள் ஒன்றுசேர்ந்து சங்கங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

கோ-ஆப்டெக்ஸின் கீழ் இந்த சங்கங்கள் வருவதால், நெய்யப்பட்ட துணிகள் ஜரூராக கொள்முதல் செய்யப்படுகின்றன. அதில் ஒன்றுதான் சிறுமுகைப்புதூரில் இருக்கும் ஸ்ரீராமலிங்க சௌடாம்பிகை கைத்தறி நெசவாளர்கள் சங்கம். பூப்போட்ட, கட்டம் போட்ட, கோடு போட்ட என்ற ஃபார்மல் டிசைன்களைத் தாண்டி இந்த சங்கம் தயார் செய்யும் டிசைன்கள் அத்தனையும் அடடா ரகங்கள்தான்!

ஒரு கட்டத்துக்கு இரண்டு குறள்கள் வீதம் ஆயிரத்து முந்நூற்று முப்பது திருக்குறள்களையும் அடக்கி அமர்க்களமாக ஒரு பட்டு சேலை தயார் செய்திருக்கிறார்கள். சேலையின் பார்டரில் இரு பெண்கள் மலர் தூவ, கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறார் வள்ளுவர். இந்தச் சேலையைத் தயாரிப்பதற்கு இவர்களுக்கு நான்கு மாதங்களும் பத்து நாட்களும் ஆகியிருக்கின்றன. மொத்தச் செலவு மூன்று லட்சத்து இருபத்திஏழாயிரம் ரூபாய். ஒப்பிடுவதற்கு வேறு விஷயங்களே இல்லாத வண்ணம் தகதகவென உருவாகி இருக்கும் திருக்குறள் சேலைக்காக இரண்டாவது முறையாக தேசிய விருதைத் தட்டியிருக்கிறது இந்தச் சங்கம்.

கவிதை பாடும் கைத்தறி !
கவிதை பாடும் கைத்தறி !

வெண்ணெய் பானையை உருட்டும் கண்ணன்... இந்த சங்கத்தின் லேட்டஸ்ட் கலக்கல். இதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் நான்கு வாசல் கோபுரங்களின் 'ஈகிள் வியூ' தோற்றம், குற்றால அருவி என்று இன்னும் இவர்களிடம் பல படா படைப்புகள் லைன் கட்டி நிற்கின்றன.

"இப்போ ஜவுளித் துறை ஜிகுஜிகுனு முன்னேறிட்டு இருக்கு. நாமளும் ஒரே மாதிரியா நெஞ்சுட்டு இருந்தா போட்டியில நிக்க முடியுமுங்களா? அதனாலதான் வெரைட்டியா நெய்யுறோமுங்க. இந்த டிசைனையெல்லாம் உருவாக்குறது எங்க மேனேஜர் ராதாகிருஷ்ணன்தான். கம்ப்யூட்டர்ல டிசைனைப் போட்டு பிரின்ட் எடுத்து, பக்காவா ஸ்கெட்ச் போட்டுத் தருவாரு. அதுக்கு ஏத்த மாதிரி ரெடி பண்ணிடுவோம்'' என்கிறார்கள் சங்கத்தைச் சேர்ந்த நெசவாளர்கள்.

கவிதை பாடும் கைத்தறி !
கவிதை பாடும் கைத்தறி !

இந்தச் சங்கம் மலிவு விலை சேலையிலும் தன் கைவண்ணத்தைக் காட்டத் தவறுவதில்லை. வெள்ளி ஜரிகைக்கு பதிலாக ஜூட் நூலைப் பயன்படுத்தி, கோரா காட்டன் சேலை களில் புது விருந்து வைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இந்த ஜூட் நூல், சணல் மாதிரியான நிறத்திலிருக்கும் ஒருவகை நூல். முழுக்க வெள்ளி ஜரிகையைப் பயன்படுத்தி பளபளவென நெய்யப்படும் சேலைகளை எல்லாப் பெண்களும் விரும்புவார்கள் என்று சொல்ல முடியாதுதானே?! கூடவே வெள்ளி ஜரிகை கிலோ ஆயிரத்தை தொடுவதால், அதற்கு மாற்றாக கிலோ முந்நூறு ரூபாய்க்கு கிடைக்கும் இந்த ஜூட்டை பயன்படுத்துகிறார்கள். பல கைத்தறியாளர்கள் இதைப் பயன்படுத்தினாலும், அதை வைத்து படமும் நெய்வதுதான் இந்தச் சங்கத்தின் ஸ்பெஷல். குறைந்த விலையில் ரிச்சான லுக் என்பதால் எல்லா தரப்பு மக்களையும் கவர ஆரம்பித்து இருக்கிறது இந்த டிசைன்.

கிரியேட்டிவ் ஹெட் மற்றும் சங்கத்தின் மேலாளர் ராதாகிருஷ்ணன் நம்மிடம், "பவர் லூம்னு சொல்லப்படுற விசைத்தறியில என்னவேணா பண்ணலாமுங்க. ஆனா, மெஷினோட பங்களிப்பே இல்லாம கையை மூலதனமாக்கி செய்யப்படுற கைத்தறியில இப்படி வெரைட்டி காட்டுறது பெரிய விஷயம்! புதுசு புதுசா பண்றதால மக்கள் மத்தியில எங்களுக்கு ஏக வரவேற்பு. ஏழை மக்களும் ஈஸியா வாங்கி உடுத்துற மாதிரியான சீப்பான விலையில காஸ்ட்லி டிசைன்களை உருவாக்கணுங்கிறதுதான் எங்களோட அடுத்த இலக்கு. கூடிய சீக்கிரம் அது நிறைவேறும்!'' என்கிறார் நம்பிக்கை மிளிர!

- எஸ்.ஷக்தி
படங்கள் தி.விஜய்

கவிதை பாடும் கைத்தறி !
 
   
   
கவிதை பாடும் கைத்தறி !
கவிதை பாடும் கைத்தறி !