Published:Updated:

அன்று கவர்ச்சிநாயகி.... இன்று சமூகசேவகி....

அன்று கவர்ச்சிநாயகி.... இன்று சமூகசேவகி....

அன்று கவர்ச்சிநாயகி.... இன்று சமூகசேவகி....

அன்று கவர்ச்சிநாயகி.... இன்று சமூகசேவகி....

Published:Updated:

அன்று கவர்ச்சிநாயகி... இன்று சமூகசேவகி....
அன்று கவர்ச்சிநாயகி.... இன்று சமூகசேவகி....
அன்று கவர்ச்சிநாயகி.... இன்று சமூகசேவகி....

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரமிக்க வைக்கும் 'டிஸ்கோ' சாந்தி

ஒரு நடிகையின் பர்சனல் பக்கங்களை பெரும்பாலும் 'நெகட்டிவ் பப்ளிசிட்டி'யில் பார்த்தே பழக்கம் நமக்கு. ஆனால், நடிகை 'டிஸ்கோ' சாந்தி, நமக்கு 'டபுள் பாஸிட்டிவ்' பக்கங்களை வாசிக்கக் கொடுத்து, 'வெல்டன்' வாங்குகிறார்!

''டிஸ்கோ சாந்தியா..? 'ரோஜா மலரே ராஜகுமாரி... ஆசைக்கிளியே அழகிய ராணி'னு பாடின 'வீரத்திருமகன்' சி.எல். ஆனந்தனோட பொண்ணுதானே?'', "கவர்ச்சி நடிகைதானே?'', "நம்ம பிரகாஷ்ராஜ் மனைவி லலிதாவோட அக்காதானே?!” என்றெல்லாம் அவரை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள்தானே?! இங்கு நாம் பகிர்ந்து கொள்ளப் போவது அவருக் கான இன்னும் மரியாதையான ஒரு அடையாளம் பற்றி!

அன்று கவர்ச்சிநாயகி.... இன்று சமூகசேவகி....

ஆம்... ஆந்திராவில் மூன்று கிராமங்களைத் தத்தெடுத்திருப்ப தோடு, அங்குள்ள குழந்தைகளின் நலனுக்காகவும் பல பயனுள்ள செயல்களை செய்து வருகிறார் 'டிஸ்கோ' சாந்தி! யாரிடமும் எந்த நன்கொடையும் பெற மறுத்து, பெரிதாக விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த நல்ல காரியத்தை செய்துகொண்டிருக்கிறார் சாந்தி.

ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஹைதராபாத், ஜூப்ளி ஹில்ஸில் இருக்கும் அவரது வீட்டில் சந்தித்தோம்.

வாசல்வரை இறங்கி வந்து வரவேற்றவரை நாம் திகைப்புடன் பார்க்க, புரிந்து கொண்டவராக, "கொஞ்சம் (!) வெயிட் போட்டுட்டேன்ல?!'' என்றபடி வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். ஆரம்ப சில நிமிடங்கள் ஃப்ளாஷ்பேக்குக்கு அர்ப்பணம்!

அன்று கவர்ச்சிநாயகி.... இன்று சமூகசேவகி....

"எங்க வீட்டுல நாங்க மொத்தம் ஏழு பசங்க. எங்கப்பா புகழோட உச்சியில இருந்தப்போ, பணம் கொட்டுச்சு. அப்பறம் அப்பாவுக்கு பட வாய்ப்புகள் சரியா அமையாமப் போக, நிலைமை தலைகீழாச்சு. நாங்க மூணு நாள் தொடர்ந்து சாப்பிடாம இருந்த காலமெல்லாம்கூட உண்டு. அதெல்லாம்தான் இந்தப் பணத்து மேல பெருசா ஈடுபாடு எதையும் இல்லாம செய்துடுச்சு...'' என்றவர், கணவர் ஸ்ரீஹரியின் எபிஸோடுக்கு வந்தார்.

"நான் எல்லா மொழிகள்லயும் நடிச்சிட்டிருந்த காலம் அது. ஒரு தெலுங்குப் பட ஷ¨ட்டிங்... நாலு வில்லன்கள் என்னைத் துரத்திட்டு வர்ற மாதிரி ஒரு ஸீன். பிரேக்ல மூணு வில்லன்களும் (!) என்கிட்ட சகஜமா பேசிட்டு இருந்தாங்க. ஆனா, ஒரு வில்லன் மட்டும் உம்மணா மூஞ்சியா, தனியா உட்கார்ந்துட்டு இருந்தாரு. அவர்தான் என் பாவா (கணவரை அப்படித்தான் அழைக்கிறார்)! அதுவே அவர் மேல ஒரு ஈர்ப்பை உண்டாக்க... பரஸ்பரம் அறிமுகமாகி, ஃப்ரெண்ட்ஸாகி, காதலர்களானோம்.

ஒரு கட்டத்துல கல்யாணம் பண்ணிக்கறதுனு முடிவெடுத்தோம். ஆனா, அதுக்கு முன்ன எங்க ரெண்டு பேருக்குமே சில கடமைகள் இருந்தது. என் கூடப் பிறந்தவங்களை செட்டில் பண்ண வேண்டிய பொறுப்பு எனக்கு... நாலு வில்லன்கள்ல ஒருத்தர்ங்கிறத தாண்டி இன்னும் கொஞ்சம் மேல வரவேண்டிய கட்டாயம் அவருக்கு. சில வருஷங்கள் காத்திருந்து, கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அப்பறம் நான் ஹவுஸ் வொய்ஃப் ஆயிட்டேன். அவர் மெயின் வில்லனா வந்து, அப்பறம் ஹீரோவாயிட்டாரு. அன்புலயும் அந்தஸ்துலயும் குறைவில்லாம அமைஞ்சது வாழ்க்கை. அவரைக் கல்யாணம் பண்ணிட்டதோட நான் ஹைதராபாத்லயே செட்டில் ஆயிட்டேன்'' என்று சந்தோஷமாக ஒப்பித்த சாந்தியிடம் 'கிராம தத்தெடுப்பு' பற்றிக் கேட்டோம்.

அன்று கவர்ச்சிநாயகி.... இன்று சமூகசேவகி....

"எனக்குப் பெண் குழந்தைனா ரொம்ப இஷ்டம். சொல்லப்போனா, என்னோட முதல் ரெண்டு பையன்களையும் நான் பெண்ணா பிறக்கணும்தான் எதிர்பார்த்தேன். மூணாவதா என் பொண்ணு அக்ஷரா பொறந்தப்போ, அவ்ளோ சந்தோஷம்! ஆனா, நாலே மாசத்துல அந்த சந்தோஷத்தை ஆண்டவன் பறிச்சுக்கிட்டான். நுரையீரல் கோளாறால அவ இறந்து போயிட்டா...'' - குரலில் கண்ணீர் ஈரம் கலக்கிறது.

"அந்த இழப்புல இருந்து எங்களால வெளிய வரவே முடியல. எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் எங்க பொண்ணு ஞாபகம்தான் வரும். அப்படித்தான் அந்தக் குழந்தைங்களப் பார்க்கும்போதும் வந்தது. அதாவது, ரெண்டு வருஷம் முன்னால ஆந்திராவுல இருக்கற நாராயண்பூர், அனந்தாபூர், லக்ஷ்மாபூர்ங்கற மூணு கிராமங்கள்லயும் குடிதண்ணியில அதிகமான குளோரின் கலந்து, அதைக் குடிச்ச கிராம மக்கள் பல் உதிர்ந்து, கை, கால் எலும்பு மூட்டு எல்லாம் ரொம்ப வீக்காகி நடக்கக்கூட முடியாம, அதிக பாதிப்புக்கு உள்ளானங்கனு அடிக்கடி பேப்பர்ல செய்தி வந்தது. அந்தத் தண்ணியால அதிகம் பாதிக்கப்பட்டவங்க, குழந்தைங்கதான். அவங்க போட்டோவை எல்லாம் பேப்பர்ல பார்த்தப்போ, 'காப்பாத்த முடியாத நோயால நம்ம பொண்ணை பறிகொடுத்துட்டோம். ஆனா, இவங்களுக்கு தண்ணிதானே பிரச்னை? நம்மாள முடிஞ்சதை செய்யலாமே'னு யோசிச்சு நானும் பாவாவும் நேரா அந்த கிராமங்களுக்குப் போய் நிலைமையத் தெரிஞ்சுக்கிட்டோம்.

அந்த ஊர்கள்ல 'வாட்டர் ப்யூரிஃபையர் வைக்கலாம்'னு முடிவு பண்ணி, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவரோட பேசினோம். ஒரு மணி நேரத்துக்கு ரெண்டாயிரம் லிட்டர் தண்ணீரைச் சுத்திகரிக்கற பிரமாண்ட மெஷின்களை அந்தக் கிராமங்கள்ல அமைச்சோம். கிராமத்துல இருக்கற நல்ல தண்ணி டேங்க்ல இருந்து வர்ற தண்ணியை ப்யூரிஃபையர்ல சுத்திகரிச்சு, அதை இன்னொரு டேங்க்ல சேமிச்சு வைச்சு, மக்களுக்கு விநியோகிச்சோம். அந்த தண்ணியை மக்கள் சேமிச்சு வைக்கறதுக்காக இருபது லிட்டர் வாட்டர் கேன்கள் சுமார் ரெண்டாயிரம் வாங்கிக் கொடுத்தோம்.

அன்று கவர்ச்சிநாயகி.... இன்று சமூகசேவகி....

ஆரம்பத்துல மூணு கிராம மக்கள் மட்டும்தான் இந்தத் தண்ணீரை குடிச்சுட்டு இருந்தாங்க. இப்போ பக்கத்துல இருக்கற கிராமத்துல எல்லாம் இருந்தும் வந்து எடுத்துட்டுப் போறாங்க. ஆனா, சிலர் இந்தத் தண்ணியை பிடிச்சுட்டுப் போய் காசுக்கு விக்கறாங்கனு கேள்விப்பட்டப்போ, ரொம்ப வருத்தமா இருந்துச்சு. அதனால, இப்போ இருபது லிட்டர் கேனுக்கு ரெண்டு ரூபாய்னு வசூலிக்கற மாதிரி ஏற்பாடு பண்ணியிருக்கோம். அந்தப் பணத்தை, வாட்டர் டேங்கோட பராமரிப்பு செலவுக்கு மக்களே பயன்படுத்திக்கறாங்க.

குளோரினால ஏற்பட்ட பிரச்னைகள் இப்போ படிப்படியா குறைஞ்சுட்டு வருது. பிறக்கற குழந்தைகள் ஆரோக்கியமா இருக்காங்க. அவங்களோட தாகத்துக்கு நல்ல தண்ணி கொடுத்த திருப்தியில, ஆத்ம திருப்தினா என்னனு தெரிஞ்சுக்கிட்டோம்'' என்று சொல்லும் சாந்தி, மேற்கொண்டும் செய்துவரும் பயனுள்ள செயல்களைப் பற்றி தொடர்ந்தார்.

"இந்த கிராமங்களுக்கு மூணு மாசத்துக்கு ஒரு தடவை விசிட் போவேன். மூணு கிராமத்திலேயும் ரெண்டு கவர்ன்மென்ட் ஸ்கூல் இருக்கு. சத்துணவு போடுறாங்க. ஆனா, அதை வாங்கிச் சாப்பிட நல்ல தட்டு கிடையாது. இது தெரிஞ்சதும்... தட்டு, டம்ளர், ஸ்கூல் யூனிஃபார்ம் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கேன். அதனால அந்தப் பிள்ளைங்களுக்கு என் மேல ரொம்ப பிரியம்!'' என்றவர் கணவர் ஹரியோடு வண்டியில் ஏற... அந்த கிராமங்களுக்கு ஒரு விசிட் ஆரம்பமானது.

சாந்தியைப் பார்த்ததும் கிராமத்து மக்கள் பாசமாக சூழ்ந்து கொண்டார்கள். எட்ட நின்று நன்றி சொல்லாமல், தோழியைப் போல சகஜமாக கலக்கிறார்கள். லக்ஷ்மா பூரை சேர்ந்த பஞ்சாயத்து தலைவி பாவனி ஜெகநாதன், சாந்தியின் உதவிகளைப் பற்றி நம்மிடம் தெலுங்கில் சொல்லி பரவசப்பட்டார்.

''மூட்டுவலியால முன்ன ஊருல ரொம்ப பேரு கஷ்டப்பட்டோம். இப்ப அது கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுகிட்டிருக்கு. அடுத்த தலைமுறை நிச்சயமா எந்தப் பிரச்னையும் இல்லாம பொறக்கும்கிற நம்பிக்கை இருக்கு'' என்று சொன்னார் பாவனி.

இதேபோலவே மூன்று கிராமங்களிலும் மாற்றி மாற்றி பரவசங்கள்தான்.

அத்தோடு, 'எங்க ஊருக்கு லைட் இல்ல. நூத்தி அம்பது ஸ்ட்ரீட் லைட் வேணும்... பஸ் வசதியில்ல... ஒரு மினி பஸ் ஏற்பாடு பண்ணினா நல்லாயிருக்கும்... பசங்களுக்கு படிக்க புத்தகமெல்லாம் இல்ல... வாங்கிக் கொடுங்க...'' - இப்படி உரிமையுடன் கோரிக்கை வைத்த மக்கள், மனுவாகவும் எழுதி சாந்தியிடம் சேர்ப்பித்தனர்.

நம்பிக்கையுடன் அந்த கிராமத்து மக்களும், அடுத்த முயற்சியை கையில் சுமந்தபடி சாந்தியும் விடைபெற்றனர்.

ஒன்றரை மணி நேரப் பயணத்தில், பேக் டு சாந்தி வீடு!

"அக்காவுக்கு வணக்கம் சொல்லுங்க...'' என்று நம்மை தன் இரண்டு பையன்களிடமும் அறிமுகப்படுத்தினார் சாந்தி.

"என் பிள்ளைங்ககிட்ட நான் மூணு விஷயத்துல ரொம்ப கண்டிப்பா இருப்பேன். படிப்பு, சாப்பாடு, மரியாதை! பெரியவங்களைப் பார்த்தா உடனே கால்ல விழுந்து நமஸ்காரம் பண்ணிப்பாங்க. கூடவே, 'அப்பா சம்பாதிக்கற பணம் அவரோடது. நல்லா படிச்சு, வேலைக்குப் போய், உங்க கால்லதான் நீங்க நிக்கணும்'னும் சொல்லியிருக்கேன்'' என்றவர்,

"நான் என் குழந்தைங்களுக்கு ஹண்ட்ரட் பெர்சன்ட் குட் அம்மா! ஒண்ணு தெரியுமா... நான் ஒரு நடிகைங்கறது என் முதல் பையனுக்கு அவன் அஞ்சாவது படிக்கறப்போதான் தெரியும். ஒருநாள் நான் நடிச்ச படத்துல இருந்து ஒரு பாட்டு டி.வி-யில ஓடிட்டு இருந்தப்போ, ஏனோ அந்த நிமிஷத்துல தோணுனதால அவனைக் கூப்பிட்டு காமிச்சேன். 'என்னம்மா டிரெஸ் இது?'னு ஒரு கோபத்தோட என்னைப் பார்த்துட்டுப் போயிட்டான். அதோட என் படம், பாட்டுனு எதையும் நான் என் பசங்ககிட்ட காட்டினதே இல்ல! அதுமட்டுமில்ல... 'டிஸ்கோ'ங்கற பேரும் அவங்களுக்குப் பிடிக்கறதில்ல. அதனால, இப்ப நான் வெறும் சாந்தி மட்டும்தான்'' என்றவர், "சஷாங்... மேகாம்ஷ்... நேரமாச்சு வாங்க சாப்பாடு ஊட்டி விடறேன்...'' என்று அம்மா பறவையானார்!

- ம.பிரியதர்ஷினி
படங்கள் கே.கார்த்திகேயன்

அன்று கவர்ச்சிநாயகி.... இன்று சமூகசேவகி....
 
அன்று கவர்ச்சிநாயகி.... இன்று சமூகசேவகி....
அன்று கவர்ச்சிநாயகி.... இன்று சமூகசேவகி....