Published:Updated:

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

Published:Updated:

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !  
கேட்பவரெல்லாம் கேட்கலாம் !
கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"கறுத்த மேனியையும்,கலக்கலாக மின்ன வைக்க என்ன வழி?"
கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

"நான் நல்ல கறுப்பு. நம் மண்ணுக்குரிய நிறத்தை மதிக்கும் பக்குவம் இருந்தாலும் (வேற வழி!), 'கறுப்பு நிறமே சற்று களையாக இருந்தால் தேவலை' என்று எண்ணுகிறேன். அதாவது, கறுப்பாக இருந்தாலும் தொடர் பராமரிப்பு மற்றும் அக்கறையால் மாடலிங் துறையில் பெண்கள் கலக்குகிறார்கள்தானே?! அதேபோல, எனக்கும் களையான கறுப்பு (அழுக்கு கறுப்பு இல்லாத) மிளிர, பக்கவிளைவற்ற அழகுக் குறிப்புகள் ஏதேனும் கிடைக்குமா?"என்று பெரும்பாலான இளம்பெண்களின் வழக்கமான பிரச்னையை புதுமையான கேள்வியாக்கிஇருக்கிறார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிரசன்யாதேவி. அவருக்காக சிறப்பு குறிப்புகளைத் தருகிறார் சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் உஷா மௌலி

''பிராக்டிகலான உங்களின் பக்குவத்துக்கு... பிடியுங்கள் வாழ்த்துகளை!

பூகோள ரீதியாகவும் வம்சாவளி ரீதியாகவும் நமது நிறம் இதுதான் என்று ஏற்றுக்கொண்டு, அதில் தேவையான பொலிவைப் பெற முயன்றால் போதும்... நீங்கள்தான் ராமநாதபுரத்து ரம்பை.

அழகுக் குறிப்புகளுக்குப் போகும் முன் பொதுவான குறிப்புகளைச் சொல்லிவிடுகிறேன். சொல்லப் போனால் இவைதான் உண்மையான அழகைத் தொடர வாய்ப்பளிக்கும். உணவு, உடை, எடை, உறக்கம், மனநிலை, மலச்சிக்கல்... இவற்றில் மிகுந்த எச்சரிக்கை வேண்டும். அப்படிஇருந்தால், அழகு உள்ளிருந்தே பரிமளிக்க ஆரம்பித்துவிடும்.

இங்கே பரிந்துரைக்கும் டயட்டை மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு கடைபிடித்து விட்டால் உங்கள் அடையாளம் தனித்துவமாகிவிடும். காலை எழுந்ததும் 2 கப் வெந்நீரை வெறும் வயிற்றில் அருந்தவும். பின் பதினைந்து நிமிடத்துக்கு வார்ம்&அப் எக்ஸர்சைஸ். பதினைந்து நிமிடம் சூரிய நமஸ்காரம். தியானம்... பத்து நிமிடமேனும்.

காலை உணவாக அளவான டிபனுடன் பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஜூஸாக்காமல் பழங்களை அப்படியே உண்பது நார் சக்தியைப் பெற்றுத்தரும். பதினோரு மணிவாக்கில் கேரட், வெள்ளரி... இவற்றில் ஏதேனும் ஒரு கப். மதிய உணவில் அரிசியை வழக்கமான அளவைவிட குறைவாகவும், காய்கறிகளை அதிகமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். தினசரி ஒரு கீரை அவசியம்.

உணவில் புளி, மசாலா, உப்பு, எண்ணெய்... இவற்றைக் குறைப்பது மிகவும் நல்லது. மாலையில் கைப்பிடி சுண்டல் அல்லது ஏதேனும் தானிய வகைகளைச் சாப்பிடலாம். தவிர்க்க முடியவில்லையெனில் டீ அல்லது காபி அருந்தலாம். இரவில் சப்பாத்தியுடன் காய்கூட்டு அல்லது பருப்பு எடுத்துக் கொள்ளலாம். எட்டு மணிக்கு முன்பாக இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும். உறங்கும்முன் பாதாம் பாலில் குங்குமப்பூ கலந்து அருந்தலாம்.

இவையெல்லாம் உள்ளிருந்து அழகை வெளிக்கொணரும். இனி வெளி அழகுக்கு வழி காண்போம்...

இப்போது சொல்லப்போகும் ஸ்பெஷல் குளியலை வாரத்துக்கு ஒரு தடவை மேற்கொள்ளவும்... பேபி ஆயில், பாதாம் ஆயில் இவற்றில் தலா 10 மில்லி எடுத்துக் கொண்டு, அரை மூடி எலுமிச்சை ஜூஸ் கலந்து லேவண்டர் ஆயில் நாலு சொட்டுகள் விட்டு நன்கு மிக்ஸ் செய்துகொள்ள வேண்டும். இந்த கலவையை நெற்றி முதல் பாதம் வரை தடவி வெதுவெதுப்பான டவலைக் கட்டிக்கொண்டு ஊற விட வேண்டும். ஊறியபின் தேய்த்துக் குளிப்பதற்கு பின்வரும் பவுடர் மிக்ஸைப் பயன்படுத்தவும்.

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

பூலங்கிழங்கு, கோரைக்கிழங்கு, வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள் இவற்றில் 100 கிராமும், முல்தானி மெட்டி, காலமின் பவுடர் இவற்றில் 50 கிராமும், பயிறு மாவு கால் கிலோ, ஜவ்வாது பத்து கிராமும் கலந்து தயாரித்த பவுடரை தேய்த்துக் குளிக்க வேண்டும். மேற்சொன்ன 'ஆயில் பாத்'துக்கு மட்டுமின்றி, தினசரி குளியலுக்கும் இந்த பவுடரை பயன்படுத்தலாம். நாளடைவில் கறுத்த மேல் தோல் பொலிவு பெறுவதைக் கண்ணாரக் காணலாம்.

அடுத்து... பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவை செய்துகொள்ள வேண்டிய ஃபேஷியல் பேக் பற்றிச் சொல்கிறேன். முல்தானிமெட்டி, தேன் இவற்றில் தலா ஒரு டேபிள் ஸ்பூன், பப்பாளி இரண்டு டேபிள்ஸ்பூன் கலந்து முகத்தில் தடவி, இருபது நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த வழி முறைகள் நீங்கள் எதிர்பார்ப்பது போல களையான சருமத்தை தருவதோடு மினுமினுப்பையும் தந்திடும்.

மற்றபடி மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறு, ஹீமோ குளோபின் குறைவு மற்றும் ஏதேனும் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தால் முதலில் மருத்துவ ஆலோசனை பெற்றபின் இவற்றை முயற்சிக்கவும்.''

கேள்வி

"சாதாரண சளியில் தொடங்கி பன்றிக்காய்ச்சல் பாதிப்புவரை நோய் எதிர்ப்புசக்தியின் தொய்வுதான் காரணம் என்கிறார்கள். இந்நிலையில், நமது பாரம்பரிய முறையில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை பெருக்கும் சமையல் மற்றும் உணவு உத்திகளை சொன்னால் என் போன்ற நியூக்ளியர் குடும்பத்து இல்லத்தரசிகளுக்கு மிகவும் உபயோகமாயிருக்குமே...."இப்படி, பனி மழை என்று தொற்றுநோய்களுக்கு வரவேற்பு சொல்லும் பொருத்தமான சீதோஷ்ண நேரத்தில் உருப்படியான கேள்வியை விடுத்திருக்கும் நவிமும்பை வாசகி எம்ரேணுகாசெல்வனுக்காக பதில் சொல்கிறார் தஞ்சை பாரம்பரிய சமையல் ஆலோசகர் க.கீதாராணி.

"வைத்தியனுக்கு கொடுப்பதை வணிகனுக்கு கொடு; உணவே மருந்து, மருந்தே உணவு என்பதான பிரபல சொலவடைகள் நம்மூரில் உண்டு. சமையலறையின் அஞ்சறைப்பெட்டியிலேயே அனைத்து தொற்றுநோய்களையும் விரட்டும் அதிமருந்துகள் இருக்கிறது. பாரம்பரிய உணவின் அருமைகளை மறந்து விட்டு சுவைக்காகவும் நாகரீக மோகத்திலும் குப்பை உணவுகளை சமைக்கும் போக்குதான் இப்போது அதிகரித்து வருகிறது. இங்கே தரப்படும் எளிய குறிப்புகளை பயன்படுத்தினால் நிச்சயம் குடும்பத்தினரின் குறிப்பாக குழந்தைகளின் நோய் எதிர்ப்புசக்திக்கு உத்தரவாதம் தரலாம்.

குழந்தைகளுக்கு உலர் பழங்களை சாப்பிடும் வழக்கத்தை பழக்கப்படுத்த வேண்டும். பபிள்கம், சூயிங்கம் என்று சதா மென்று கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு திராட்சை, பேரீட்சை, காயவைக்கப்பட்ட பெருநெல்லித்துண்டுகள் சரியான மாற்று.

சாதாரணாமாகவும் வீட்டில் பேரிச்சை மற்றும் நெல்லியை தேனில் ஊறவைத்து சாப்பிடும் பழக்கத்தை கொண்டுவரலாம்.

வீட்டில் பழங்களை சாப்பிடும்போது அவற்றை ஜீஸாக அடிக்காமல் துண்டுகளாக்கி அப்படியே மென்று சாப்பிடுவது நல்லது. தோல்களாஇ அதிகம் உரிப்பதும் கூடாது.

சமையலுக்கு காய்கறிகளை நறுக்கும்போது மிகவும் பொடிப்பதைவிட சாப்பிடும் இலகுவில் துண்டுகளாஅக்கிகொள்வது நல்லது. காய்களை உச்ச சூட்டில் வேகவைக்கமால் மீடியமான தணலில் வேகவைப்பதே நல்லது. தண்ணீரில் வேகவைப்பதைவிட ஆவியில் வேகவைப்பதே மிகவும் நல்லது.
தண்ணீரில் சீரகத்தை கலந்து கொதிக்கவைத்து ஆறியதும் வடிகட்டி குடும்பத்தினர் தாகத்திற்கு பயனப்டுத்தலாம்.

சாதம் வடித்த கஞ்சியில் பச்சைக்காய்கறிகளின் சூப்வைத்து பரிமறலாம்.

காய் மற்றும் கீரைகளை சமைத்த எட்டு மணி நேரத்திற்குள் சாபிட்டால்தான் சத்து கிடைக்கும்.

ராகி, ஓட்ஸ், ஜவ்வரிசி என விதவிதமான கஞ்சிகளை காலையில் உண்பது நல்லது. பொட்டுக்கடலைமாவு கஞ்சி குளிர்காலத்தில் குழந்தைகளை பாதிக்கும் வயிற்றுப்போக்குகு மாமருந்து.

குளிர்காலத்து தினசரி சமையலில் ரசம் ஜீரணத்திற்கு அவசியம். வழக்கமான ரசத்தைவிட வேப்பம்பூ, புளியம்பூ ரசம் வைத்துப்பாருங்கள் சுவைக்கு குடும்பமே அடிமையாகும். மருத்துவக்குணம் சொல்லவேண்டியதில்லை.

படுக்கும்முன் குழந்தைகளுக்கு ஓமத்தை பஒடி செய்து பாலில் கலந்து வடிகட்டி தந்தால் சளியை தூரவிரட்டும்.

சுண்டு விரல் அளவுகளில் இஞ்சி மற்றும் சிற்றரத்தையை அம்மியில் நசுக்கி குவளைத்தண்ணீருடன் கஷாயமாகக்காய்ச்சி இறுத்துவைத்துக்கொள்ளுங்கள். காலை மாலை அரை டம்ளர் சர்க்கரையுடன் குடித்தால் காசநோயே காணாமால் போய்விடும்.

எந்த நோயும் எட்டிப்பார்க்காத தேகநலனுக்கான பாரம்பர்ய முறை இது. (பெரியவர்களுக்கு மட்டும்). காலையில் இஞ்சி, மதியம் சுக்கு மாலை கடுக்காய்; தலா இவற்றை அரைப்பாக்களவிற்கு உணவிற்கு முன் மென்று தின்றதும் நீர் அருந்திவிட வேண்டும். 40 நாட்கள் இவ்வாறு சாப்பிட்டால் போதும் தேகம் வைரமாகும்.

தவிர்க்க முடியாது ஓட்டலில் சாப்பிட்ட உணவு படுத்துகிறதா? எலுமிச்சையை சாறுடன் நல்ல பெருங்காயத்துடன் உப்பு கலந்து குடித்தால் போதும்.

பழங்களில் திராட்சைக்கு உலர்ந்த பின்னும் சத்துக்களை அதிகளவில் இருப்பு வைத்திருக்கிறது. திராட்சையை பன்னீரில் ஊறவைத்து சாப்பிட்டால் இதயம் பலம் பெரும். தொடர்ந்து திராட்சை உண்பவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி நிச்சயம். குழந்தைகளின் பல் முளைக்கும் பருவத்தில் ஏற்படும் மலக்கட்டுக்கு திராட்சைசாறு பலனளிக்கும்.

காலை குளியலுக்குப்பின் ஐந்தாறு துளாசி இலைகளை உண்பை வழக்கமாக்கிக்கொளவது உடலின் கிருமிகளுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு நல்லது.

உடலின் நோய் எதிர்ப்பாற்றலுக்கு போதிய தூக்கம் நிரம்ப அவசியம் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

கடும்காய்ச்சல் கண்டால் வெள்ளைப்பூண்ஏடு சாற்றை உள்ளங்கையிலும் உள்ளங்காலிலும் நன்கு தேய்க்கவும். உறங்கச்செல்லும்முன் பூண்டு விதைகளைப்போட்டு காய்ச்சிய பாலையும் அருந்தினால் குளிர்கால அலர்ஜியால் வரும் இருமல் அகலும்.

இருமல் மற்றும் சளிக்கு பேரிச்சம்பழத்தை பாலில் வேகவைத்து உண்ணலாம்.

பெரியவர்களுக்கு மழைநாளில் வரும் சேற்றுப்புண்ணுக்கு மஞ்சளையும் கடுக்காயையும் சம அளவு கலந்து, இரவு படுக்கப்போகும்முன் சேற்றுப்புண் மீது சில தினங்கள் தொடர்ந்து தடவி வந்தால் போதும்.

இருமலால் வரும் தொண்டை எரிச்சலுக்கு இரவு உணாவுக்குப்பின் மஞ்சள் தூள் அரை ஸ்பூன் எட்டு பல் பூண்டு இவற்றோடு கற்கண்டையும் கலந்து நன்கு காய்ச்சி பதமான சூட்டில் பருகலாம்.

ஜலதோஷத்திற்கு நீண்ட மஞ்சள் துண்டின் முனையை நெருப்பில் காட்டி, கிளாம்பும் புகையை முகர்ந்தால் போதும். மூச்சுவிட முடியாத மூக்கடைப்பு சளி இளகிவிலக இதே போல் மிளகை ஊசில் குத்தி புகையை முகரலாம்.

குளிர்கால சருமத்தொல்லைகள் நீங்க வேப்பிலை பாசிப்பயிறு பச்சை அரும்புல் இவற்றோடு கிடைத்தால் அருகம்புல்லையும் சேர்த்து அரைத்து , விழுதை குளிக்கும் முன்தடவி குளித்தால் போதும்.

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !
 
   
   
கேட்பவரெல்லாம் கேட்கலாம் !
கேட்பவரெல்லாம் கேட்கலாம் !