Published:Updated:

லிசி,இப்ப ரொம்ப ரொம்ப பிஸி !

லிசி,இப்ப ரொம்ப ரொம்ப பிஸி !

லிசி,இப்ப ரொம்ப ரொம்ப பிஸி !

லிசி,இப்ப ரொம்ப ரொம்ப பிஸி !

Published:Updated:

லிசி,இப்ப ரொம்ப ரொம்ப பிஸி !
லிசி,இப்ப ரொம்ப ரொம்ப பிஸி !
லிசி,இப்ப ரொம்ப ரொம்ப பிஸி !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 

'விக்ரம்' படத்தில் பார்த்த அதே சிரித்த முகமாகத்தான் இப்போதும் வரவேற்கிறார் லிசி.

புகழ் பெற்ற நடிகை, சென்னையின் பிரபலமான 'ஃபோர் பிரேம்ஸ்' ப்ரிவ்யூ தியேட்டரின் மேனேஜிங் டைரக்டர், பிரபல தென் இந்திய மொழிப் படங்கள் இயக்குனர் ப்ரியதர்ஷனின் மனைவி இப்படிப்பட்ட பந்தாக்கள் எதுவும் இன்றி மிகச் சாதாரணமாகத் தரையில் அமர்ந்து கொள்கிறார்.

"ஒரு வீட்டுல அம்மாவும், அப்பாவும் வேலைக்குப் போகலாம், சம்பாதிக்கலாம். ஆனா... அது வீடு, குழந்தைகளுக்கான நம் பொறுப்புகளை டிஸ்டர்ப் பண்ணிடாம பார்த்துக்கணும். எனக்கு அந்த பேலன்ஸிங் ஃபார்முலா கை வரல. அதனால, கல்யாணத்துக்கு அப்பறம் நடிக்கறத நிப்பாட்டிட்டேன். அப்பறம், குழந்தைங்க ஸ்கூலுக்கு போன பிறகு, எல்லாரையும் போல எனக்கும் நிறைய நேரம் வீணா கழிஞ்சது. எனக்குத் தெரிஞ்ச ஒரே விஷயம், சினிமாதான். அதான்... இந்த சினிமாவுக்கே திரும்பி வந்துட்டேன். இந்த முறை நடிகையா இல்ல... நிர்வாகியா!'' எனும் லிசி இப்போது சினிமாவில் திரைக்குப் பின்னால் தனக்கென சில அடையாளங்களை கோத்துள்ளார்.

லிசி,இப்ப ரொம்ப ரொம்ப பிஸி !

ஃபோர் ஃப்ரேம்ஸ் சவுண்ட் எடிட்டிங் ஸ்டூடியோ எம்.டி., ஃபோர் ஃப்ரேம்ஸ் ப்ரிவ்யூ தியேட்டர் எம்.டி., சினிமாவுக்கான 'விஜய்' அவார்ட்ஸ் ஜூரி, 'எய்ட்டீஸ் கிளப்' நிறுவனர் என பிஸியோ பிஸியாக இருக்கிறார் லிசி. அந்த பொறுப்புகள் பற்றி சில வார்த்தைகளுக்கு மிகாமல் பேசினார் லிசி.

"கல்யாணம், குழந்தைனு இருந்த நான் ரெஃப்ரெஷ் ஆயிட்டு வந்து தொடங்கின முதல் விஷயம்... சவுண்ட் எடிட்டிங் ஸ்டூடியோ. அதுல என்னோட பங்களிப்பு நிறைவாப் பட, அடுத்ததா ஒரு நவீன 'ப்ரிவ்யூ தியேட்டர்' ஆரம்பிக்கற என்னோட கனவை 'ஃபோர் ஃப்ரேம்ஸ்' மூலமா அடைஞ்சேன்.

நடிகைக்கு மேக்கப் போடறதுல இருந்து டிரெஸ் எடுத்துக்கொடுக்கற வரைக்கும் உதவிக்கு ஆட்கள் இருப்பாங்க. ஆனா, ஒரு நிர்வாகியா இங்க எனக்கான பொறுப்புகள் அதிகம். அப்பாவியா இருந்தா ஏய்ச்சுட்டுப் போடுவாங்க. கொஞ்சம் அதட்டி வேலை வாங்கலாம்னா கெட்ட பெயர்தான் மிஞ்சும். தட்டிக் கொடுத்து, வேலை வாங்கணும். அதேசமயம் வேலை பிழியக்கூடாது. இப்போ நான் அதை நல்லாவே கத்துக்கிட்டேன்'' என்றவர்,

"பொதுவா ஆண்களைப் போல வேலை, தொழில்ல மட்டும் கவனம் குவிக்க முடியாம பெண்களுக்கு பல கடமைகள் இழுக்கும். சமையல் கேஸ் புக் பண்றது, மாமியாரை ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போறது, சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு மொய் எழுதறதுனு அவங்களுக்கு ஓடிக்கிட்டு இருக்க ஏகப்பட்ட எண்ணங்களுக்கு நடுவுலதான் அவங்க வேலையையும் பார்க்கறாங்க. ஜெயிக்கவும் செய்றாங்க'' என்று 'தம்ஸ் அப்' செய்தவர், எண்பதுகளின் கதாநாயகிகளால் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள அந்த 'எய்ட்டீஸ் கிளப்' பற்றி பகிர்ந்து கொண்டார்.

"சமீபத்துல நடிகை மீனாவோட நிச்சயதார்த்தத்துலதான் எங்க 'கேங்'-ஐ பார்க்க முடிஞ்சது. நானும் ராதிகாவும் பேசிட்டு இருக்கும்போது, சுமலதாவைப் பார்த்தேன். அவங்களோட புரோக்ராம் கீழ் ஹால்ல நடக்குதுனு கூப்பிட்டாங்க. அங்க போனா, பதினெட்டு வருஷம் கழிச்சு மோகனைப் பார்த்தேன். என்னோட ரெண்டாவது தமிழ் படத்தின் ஹீரோ அவர். அப்பறம் சுஹாசினியைப் பார்த்தேன். எல்லோரையும் ஒரே சமயத்தில் பார்த்ததும் ஏதோ அந்தக் காலத்துக்கே திரும்ப போன மாதிரி நாங்க எல்லாருமே அவ்ளோ இளமையா உணர்ந்தோம். சுஹாசினிகிட்ட, 'நாமெல்லாம் இதே சென்னையிலதான் இருக்கறோம். ஆனா, ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கறதில்லை'னு வருத்தப்பட்டேன். அப்போ அவங்கதான் எண்பதுல நடிச்ச எல்லா ஹீரோஸ், ஹீரோயின்ஸையும் ஒரு கெட்-டுகெதருக்குக் கூப்பிடலாம்னு சொல்லி, ஏற்பாட்டை செஞ்சாங்க. மீட்டிங் ஸ்பாட்... எங்க வீடுதான்! எய்ட்டீஸ்ல கலக்கிட்டு இருந்த ஹீரோ, ஹீரோயின்ஸ்னு மொத்தம் இருபத்தி இரண்டு பேர் கூடினோம். அந்த சுப தினத்துலதான் எங்க 'எய்ட்டீஸ் கிளப்' உருவாச்சு'' என்று பரவசரப்படும் லிசிக்கு இரண்டு வாரிசுகள். மகள், ப்ளஸ் டூ, மகன் டென்த் என்று சிங்கப்பூரில் படித்துக் கொண்டிருக்கிறார்களாம் - சினிமா வாசமே இல்லாமல்.

"கிரியேட்டிவ் ஃபீல்ட்ல இருக்கவங்களுக்கு பர்சனலா எந்தத் தொந்தரவும் இல்லாம இருந்தாதான் அவங்களோட படைப்புல அவங்களால கவனம் செலுத்த முடியும். எனக்கும் என் கணவருக்கும் இந்தப் புரிதல் இருக்கறதுதான் எங்களை பத்திரமா பார்த்துக்குது!'' என்று பூரித்தவரிடம், சமீபத்தில் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்ற அவர் கணவரின் 'காஞ்சிவரம்' படத்துக்கு வாழ்த்துகள் சொன்னால், இன்னும் பூரிக்கிறார்.

"உங்க வாழ்த்தை கண்டிப்பா அவர்கிட்ட சேர்த்துடறேன்!'' என்றவரிடம்,

"இல்ல... இந்த வாழ்த்து அவரோட வெற்றிக்கு காரணமா இருக்கற லிசிக்கு!'' என்றோம்!

அழகாகச் சிரிக்கிறார் லிசி... 'விக்ரம்' படத்தில் பார்த்தது போலவே!

- லாவண்யா
படங்கள் என்.விவேக்

லிசி,இப்ப ரொம்ப ரொம்ப பிஸி !
 
லிசி,இப்ப ரொம்ப ரொம்ப பிஸி !
லிசி,இப்ப ரொம்ப ரொம்ப பிஸி !