Published:Updated:

அழகே... ஆரோக்கியமே...

அழகே... ஆரோக்கியமே...

அழகே... ஆரோக்கியமே...

அழகே... ஆரோக்கியமே...

Published:Updated:

ராஜம் முரளி
அழகே... ஆரோக்கியமே...
அழகே... ஆரோக்கியமே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அழகே...ஆரோக்கியமே....

முடி உதிர்தலுக்கு வெந்தயக்கீரை வைத்தியம் !

அழகே... ஆரோக்கியமே...

முடி உதிர்தல், வழுக்கை, பொடுகு, நரை... இவை எல்லாம்தான் இன்றைக்கு 'தலை'யாய பிரச்னைகளாக இருக்கின்றன. இவற்றிலிருந்து நம்முடைய தலையை பக்க விளைவுகள் இல்லாமல் பாதுகாப்பதற்கு பாரம்பரியமாக வழக்கத்தில் இருந்து வரும் அழகு சிகிச்சைகள்தான் அற்புதமான தீர்வு. அவற்றையெல்லாம் அலசி ஆராய்வோமா..!

முடி வளர்ச்சி...

பதினைந்து முதல் இருபத்தைந்து வயதுக்குள்தான் முடியானது இயல்பான வளர்ச்சி வேகத்தில் இருக்கும். அதற்குப் பிறகு, வேகம் குறைந்துவிடும். அதேபோல டீன்ஏஜ் பருவத்தில்தான் முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில்தான் முடி பராமரிப்பில் நாம் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நகர்ப்புறங்களில்தான் என்றில்லை... கிராமப்புற இளம் பெண்கள்கூட இப்போது தலைக்கு எண்ணெய் வைக்காமல், தலைமுடியை விரித்துப் போட்டுக் கொள்வதைத்தான் ஃபேஷன் என்று நினைக்கிறார்கள். இது, முடி வளர்ச்சிக்கு முற்றிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

தினமும் தலையில் எண்ணெய் தடவி நன்றாக வாரி, நுனி வரை பின்னல் போட்டு ரிப்பன் கட்டிக் கொள்வதால் முடி ஒரே சீராக வளர ஆரம்பிக்கும். 'முடி கொட்டிவிடுமோ' என்று சரியாக வாராமல் விட்டால், முடி வலுவிழந்து வளர்ச்சி தடைபடும். தலைமுடியை எப்போதும் நுனி வரை வார வேண்டும். தலையில் வகிடு எடுக்காமல் இருந்தால் முன்புற வழுக்கை விழவும், முடி கொட்டவும் ஆரம்பிக்கும். வகிடு எடுத்து வாருவதால் முடி வளர்ச்சி தடைபடாது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

தேவையற்ற டென்ஷன்களை மனதில் ஏற்றிக் கொள்ளாமல், எப்போதும் இயல்பாக இருப்பதும் முடி உதிர்வதைத் தடுக்க உதவும். மலைபோல பிரச்னையையும் மடு அளவாக கருதினாலே போதும். பாடல்களைக் கேட்பது, தியானப் பயிற்சி போன்றவை இதற்குக் கை கொடுக்கும்.

தினம் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக வெந்தயக்கீரை நல்லது. துவையலாகவோ... அல்லது சாம்பார், ரசம் இவற்றில் சேர்த்தோ சாப்பிடலாம்.

இதே கீரையை ஒரு கப் நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி, அதை தலையில் தேய்த்து சீயக்காய் போட்டு அலசுங்கள். தலை சூப்பர் சுத்தமாகி, முடி வளர ஆரம்பிக்கும்.

அசிடிட்டி காரணமாக முடி கொட்டுவதோடு மட்டுமல்லாமல், முகத்தில் பருக்களும் வர ஆரம்பிக் கும். இந்தப் பிரச்னையை, வெந்தயக் கீரையை சாப்பிடுவதன் மூலம் போக்க முடியும். ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, முடி நன்றாக வளரத் துவங்கும். சிலருக்கு வெந்தயக்கீரை என்றாலே பிடிக்காது. அவர்கள், உருளைக்கிழங்குடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

டீன்ஏஜில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பதால் தலையில் அதிகமாக எண்ணெய் சுரந்து, அடிக்கடி வியர்த்து வழியும். இதனால் தலையில் பிசுக்கு ஏற்பட்டு முடி வளர்வது தடைபடும். வாரம் ஒரு முறை தலைக்கு குளிக்கும்போது, கடைசியாக வெட்டிவேர் தண்ணீரை தலைக்கு விட்டுக் கொள்ளலாம் (முதல் நாள் இரவே ஒரு லிட்டர் தண்ணீரில் வெட்டிவேரை துண்டாக்கி போட்டு வைத்து, காலையில் பயன்படுத்தலாம்). தலையும் சுத்தமாகி, கூந்தலும் நறுமணம் வீசுவதோடு, வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.

'உடம்பைக் குறைக்கிறேன்' என்று சிலர் சரிவர சாப்பிடாமல் இருப்பார்கள். அத்தகையோருக்கும் முடி கொத்துக் கொத்தாக உதிர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக்கொண்டு, அதை ஆம்லெட்டுக்கு தயாரிப்பது போல நன்றாக அடித்து, அதில் அரை மூடி எலுமிச்சம் பழச்சாறை பிழிந்து, சீயக்காயுடன் கலந்து தலையில் தேயுங் கள். 15 நிமிடம் கழித்து குளியுங்கள். முடி பளபளப்பா வதோடு, கொட்டிய இடத்தில் முடி நன்றாக வளரும்.

முடியை சுருள்சுருளாகச் (பெர்மிங்) செய்து கொள்வதில் சிலருக்கு ஈடுபாடு இருக்கும். இப்படிச் செய்யும்போது, முடியின் வேர்ப்பகுதியும் சேர்த்து சுருட்டப்படுவதால், மண்டைப் பகுதி பாதிக்கப்பட்டு அநியாயத்துக்கு முடிகொட்ட வாய்ப்பு இருக்கிறது. எனவே, முடியை சுருள் செய்வதை முடிந்த வரைத் தவிர்க்கலாம். தேவைப்பட்டால், கூந்தலின் பின்பகுதியில் மட்டும் செய்து கொள்ளுங்கள்.

பேன், பொடுகு நீங்க...

வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் முடி சுத்தமாக இருக்கும். இதனால், பேன், பொடுகு அண்டாது. எண்ணெய் தடவாத தலைமுடி வறண்டு போகும்போது, அடுத்தவர்களிடம் பேன் இருந்தால் அது நம் தலையில் தொற்றிக் கொண்டுவிடும். தலையில் எண்ணெய் தேய்த்து சீப்பால் வாரும்போதே பேன் தலையில் தங்காமல் வெளியே வந்துவிடும். அதேபோல சுருட்டையான முடியில் பேன்கள் வந்தால் சீக்கிரத்தில் போகாது. தினமும் எண்ணெய் தடவி சீப்பால் படிய வாரிக் கொண்டால், பேன் தொல்லை இருக்காது. அவசர கதியில் எண்ணெய் தடவாமல் விட்டாலும் பேன் இரண்டு மடங்காகப் பெருகிவிடும்.

நல்லெண்ணெயில் 4 மிளகு, அரை டீஸ்பூன் வெந்தயத்தைப் போட்டு இளம் சூடாகக் காய்ச்சுங்கள். இந்த எண்ணெயை நன்றாகத் தடவி தலையைச் சீப்பால் வாருங்கள். பிறகு சீயக்காயுடன், சிறிது வெந்த யம், வேப்பந்தளிர் சேர்த்து சேர்த்து அரைத்து தலையை அலசுங்கள். பொடுகு, பேன், அரிப்பு எல்லாம் மாய மாய் மறைந்துவிடும். கசப்புக்கே பேன் அண்டாது. முடியும் அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

நரையை விரட்ட...

அடிக்கடி தலை முடியை கட் பண்ண பியூட்டி பார்லர் போகிறவர்கள், சொந்தமாக ஒரு கத்திரிக்கோலை எடுத்துச் செல்வது நல்லது. 'டை' போட்டவர்களுக்கு பயன்படுத்திய கத்திரிக்கோலை நமக்கு பயன்படுத்தினாலும் முடி நரைக்க ஆரம்பித்துவிடும்.

இருபத்தைந்து வயதினருக்கும் இளநரை வரலாம். ஒரு கப் கறிவேப்பிலையுடன், ஒரு கப் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் ஒருமுறை இளம்சூடாக தலையில் தேய்த்து சீயக்காய் போட்டு அலசிவர, இளநரை இருந்த இடம் தெரியாது. கறிவேப்பிலையை அரைத்துச் சாறெடுத்து, மோரில் கரைத்துக் குடிப்பதாலும் இரும்புச்சத்து கிடைத்துவிடும். முடி உதிர்தல் மற்றும் இளநரைக்கும் இதன் மூலம் தீர்வு கிடைக்கும்.

மிளிரும்...

அழகே... ஆரோக்கியமே...
 
அழகே... ஆரோக்கியமே...
அழகே... ஆரோக்கியமே...