Published:Updated:

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் !

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் !

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் !

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் !

Published:Updated:

"பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்!"
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் !
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரசர் வழியில் அசத்தும் அமைச்சர்கள் !

''ஒரு காலத்தில் ஒரு அரசர் இருந்தார். அவர் எந்த காரியம் செய்தாலும் தன் மனைவியின் கருத்தைக் கேட்டே செய்வார். ஒரு நாள், 'நாம் மட்டும்தான் இப்படி மனைவியின் பேச்சைக் கேட்கிறோமா... அல்லது அமைச்சரவையில் உள்ள மற்றவர்களும் கேட்டு நடக்கிறார்களா..?' என்று அரசருக்கு சந்தேகம். அமைச்சர்களிடமே கேட்டுவிட்டார். 'நாங்களும் அரசர் வழியில் மனைவியரின் பேச்சைக் கேட்டே நடக்கிறோம்’ என்றார்கள் அத்தனை பேரும்.

அடுத்து, 'இந்த விஷயத்தில் குடி மக்கள் எப்படி?' என்பதைத் தெரிந்து கொள்ள நினைத்த அரசர் ஊரையே கூட்டி, 'மனைவி பேச்சைக் கேட்பவர்கள் எல்லாம் வலதுபுறமும்... கேட்காதவர்கள் இடதுபுறமுமாக செல்லுங்கள்' என்றார். ஒருவர் மட்டும் இடதுபுறமாகச் செல்ல... 'நீங்கள் ஒருவர் மட்டும்தான் மனைவியின் பேச்சைக் கேட்காதவர். பிடியுங்கள் பொற்கிழி பரிசை' என்று நீட்டினார் அரசர்.

உடனே, 'மனைவியின் பேச்சைக் கேட்காமல் வாங்கமாட்டேன்' என்று அவர் சொல்ல, அரசருக்கு கோபம் வந்துவிட்டது. 'பிறகு எதற்காக இடதுபுறமாக சென்றீர்கள்?’ என்று கேட்டார்.

'வீட்டிலிருந்து புறப்பட்டபோது, கூட்டத்தோடு கூட்டமாகச் செல்லாதீர்கள். தனியாக நில்லுங்கள் என்று என் மனைவிதான் சொல்லியனுப்பினார்' என்று பதில் தந்தார் அந்த நபர்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்ற உண்மையை உணர்த்தத்தான் இந்தக் கதையைச் சொல்கிறேன். என் மனைவி பல நேரங்களில் எனக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார்.''

- சமீபத்தில் நாமக்கல்லில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் துணையரசர் (துணை முதலமைச்சர்) ஸ்டாலின் சொன்ன இந்தக் கதை செம ஹிட்!

துணையரசரே முன்மொழிந்த பிறகு, அமைச்சர்கள் வழிமொழியாமல் இருப்பார்களா! மாண்புமிகு அமைச்சர்கள் சிலர், அவர்களின் காரியம் யாவிலும் கை கொடுக்கும் தங்கள் இல்லக்கிழத்திகளின் அன்பாட்சியை இங்கு அரங்கேற்றுகிறார்கள்!

போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு ''அடிப்படையில விவசாயக் குடும்பம் எங்களது. மினிஸ்டர் வொய்ஃப்னு எல்லாம் பந்தா இல்லாம இன்னிக்கும் வயல்காட்டுல இறங்கி வேலை பார்க்கறாங்க என் மனைவி சாந்தா. குடும்ப விஷயம் எல்லாத்தையும் அவங்ககிட்ட கேட்டுதான் நான் முடிவெடுப்பேன். தேர்தல் நேரத்தில ஒரு மாசம் வரைக்கும்கூட வீட்டுக்கு போகாம இருப்பேன். அப்பெல்லாம் குடும்பத்தையும், விவசாயத்தையும் என்னைவிட நல்லாவே பார்த்துக்குவாங்க.

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் !

என் பசங்களுக்கு காலேஜ்ல படிக்கறவரைக்கும் 'இன்னார் மகன்’னு என் பதவி அடையாளங்கள் தெரியாமத்தான் இருந்தாங்க. அதுக்கு காரணம், என் வீட்டம்மாவின் வளர்ப்புத்தான்.

இதெல்லாத்தையும்விட ஒரு அசத்தலான விஷயம் சொல்றேன். ஒரு அக்கா, அடுத்தது நான், தம்பி தங்கச்சிங்கனு எட்டு புள்ளைங்க எங்க வீட்டுல. இன்னிக்கு வரைக்கும் எங்க கூட்டுக் குடும்பம் செழிச்சு இருக்குனா, அதுக்கு சாந்தாவோட பிடிமானம்தான் காரணம்!"

மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ''ஒரு மனுஷன் சந்தோஷமா இருக்கான்னா, அவனுக்கு வீட்டில் எந்த கவலையும் இல்லைனு அர்த்தம். நான் சந்தோஷமா இருக்கேன். உபயம்... என் மனைவி செந்தமிழ்ச்செல்வி.

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் !

எங்களுக்கு கல்யாணமாகி இருபது வருஷம் ஆச்சு. இன்னிக்கு வரைக்கும் எங்களுக்குள்ள பிரச்னையே வந்ததில்லைனா நம்புவீங்களா?! நான் லா படிச்சிருக்கிறேன். அவங்க பதினோராவதுதான் படிச்சிருக்காங்க. இருந்தாலும் குடும்ப விவகாரங்களை ரெண்டு பேரும் பேசித்தான் முடிவு எடுப்போம். அரசியலில் அவங்களுக்கு ஆர்வம் இல்லை. அதேசமயம் என் வேலை முறைகளை புரிஞ்சு நடந்துக்குவாங்க. ஆண்களோட வெற்றிக்கு காரணம் பெண்கள்தான்னு தளபதி சொன்னது, நூற்றுக்கு நூறு உண்மைங்க!"

பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் ''பெரியார், 'திருமணம் என்பது வாழ்க்கை துணை நல ஒப்பந்தம்’னு சொல்வார். என் மனைவிக்கும் எனக்கும் இடையிலான அந்த ஒப்பந்தம், இன்னிக்கு வரைக்கும் தெளிவா, தீர்க்கமா, ஆதர்சமா, உயிர்ப்பா நடைமுறையில இருக்கு.

என் மனைவி மகாராணிதான், என் ராணி! ஏற்றம், இறக்கம்னு என் வெளியுலக வாழ்க்கை எப்படி இருந்தாலும், வீட்டுக்குள்ள என்னை எப்பவுமே ஒரு ராஜாவா கொண்டாடறவங்க.

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் !

பொருளாதார ரீதியா மோசமான நிலையிலிருக்கும்போது பத்து ரூபா கொடுத்தா எப்படி எதிர்கொள்வாங்களோ... அப்படித்தான் செழிப்பா இருக்குறப்ப நூறு ரூபாய் கொடுத்தாலும் எதிர்கொள்வாங்க. இதுவரைக்கும் தனக்குனு எங்கிட்ட எதுவும் வேணும்னு கேட்டதில்ல. அவங்க கேட்டு வாங்கித்தர்ற மாதிரி நானும் நடந்துக்கிட்டதில்ல!"

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், தங்கம் தென்னரசு ''எனக்கு கல்யாணமான மூணு வருஷத்துல எங்கப்பா இறந்துட்டார். அப்போ அரசியலுக்கு நான் வர வேண்டிய சூழ்நிலை. இன்ஜினீயரா இருந்த நான், நல்ல வேலையை விடணுமானு யோசிச்சேன். அப்போ என் மனைவிதான், 'நீங்க நல்ல இன்ஜினீயரா இருந்தா, எனக்கும் உங்க குழந்தைகளுக்கும்தான் பெருமை. ஆனா நல்ல அரசியல்வாதியா இருந்தா எல்லோருக்கும் பெருமை. அதனால நிறைய பொதுச் சேவை செய்ய முடியும்’னு சொல்லி, என்னை தெளிவுபடுத்தினாங்க. அன்னியிலயிருந்து இன்னிக்கு வரைக்கும் என் அரசியல் வாழ்க்கைக்கு துணையாயிருக்கிறது என் மனைவி மணிமேகலைதான்.

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் !

அரசியல்ல நான் மேல வரவர, எனக்கும் வீட்டுக்குமான இடைவெளி அதிகமானது. ஆரம்பத்துல வருத்தப்பட்ட அவங்க, என்னையும் என் அரசியலையும் சட்டுனு புரிஞ்சிக்கிட்டு, வீட்டு நிர்வாகத்தை கையில எடுத்துக்கிட்டாங்க."

அப்போ... அரசரும் சொல்லியாச்சு, அமைச்சர்களும் சொல்லியாச்சு... குடிமகன்கள் என்ன சொல்றாங்க?

கேளுங்க உங்க கணவரை!
- லாவண்யா

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் !
 
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் !
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் !