Published:Updated:

இதயத்தில் ஓட்டை....குணப்படுத்த முடியுமா?

இதயத்தில் ஓட்டை....குணப்படுத்த முடியுமா?

இதயத்தில் ஓட்டை....குணப்படுத்த முடியுமா?

இதயத்தில் ஓட்டை....குணப்படுத்த முடியுமா?

Published:Updated:

"இதயத்தில் ஓட்டை... குணப்படுத்த முடியுமா?"
 இதயத்தில் ஓட்டை....குணப்படுத்த முடியுமா?
 இதயத்தில் ஓட்டை....குணப்படுத்த முடியுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 

 இதயத்தில் ஓட்டை....குணப்படுத்த முடியுமா?

"இருபத்தி மூன்று வயதாகும் எனக்கு இதயத்தில் ஓட்டை உள்ளது. சிகிச்சை எடுத்து 6 மாதம் ஆகிறது. எந்தவிதமான உணவுகளை உட்கொள்ளலாம்? கடினமான வேலை பார்க்க முடியுமா? இதயத்தில் இருக்கும் ஓட்டையை எவ்வாறு குணமாக்கலாம்?"

டாக்டர் ஸ்ரீ கிருஷ்ணவர்மா, சித்த மருத்துவர்

"இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னை என்றாலே... முதலில் கவனம் செலுத்த வேண்டியது சரியான உணவு முறை, முறையான உடற்பயிற்சி... இவற்றில்தான். இயற்கை சத்து நிறைந்துள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். வைட்டமின்-ஈ சத்து நிறைந்துள்ள காய்கறிகள் (கேரட், பீட்ரூட், கோஸ், வெள்ளரி, முள்ளங்கி, பீர்க்கங்காய், புடலங்காய், கீரை வகைகள்) இதயம் மற்றும் ரத்த ஓட்டம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு மிகவும் நல்லது. வைட்டமின்-சி சத்து நிறைந்த காய் மற்றும் தானியங்கள் (நெல்லிக்காய், முளைகட்டிய பயறு) ரத்தக் குழாய்களை பலப்படுத்தி ரத்த ஓட்டத்தை சீர்செய்து இதயத்தைப் பாதுகாக்கும். ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, மாதுளை, சீதாப்பழம், அன்னாசி போன்றவை இதயத்தின் இயக்கத்தைச் சீர்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக திராட்சைச் சாறு, ஆப்பிள் சாறு, செம்பருத்தி சாறு முதலியவை இதயத்தை பலப்படுத்தும். வரும்முன் காப்பதற்காகவும் இவற்றையெல்லாம் சாப்பிடலாம்.

 இதயத்தில் ஓட்டை....குணப்படுத்த முடியுமா?

உங்களுக்கு ஏற்கெனவே இதய பாதிப்பு இருப்பதால், முடிந்த அளவுக்கு நார்ச்சத்து நிறைந்த பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிக அளவு எடுத்துக் கொள்வது நல்லது. வேக வைத்த பூண்டு தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவும். அதிக அளவு உப்பு, வெள்ளை சர்க்கரை, கிழங்குகள், அசைவ உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்புச் சத்து நிறைந்துள்ள உணவுப் பொருட்கள், துரித உணவு வகைகள் டீ, காபி, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

தினமும் 3 முதல் 3.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் மிதமான உடற்பயிற்சி, யோகாசனம், மூச்சுப் பயிற்சி, 8 மணி நேர உறக்கம் என்று தவறாமல் கடைபிடிக்க வேண்டும். எப்போதுமே கனமான பொருட்களைத் தூக்குவது, அதீத உடற்பயிற்சி இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். இதயத்தில் ஓட்டை என்பது பிறவியிலேயே உண்டாவதால்... அதை முழுவதுமாகக் குணப்படுத்த இயலாது.

நீங்கள் ஆறு மாதமாக மருத்துவரைத் தொடர்பு கொள்ளாமல் இருக்கிறீர்கள். இது மிகவும் தவறு. உடனடியாக மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது அவசரமானது... அவசியமானதும்கூட."

 இதயத்தில் ஓட்டை....குணப்படுத்த முடியுமா?
 
 இதயத்தில் ஓட்டை....குணப்படுத்த முடியுமா?
 இதயத்தில் ஓட்டை....குணப்படுத்த முடியுமா?