Published:Updated:

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

Published:Updated:

"நாங்கள்லாம் பல 'வரலாறு'களை படைச்சிட்டோம்ல...." கேபிள் கலாட்டா
கேபிள் கலாட்டா!
கேபிள் கலாட்டா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சீரியல் சுட்டீஸ்களின் சிக்குபுக்கு கும்மாளம் !

தீபாவளி ஸ்பெஷலுக்கு 'கேபிள் கலாட்டா'வோட சீஃப் கெஸ்ட்ஸ்... சின்னத்திரை குட்டி ஸ்டார்ஸ்!

''எங்க கால்ஷீட் கொஞ்சம் டைட் ரீட்டா ஆன்ட்டி! சீக்கிரமா ஷெட்யூலை முடிச்சுடுங்க"னு போன்லயே செம்ம்ம அலப்பறைய கொடுத்த பன்னிரண்டு ஸ்டார் வாலுகளையும் நம்ம அலுவலகத்தோட மொட்டை மாடி ஓபன்-ஏர் கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு வரவச்சோம். ரெண்டு மணி நேரம் நடந்த அந்த இன்ட்ராக்ஷன்ல குட்டீஸ் பண்ணின கும்மாளம்... கொக்கரக்கோ கும்மாங்கோதான்!

மொத்த ஆபீஸும் அப்பப்ப வந்து குட்டீஸ்களோட கும்மாளத்தை ரசிச்சது தனிக்கதை!

கேபிள் கலாட்டா!

போவோமா அந்த சுட்டீஸ் உலகத்துக்கு...

''ஏய் சச்சின்... நாம 'சூப்பர் சுந்தரி' சீரியல்ல சேர்ந்து நடிச்சப்போதானே ஃப்ரெண்ட் ஆனோம்?"னு 'சுட்டி டி.வி' சிந்துஜா ஃப்ளாஷ்பேக்ல ஆரம்பிச்சு,

''சரி, இப்போ நீ என்ன ப்ராஜெக்ட் (!) பண்ணிட்டு இருக்க?"னு ஸ்டைலா கேட்டாள்.

'' 'உறவுக்கு கை கொடுப்போம்' சீரியல் பண்றேன். இப்போ 'திருதிரு துறுதுறு'னு ஒரு படத்துலயும் நடிச்சுட்டோம்ல?!"னு சச்சின் கட்டை விரலைத் தூக்க, மேலும் தொடர்ந்தான். ''ஏய் நாங்கள்லாம் அர்ஜுன் அங்கிள்கூட 'கிரி', அஜித் அங்கிள்கூட 'வரலாறு'னு ஏற்கெனவே பல வரலாறுகளை படைச்சிட்டோம்ல! அதுலயும் 'வரலாறு' படத்துல சின்ன வயசு அஜித்தா நடிக்க, அறுபத்து அஞ்சு பேரை டெஸ்ட் பண்ணி, லாஸ்ட்டா கே.எஸ். ரவிக்குமார் சார், செலக்ட் பண்ணினது ஐயாவைத்தான் தெரியும்ல?"னு வைகைப் புயல் வடிவேலு ரேஞ்சுக்கு பய பட்டையக் கிளப்ப... சிந்து சரண்டர்.

''டேய்... நீ எத்தனையோ கேரக்டர்ல நடிச்சிருந்தாலும் 'ஆனந்த தாண்டவம்' படத்துல தமன்னா அக்காவை வம்பிழுப்பியே... அதுதான் உன் ரியல் கேரக்டர்!"னு ஒரேயடியா விழுந்துட்டா... சிந்து!

இதையே வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்த 'ரோஜா கூட்டம்' பி.மோனிஷா (ரெண்டு மோனிஷா இருக்கறதால, இன்ஷியலோட சொல்லி பிரிச்சுக்குவோம்), ரொம்பத்தான் வெறுத்துட்டா போல... ''அடப்பாவிகளா... ஆரம்பத்துல இருந்தே உங்க புராணம்தானா... கொஞ்ச நேரத்தை எங்களுக்கும் ஒதுக்கக்கூடாதா...?''னு கேட்டுட்டு, யாரோட பர்மிஷனுக்கும் காத்திருக்காம... ''ரீட்டா ஆன்ட்டி... நாம கொஞ்சம் காஸ்ட்யூம் கதை பேசுவோமா?"னு புது டாபிக்குள்ள அவளாவே புகுந்துட்டா!

அதுவரைக்கும் குட்டீஸ்கள் அலம்புல கதிகலங்கிப் போயிருந்த நானும் சுதாரிச்சுக்கிட்டு, ''சரி சொல்லுங்க... உங்களுக்கு சீரியல் காஸ்ட்யூமெல்லாம் யாரு செலக்ட் பண்ணிக் கொடுப்பாங்க?"னு வாய்ஸ்-ஐ ஸ்டெடி பண்ணினேன்.

''எனக்கு நானேதான் டிரெஸ் செலக்ட் பண்ணுவேன் ஆன்ட்டி! இப்போ எங்கிட்ட எண்பது செட் டிரெஸ் இருக்கு தெரியுமோ!"னு அலட்டிக்காம பி.மோனிஷா சொல்ல... எனக்கே கொஞ்சம் 'கெதக்'னுத்தான் ஆகிப்போச்சு.

ஆனா, அடுத்தாப்புல ''எனக்கு எங்கம்மாதான் டிரெஸ் எடுத்துக் கொடுப்பாங்க. எங்கிட்ட இப்போ நூறு செட் டிரெஸ்ஸுக்கு மேல இருக்கு தெரியுமுல்ல!"னு சத்தமில்லாம இடியை இறக்கினான் 'ரோஜா கூட்டம்' குணால்!

வாயில ஈ போறதுகூட தெரியாத அளவுக்கு நான் பார்த்துக்கிட்டிருக்க... சைக்கிள் கேப்புல ஏரோபிளேன் ஓட்டறது கணக்கா... ''உங்ககிட்ட எத்தனை டிரெஸ் ஆன்ட்டி இருக்கு?!"னு ரெண்டு பேரும் கேட்டாங்களே ஒரு கேள்வி!

''அது... அது... கவுன்ட்லெஸ்!"னு சும்மா விட்டேன் ஒரு ரீல். அதையெல்லாம் ரியல்னு நம்பிட்டாங்க... ஆனா நம்ம்ம்பலை!

இந்தத் தடவை டாபிக்கை மாத்தினது ரீட்டாவேதான். ''ஆங்... மோனிஷா அழகா டப்பிங் பேசறியே!"னு அவளை ஐஸ் வைக்க, ''ஐயோ ஆன்ட்டி... எனக்கு டப்பிங் பேசறது, எனக்கு அம்மாவா நடிக்கற சாந்தி மேம்தான்!"னு சிரிச்சாளே ஒரு சிரிப்பு... 'ஜெகன்மோகினி' சிரிப்புத்தான் போங்க!

''நீ சீரியல் எதுலயாச்சும் கமிட் ஆயிருக்கியா?"னு மோனா கேட்க, '' 'ரோஜாக்கூட்டம்' பண்றேன்... வெளியூர் ஷுட்டிங்னா எங்கப்பா விடமாட்டாங்க"னு சோகமா சொன்னா வி.நிவேதா!

''இப்போ நீ ஷுட்டிங் போக முடியலைனு கவலைப்படறியா... ஸ்கூல் போகணுமேனு கவலைப்படறியா?"னு மோனா விடாமப் பிடிக்க, வி.நிவேதா சிணுங்கினது ஸோ க்யூட்!

'உறவுக்கு கை கொடுப்போம்' ஜோஷிகா, 'மதுரை சம்பவம்' படத்துல ஹீரோ ஹரிகுமாரோட அக்கா பொண்ணா நடிச்சிருக்கா! ''அதுல ஆட்டுக்குட்டிய வச்சுக்கிட்டு அவ அழுவாளே ஒரு அழுகை... சூப்பரு!"னு 'ரோஜாக் கூட்டம்' கே.மோனாவும், 'அவள் ஒரு மின்சாரம்' ப்ரியதர்ஷினியும் கலாய்க்க,

''ஏய்... அது எவ்வளவு எமோஷனலான சீன்?! அவளை கலாய்க்காதீங்கப்பா!"னு சப்போர்ட்டுக்கு வந்தான் 'ரோஜாக்கூட்டம்' சுஷில்!

''சரி குட்டீஸ்... எல்லாருக்கும் அட்வான்ஸ் தீபாவளி விஷ்ஷஸ்!"னு சொல்லி நான் ஆட்டைய கலைக்க...

''ரீட்டா ஆன்ட்டி... இந்த ஓபன்-ஏர் ஏரியா ரொம்ப ரொம்ப நல்லாவே இருக்கு. அநேகமா நீங்க எங்களையெல்லாம் வச்சு இப்ப எடுத்துக்கிட்டிருக்கற இந்த சீரியல் சூப்பர் ஹிட் ஆகப்போகுது பாருங்க''னு 'சுட்டி டி.வி.' நீலேஷ் சொல்ல... மண்டை கிறுகிறுத்துப்போய் நான் நிக்க...

''ஹை... தீபாவளி ஃபூல்''னு புதுசா ஒரு ரூட்டைப் போட்டுட்டு... சடசடனு படியில இறங்க ஆரம்பிச்சுட்டுதுங்க வாண்டுப் பட்டாளம்!

படங்கள் வீ.நாகமணி

வாசகிகள் விமர்சனம்

"ஜெயா ப்ளஸ் டி.வி-யில் தினமும் மாலை 6 மணிக்கு ‘விஞ்ஞான ஜோதிடம்' தொடர் ஒளிபரப்பாகிறது. அந்தக் காலத்தில் பயன்படுத்திய ஜோதிட முறைகளுக்கு அறிவியல்பூர்வமான விளக்கம் தந்து அதன் நன்மைகளையும் விஞ்ஞானப்பூர்வமாக கூறுகிறார் என்.பழனிநாதன். உதாரணத்துக்கு, வீட்டில் விளக்கை ஏற்ற நல்லெண்ணெய், நெய் பயன்படுத்துவது, வெள்ளி காப்பர் பாத்திரங்கள் உபயோகிப்பது என்று பல விஷயங்கள் மிக அருமையாக இருக்கிறது" என்கிறார் ராசிபுரத்தில் இருந்து என்.கலைவாணி.

"கலைஞர் டி.வி-யில் ஞாயிறு மதியம் ஒளிபரப்பப்படும் ‘தமிழச்சி', இளைஞர்களுக்காகவே நடத்தப்படும் நிகழ்ச்சி. இதை நடத்துபவர், கேள்விகளைக் கேட்டுவிட்டு, ஆப்ஷன்-ஏ, ஆப்ஷன்-பி என ஆங்கில வார்த்தையில் பேசுகிறார். எந்த தமிழ் அகராதியில் இந்த ஆப்ஷன் இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா?" என்று கண்டிக்கிறார் திண்டுக்கல்லில் இருந்து சோபி எபிநேசர்.

கேபிள் கலாட்டா!
 
கேபிள் கலாட்டா!
கேபிள் கலாட்டா!