Published:Updated:

அன்பு மாறாத ஐம்பதாண்டு கால வாழ்க்கை !

அன்பு மாறாத ஐம்பதாண்டு கால வாழ்க்கை !

அன்பு மாறாத ஐம்பதாண்டு கால வாழ்க்கை !

அன்பு மாறாத ஐம்பதாண்டு கால வாழ்க்கை !

Published:Updated:

அன்பு மாறாத ஐம்பதாண்டு கால வாழ்க்கை !
அன்பு மாறாத ஐம்பதாண்டு கால வாழ்க்கை !
அன்பு மாறாத ஐம்பதாண்டு கால வாழ்க்கை !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

-ஓர் ஆதர்ச தம்பதி !

நேசம், அக்கறை, நிம்மதி, நிறைவு என இல்லற வாழ்க்கைக்கான அத்தனை அம்சங்களும் முதுமைவரை குன்றாமல் நம் கூட வந்தால், அதைவிட சொர்க்க சுகம் வேறேது?

அப்படி, அன்பில் ராஜா- ராணி வாழ்க்கையை சுவைத்துக் கொண்டிருக்கும், மண வாழ்வில் பொன்விழா கொண்டாடும் பழம்பெரும் நடிகையான எம்.என்.ராஜம், பிரபல பாடகர் ஏ.எல்.ராகவன் தம்பதியை, ராயப்பேட்டையில் உள்ள அவர்களின் அபார்ட்மென்ட் வீட்டில் சந்தித்தோம். புதுப்பெண் போல் உற்சாகத்துடன் பேசத் தொடங் கினார் எம்.என்.ராஜம்.

அன்பு மாறாத ஐம்பதாண்டு கால வாழ்க்கை !

''அந்தக் காலத்துல பொண்ணுங்க பேச்சையெல்லாம் பெத்தவங்க கேட்க மாட்டாங்க. ஆனா, என் பெற்றோர், நடிப்புல எனக்கு இருக்குற ஆர்வத்தைப் புரிஞ்சுகிட்டு ஏழு வயசுல என்னை மதுரை, ஸ்ரீ மங்களா கான சபா நாடகக்குழுவுல சேர்த்துவிட்டாங்க. 1956-ல 'புதையல்'ங்கிற படம் மூலம் சினிமாத்துறையில காலடி எடுத்து வெச்சேன்'' என்றவர், அந்த 'பிளாக் அண்ட் வொயிட்' திரையுலகின் அனுபவங்களை நவரசம் ததும்பப் பகிர்ந்து கொண்டார்...

''கேமரா முன்னால நின்னதும் டயலாக் எல்லாம் மறந்துடும். உடனே, சிவாஜி அண்ணன்கிட்ட போய்தான் எங்க டயலாக்கை கேப்போம்! அந்த அளவுக்கு அவரோட வசனம் மட்டுமில்லாம, ஒட்டுமொத்த ஆர்ட்டிஸ்டுங்களோட டயலாக்கையும் ஒப்பிப்பாரு. அவர், தமிழ் சினிமாவுக்கு கிடைச்ச வரம்!

'நாடோடி மன்னன்' படத்துல, எம்.ஜி.ஆர். அண்ணன், 'நாடோடியா இருந்த நான் மன்னனாயிருக்கேன். நீ நம்பறியா சகோதரி'னு எங்கிட்ட ஒரு சீன்ல கேப்பாரு. அதுக்கு, 'நான் மட்டும் இல்ல, இந்த நாடே உங்கள நம்பித்தானே இருக்கு'னு சொல்லுவேன். அதுக்கப்புறம் அவர் நிஜமாவே முதலமைச்சரா வந்ததும், 'ராஜம் சொன்னது பலிச்சிடுச்சு'னு எல்லார்கிட்டயும் சொல்லி மகிழ்ந்தார்.

'ரத்தக்கண்ணீர்' படத்துல, 'காந்தா'ங்கற வில்லி கேரக்டர் எனக்கு திருப்புமுனையா அமைஞ்சது. ஒரு சீன்ல நான் எம்.ஆர்.ராதா அண்ணனை காலால எட்டி உதைக்கணும். ஆனா, 'ஐயோ... முடியாது'னு நான் முரண்டுபிடிக்க, ஷ¨ட்டிங்கே கேன்சலாயிடுச்சு. கிருஷ்ணன் பஞ்சு சார், 'இது வெறும் நடிப்புதாம்மா. நீ நடிக்கலேனா அந்தக் கேரக்டருக்கு வேற ஒருத்தரை மாத்த வேண்டியதுதான்'னு பயம் காட்ட, ரொம்பச் சங்கடப்பட்டு நடிச்சேன். அப்ப அந்த காட்சி மக்கள் மத்தியில பிரபலமா பேசப்பட்டது. இப்ப, 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்துல வடிவேலுக்கு அம்மாவா நடிச்சதுதான் கடைசி!'' என்று சொல்லிவிட்டு, சினிமா வட்டத்தில் தன்னுடைய சம காலத்து நெருங்கிய தோழிகளைப் பற்றிச் சொல்லி பரவசமானார்.

அன்பு மாறாத ஐம்பதாண்டு கால வாழ்க்கை !

''சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி மூணு பேருமே என் நெருங்கிய தோழிகள். இன்னிக்கும் சரோஜாதேவி சென்னைக்கு வந்தா என்னைப் பார்க்காம போகமாட்டா. அப்படி ஒரு பாசம்'' என்றவரிடம் குடும்பத்தைப் பற்றி கேட்டதும், முகத்தில் அப்படியரு பூரிப்பு!

''கல்யாணத்துக்கப்புறம் இவர் என்னைத் தொடர்ந்து நடிக்க ஊக்கப்படுத்தினதோட, குழந்தைங்களுக்கும் பொறுப்பான அப்பாவா இருந்து கவனிச்சிக்கிட்டாரு. நானோ, அவரோ நடிப்புக்காக வெளியூர்ல நெடுநாள் தங்க நேர்ந்தாலும், போன்ல அடிக்கடி அன்பா விசாரிச்சுப்போம். 'ஆஹா, இத்தனை பிஸியிலும் நம்மை நினைவு வெச்சிருக்காரே'ங்கிற சிலிர்ப்பு, பாசத்தின் அடர்த்தியை இன்னும் அதிகமாக்கிடும். ஒரு நடிகையா இருந்த நான், குடும்ப வாழ்க்கையும் தடுமாறாம பார்த்துக்கிட்டதுக்கு, அவரோட புரிதலும் அன்பும்தான் காரணம். அந்த அன்பு மாறாம இந்த ஐம்பது வருஷமா என்னைத் தாங்கிட்டு இருக்காரு!'' என்று கணவரைப் பார்க்க...

''ஷ¨ட்டிங் முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வந்து கிச்சன்குள்ளதான் நுழைவா ராஜம். அவ்ளோ ருசியா சமைப்பா. சமையலோட அன்பையும் கலந்து பரிமாறுவா. ஒண்ணு தெரியுமா... ஹோட்டல் பக்கமே நாங்க போனதில்லை!'' எனும் ஏ.எல்.ராகவனுக்கு மனைவி பற்றி அவ்வளவு பெருமை!

''இவரோ கம்பீர குரல்ல 'குலாம் அலி'யோட கஜல் பாடுவார் பாருங்க, அப்பப்பா, ஆயுசுக்கும் அதுபோதும் எனக்கு!

எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். பேரனும் பேத்தியும் இன்ஜினீயரிங் படிக்கிறாங்க. இப்போ பசங்களும், அவங்க குடும்பம், குழந்தைங்க, வேலைனு வெவ்வேறு இடத்துல வசிக்க வேண்டியிருக்கு. ஆனா, காலத்தால பிரிக்க முடியாதது கணவன் - மனைவி உறவுதான்'' என்ற ராஜம் அன்பின் மிகுதியில் கண்கலங்க, அவர் கரம் பற்றிய ராகவன்,

''தினமும் காலைல வாக்கிங், ஆரோக்கியமான, அளவான சாப்பாடு, கோயில், பிள்ளைங்களோட பாச உரையாடல்னு... எல்லாத்துக்கும் மேல எனக்கு ராஜம், ராஜமுக்கு நான்... சந்தோஷமா ஓடுது வாழ்க்கை!'' என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்.

ஒரு ஆதர்ச தம்பதியை சந்தித்த ஆத்ம திருப்தி நமக்கு!

- ரேவதி
படம் வீ.நாகமணி

அன்பு மாறாத ஐம்பதாண்டு கால வாழ்க்கை !
 
   
   
அன்பு மாறாத ஐம்பதாண்டு கால வாழ்க்கை !
அன்பு மாறாத ஐம்பதாண்டு கால வாழ்க்கை !