Published:Updated:

கற்கை நன்றே.... கற்கை நன்றே...!-

கற்கை நன்றே.... கற்கை நன்றே...!-

கற்கை நன்றே.... கற்கை நன்றே...!-

கற்கை நன்றே.... கற்கை நன்றே...!-

Published:Updated:

"கற்கை நன்றே...கற்கை நன்றே..."
கற்கை நன்றே.... கற்கை நன்றே...!-
கற்கை நன்றே.... கற்கை நன்றே...!-

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'படிக்காத'மேதைகள் பளீர் ஸ்டேட்மென்ட்
கற்கை நன்றே.... கற்கை நன்றே...!-

'ன்னைப் போல் ஒருவனும் இல்லை' என்று சொல்லும் அளவுக்கு சினிமா துறையில் நடிப்பு, நடனம், கதை, வசனம், பாடல், தொழில்நுட்பம், இயக்கம், இத்யாதி... இத்யாதி என்று அவ்வளவும் தெரிந்த, நிறைந்த பல்கலைக்கழகம் கமல்ஹாசன்! தனித்துவமான இந்த நட்சத்திரத்தின் சினிமா வாழ்க்கை ஐம்பதாண்டு கால நிறைவை எட்டுவதைத் திரையுலகமே இன்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

அந்த நிறைகுடம்... ''ஒரு சமயம், 'ஃப்ளையிங் கிளப்'பில் சேர விரும்பி விண்ணப்பித்திருந்தேன். ஆனால், அடிப்படை கல்வித் தகுதி இல்லை என்பதற்காக என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது. இங்கே தேர்வு எழுதித்தான் புத்திசாலி என்று நிரூபிக்க வேண்டிய நிலை இருக்கிறது. அதனால், அடிப்படை கல்வித் தகுதி என்பது நிச்சயம் தேவை! என் மகள்களிடம் 'முதலில் படிப்பை முடித்துவிடுங்கள்' என அடிக்கடி சொல்லி வருகிறேன்" என்று சமீபத்தில் வெளிப்படையாகப் பேசியிருந்தது... பலரின் கவனத்தை ஈர்த்தது.

பெரிதாக படிக்காவிட்டாலும், சமூகத்தில் தத்தமது துறையில், தமக்கென தனி அடையாளங்களை ஏற்படுத்திக் கொண்டவர்கள் எத்தனையோ பேர். ஆனால், அவர்களுக்குள் 'படிப்பு' குறித்த ஏக்கம், மாறுபட்ட பார்வை என்று ஒவ்வொருவிதமான உணர்வுகள் ஓடிக்கொண்டேதான் இருக்கும். சில வி.ஐ.பி-கள் அதையெல்லாம் இங்கே பகிர்கிறார்கள்!

தென்னிந்திய மொழிப்படங்களில் கொடிகட்டிப் பறந்தவர் 'புன்னகை அரசி' கே.ஆர்.விஜயா. இப்போதும் தமிழ், மலையாளம் என பல படங்களில் நடித்து வருகிறார்.

''கேரளாவுல நாலைஞ்சு பொண்ணுங்களை கொண்ட நடுத்தர குடும்பத்துல மூத்த பொண்ணா பொறந்த எனக்கு, ஸ்கூலுக்குப் போற அளவுக்கு அப்போ வசதியும், வாய்ப்பும் அமையல.

நடிகையாகி ஷ¨ட்டிங் போனப்போ... யாராவது பக்கத்துல உக்காந்து ஏதாச்சும் ஆங்கில நாவலை படிச்சிட்டு இருப்பாங்க. அது என்னனு தெரிஞ்சுக்க, புரிஞ்சுக்க முடியாம நான் எனக்குள்ளயே சுருங்கிப்போவேன். பொது இடங்கள்ல பேசறவங்ககிட்ட தாழ்வு மனப்பான்மையில சகஜமா திரும்பப் பேசத் தெரியாது. அப்ப எல்லாம், 'நாமளும் படிச்சிருந்தா தன்னம்பிக்கை கிடைச்சிருக்கும்'னு வருத்தப்படுவேன்.

கற்கை நன்றே.... கற்கை நன்றே...!-

என்னை ஏதாவது ஸ்கூல், காலேஜுக்கு எல்லாம் பேசக் கூப்பிடுவாங்க. இப்போ இருக்கற குழந்தைங்க ரொம்ப ஷார்ப். படிப்பறிவில்லாத நான் அவங்ககிட்ட போய் பேசறதுக்கு தயங்கிட்டே அதையெல்லாம் ஒப்புக்கறது இல்ல.

ம்ம்ம்... படிப்போட முக்கியத்துவத்தை படிச்சவங்களவிட எங்கள மாதிரி படிக்காதவங்கதான் அதிகமா உணர்ந்திருக்கோம்!"

ண்டுக்கு இருநூறு கோடிக்கு மேல் வருமானம், இரண்டாயிரம் தொழிலாளர்கள், ஆறு கம்பெனிகளுக்குச் சொந்தக்காரர் என்று பின்னலாடை தயாரிப்பில் இந்தியா முழுவதும் தன்னுடைய முத்திரை பதித்து வருகிறார் 'வைகிங்' பின்னலாடை மற்றும் வேஷ்டி-சட்டை தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஈஸ்வரன்.

''ரெண்டாங்கிளாஸோட நின்னுட்ட நான், பக்கத்து ஊரு பனியன் கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். பத்து வருஷம் அங்க எல்லா வேலையும் கத்துக்கிட்டேன். அதுக்கப்புறம் சின்ன எடத்துல பனியன் கம்பெனி ஆரம்பிச்சேன். அப்ப எல்லாம் பேங்க்ல பணம் போடுறது, எடுக்கிறது, செக் ஃபில் பண்றது இதெல்லாம் தெரியாம தடுமாறினேன். அப்போதான், முதல் முறையா 'ஒழுங்கா படிச்சிருக்கலாமோ'னு மனசுக்குள்ள ஒரு நெருடல். அதுக்கப்புறம் மூச்சு விடுறதை பத்திகூட நினைக்காம கடுமையா உழைச்சு நல்ல நிலைமைக்கு வந்துட்டேன். ஆனாலும் நாம படிக்கலைங்கிற எண்ணம் மனசு ஓரத்துல இருக்கத்தான் செய்யுது.

கற்கை நன்றே.... கற்கை நன்றே...!-

இப்ப பாருங்க, இந்தியா முழுவதும் நல்ல பேர் வாங்கியிருக்கற எங்க நிறுவனம், வெளிநாட்டுல கிளை பரப்பாம இருக்கறதுக்கு காரணம், எனக்கு ஆங்கிலம் தெரியாதுங்கிறதுதான். சொல்லப்போனா, பல வெளிநாடுகளுக்கு போறப்போ, ஏர்போர்ட்ல இமிகிரேஷன் ஃபார்ம்ல எழுதுறதுக்குகூட ரொம்ப சிரமப்பட்டிருக்கேன். என்னைப் பொறுத்தவரைக்கும் வாழ்கையில நமக்கு எல்லா வளம் கிடைச்சுட்டாலும், படிப்பு மட்டும் இல்லைனா அந்த வாழ்க்கை பூரணமாகாது!"

பன்னிரண்டு வயதில் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து, நடனத்துறையில் அழுத்தமாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் கலா மாஸ்டர். இப்போது 'மானாட மயிலாட' தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இயக்குநராகவும் 'ஹிட்' பார்ட்டிதான்.

''சின்ன வயசுலேயே எனக்கு டான்ஸ் மேல ஈடுபாடு இருந்ததுனால படிப்பை பத்தி பெருசா அலட்டிக்கல. ஆனா, பத்து வருஷத்துக்கு முன்னால 'மிஸ் வேர்ல்ட்' போட்டி சென்னையில நடந்தப்போ, அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஏகப்பட்ட மாடல்ஸ§க்கு டான்ஸ் சொல்லிக்கொடுக்கற வாய்ப்பு, பொறுப்பு எனக்கு கிடைச்சிருந்தது. அப்போ எனக்கு இங்கிலீஷ் ஓரளவுதான் பேசத் தெரியும். அந்த இங்கிலீஷ் அவங்களுக்குப் புரியல. எத்தனை மணி நேரத்துக்கு சைகையிலேயே டான்ஸ் சொல்லிக் கொடுக்க முடியும்? ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். அப்பதான் 'நாம படிச்சிருக்கலாமே'னு ஃபீல் பண்ணினேன்.

கற்கை நன்றே.... கற்கை நன்றே...!-

என் ரெண்டரை வயசு பையன் வித்யூ, எந்தச் சூழ்நிலையிலயும் படிப்பு மேல விருப்பம் இல்லாதவனா மாறிடக்கூடாதுங்கறதுல இப்போ ரொம்ப கவனமா இருக்கேன். என் கஷ்டம் அவனுக்கும் வேண்டாம்!"

நெடுந்தூர பயணங்களுக்கு இப்போது 'மோஸ்ட் வான்டடா'க கொண்டாடப்படும் 'வால்வோ' சொகுசு பஸ்களை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்திய கே.பி.என். டிராவல்ஸின் உரிமையாளர் கே.பி.நடராஜனிடம் இப்போது கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்குகின்றன. அறுபது வயதான நடராஜன், இப்போது வசிப்பது சொந்த ஊரான சேலத்தில்!

''பஸ் க்ளீனரா வேலை பார்த்து ஒரு கட்டத்துல பஸ் டிரைவராகி, ஒரு பஸ்-ஐ வாங்குற அளவுக்கு முன்னேறினேன். இன்னும் தடதடனு வேகமெடுத்து உழைச்சேன். இப்போ எங்கிட்ட இருக்கற வால்வோ பஸ் எல்லாம் ஸ்வீடன் நாட்டுத் தயாரிப்பு. அதை ஓட்டற டிரைவர்களே கொஞ்சமாவது படிச்சிருக்கணும். ஏன்னா, ஒவ்வொரு பஸ்ஸ§லயும் டிஸ்ப்ளே போர்டுல ஓடும். கூடவே, 'உன்னோட பஸ் ஓட்டற டிரைவருக்கே படிப்பு அவசியமா இருக்கு. நீ படிக்காம விட்டுட்டுயேடா நடராஜா'னு அப்பப்போ வருத்தம் வரும்.

முன்ன எல்லாம் பஸ் கவுன்ட்டருக்கு வந்து டிக்கெட் வாங்குவாங்க. இப்ப எல்லாம் ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்றதால, எங்களோட கே.பி.என்-லயும் ஒரு வெப்சைட் வசதி ஏற்பாடு பண்ணியிருக்கோம். ஆனா, அந்த ஆன்லைன் முகவரியைத் தவிர எனக்கு அதுல எதுவும் தெரியாது. படிப்பறிவு இருந்தா என்ன, ஏதுனு இதையெல்லாம் நாமளும் புரிஞ்சுக்கலாமேனு தோணும். நான் படிச்சிருந்தா, அந்த நவீன வசதிகளை எல்லாம் பயன்படுத்தி என் கம்பெனியை நிச்சயமா இன்னும் உயரத்துக்கு எடுத்துட்டுப் போயிருப்பேன். உழைப்போட படிப்பும் சேர்ந்தா அதோட பலனே தனிதானே!"

கற்கை நன்றே.... கற்கை நன்றே...!-

கையில் இரண்டு முருங்கைக்காய்களை கொடுத்தால்கூட அதிரடி இசையைக் கிளப்பிவிடுவார் 'டிரம்ஸ்' சிவமணி. சென்னையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சிவமணிக்கு படிப்பு, எஸ்.எஸ்.எல்.சி.!

''சின்ன வயசுல எனக்கு ஸ்கூலைவிட சினிமாவுல டிரம்மரா இருந்த எங்கப்பாவோட சேர்ந்து ரெக்கார்டிங் ஸ்டுடியோ போறதுலதான் விருப்பம் அதிகம். ஒரு வழியா (!) டென்த் முடிச்சுட்டு, நானும் இசை சேவையாற்ற கிளம்பி, ஒரு கட்டத்துல கே.எம். மகாதேவன், டி.ராஜேந்தர், இளையராஜானு பலர்கிட்டயும் வேலையில பிஸியாகிட்டேன்.

இசையில வளர வளர நம்ம உலகம் விடிவடைஞ்சப்போ, ஒரு கட்டத்துல கம்யூனிகேஷன் பிராப்ளம் வர ஆரம்பிச்சது. அது இப்போ வரை தொடருது. எனக்கு இங்கிலீஷ் அவ்வளவா பேசத் தெரியாது. எனக்கு வர்ற மெயிலுக்கு எல்லாம் என் மனைவிதான் பதில் சொல்வாங்க. இதையெல்லாம் மனசுல வைச்சுதான் என் பொண்ணுக்கும், பையனுக்கு அவங்க விரும்புற அளவுக்கு கல்வியை கொடுக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன்.

நான் பெருசா படிக்கல. என் பசங்களுக்கு அந்த வசதியை செஞ்சு கொடுத்திருக்கேன்ங்கிற திருப்தியில அந்த வருத்தத்தை ஈடு செய்யப் பார்க்கறேன்!"

- ம.பிரியதர்ஷினி

கற்கை நன்றே.... கற்கை நன்றே...!-
 
கற்கை நன்றே.... கற்கை நன்றே...!-
கற்கை நன்றே.... கற்கை நன்றே...!-