Published:Updated:

என் டைரி 211 - சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு.. - நிபுணர் சொல்கிறார்

என் டைரி 211 - சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு.. - நிபுணர் சொல்கிறார்

என் டைரி 211 - சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு.. - நிபுணர் சொல்கிறார்

என் டைரி 211 - சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு.. - நிபுணர் சொல்கிறார்

Published:Updated:

சிநேகிதிக்கு....சிநேகிதிக்கு...
என் டைரி 211 - சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு.. - நிபுணர் சொல்கிறார்
என் டைரி 211 - சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு.. - நிபுணர் சொல்கிறார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'மனிதனாகிவிட்டால் மன்னித்துவிடு...'
என் டைரி 210-ன் சுருக்கம்...

"நான் திருச்சியிலும், என் கணவர் கோவையிலும் வேலை நிமித்தம் பிரிந்திருக்கிறோம். என் மீதோ, மகள் மீதோ இம்மியளவும் பாசத்தைக் காட்டாதவருக்கு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிந்ததும், கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தேன். இடையில் கார் விபத்தில் அவர் படுத்த படுக்கையாகிவிட, என் சேமிப்பைச் செலவழித்து அவரைக் காப்பாற்றினேன். இப்போது, சேர்ந்து வாழ அழைக்கிறார். நான் என்ன செய்யட்டும்?"

என் டைரி 211 - சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு.. - நிபுணர் சொல்கிறார்

‘கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்’ என்பதெல்லாம் பழங்கதை. மனைவியே வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, பணத்தை மட்டும் பறித்துபோக மாதம் தவறாமல் வரும் உன் கணவன், பெற்ற மகளிடமே பாசமில்லாமல் இருப்பது கசப்பான வேதனை. கணவன் விபத்துக்குள்ளானபோது, கூட இருந்து பணிவிடை செய்தும் உன் மாமியாரின் இறப்புச் செய்தியை தெரிவிக்காதவர், இப்போது சேர்ந்து வாழ மட்டும் உன்னை அழைக்கிறார் என்றால், ஏதோ உள் நோக்கம் இருக்கிறது என்றுதானே அர்த்தம். நீ விவாக ரத்து செய்யாவிட்டாலும், சேர்ந்து வாழ்ந்து உன் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளாதே. உன் மகளை நன்றாகப் படிக்க வை. நீ மேலும் படித்து, பதவி உயர்வைத் தேடிக்கொள். நிச்சயம் நிம்மதி பிறக்கும்.

- எஸ்.பாரதி, சென்னை-106

இணக்கம் அதிகம் இருந்தால் இடைவெளி குறைவாகும். ஆரம்பத்திலிருந்தே நீ கணவனை விட்டு வெகுதூரம் விலகியிருக்கிறாய். இந்த இடைவெளிதான் உங்களுக்குள் பெரிய விரிசலை ஏற்படுத்திவிட்டது. திருமணமானதும், கணவனோடு சென்றிருக்க வேண்டாமா? ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள சந்தர்ப்பமே இல்லாமல் போய்விட்டது. அவர் உடல்நிலை தேறியவுடன் நீ திரும்பவும் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டதுகூட அவர் மீது ஈடுபாடற்று இருப்பதையே காட்டுகிறது.

சரி, நடந்தது நடந்து விட்டது, அவரது பேச்சில் உள்ள அந்நியோன்யம், செயல்பாடுகளில் இருக்கும் நேர்மை, அவருடைய நோக்கத்திலிருக்கும் உண்மை இதையெல்லாம் முதலில் சீர்தூக்கி பார். அதில் ஓரளவுக்கு நம்பிக்கை ஏற்பட்டால், மனம் விட்டுப் பேசிப் பார். உண்மையிலேயே அவர் நல்ல மனிதர் என்பது உறுதிபட்டால், அதன் பிறகு நன்கு யோசித்து முடிவெடு.

உனக்கும் உன் குழந்தைக்கும் இறுதிவரை நல்ல மனிதராக இருப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே மன்னித்து ஏற்றுக்கொள். இல்லையென்றால், நீ தனியாக வாழ்வதே மேல்.

- இமாகுலேட் ஜோஸப்பின், கோவை-12

நிச்சயம் நீ வெகுளி அல்ல. விட்டுக் கொடுத்து வாழும் பண்பும், மனிதாபிமானமும் நிறைந்தவள். உன் கணவர் படுத்த படுக்கையாகி, சொந்த பந்தங்கள் விலகி நிற்க, உன் சேமிப்பில் அவரை குணப்படுத்தியிருக்கிறாய். ஆதரவு இல்லாமல் கிடந்தபோது, அவர் உன்னை தஞ்சம் அடைந்திருக்கிறார். எனவே, நடந்ததை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்துவிடு. கணவருக்கு மட்டுமல்ல... மாமனாருக்கும் சேர்த்து பணிவிடை செய். உன் மகள் வளர வளர, அவள் மீதான பாசம் நிச்சயம் அவர்கள் இருவருக்கும் ஏற்படும்.

‘விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை’ என்ற சான்றோரின் வாக்குப்படி விட்டு கொடுத்து வாழும் உன் வாழ்க்கையில் இனி எல்லாமே நல்லதாகவே முடியும்.

- வஸந்தா பரமசிவம், புனலூர்

சும்மா கிடக்கும் சொத்து... சூறையாட நினைக்கும் சொந்தம் !

கல்லூரி முடித்து, கனவுகளைச் சுமந்து, பெற்றோர் பார்த்து வைத்த ஆணையும் மணந்து, ஐந்தே வருடத்தில் அனைத்தையும் இழந்து நிற்கும் அபாக்கியவதி நான்.

என் டைரி 211 - சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு.. - நிபுணர் சொல்கிறார்

அதிர்ந்துகூட பேசத் தெரியாத எனக்கு, அன்பிலும் பண்பிலும் சிறந்தவரே கணவனாக அமைந்தார். என் கணவர், ஒரே மகன் என்பதால் மாமியார், மாமனார் எல்லோரும் ஒன்றாகவே வசித்தோம். ஒரு மகன், ஒரு மகள் என்று பிறக்க...வாழ்க்கை குதூகலமாக ஓடிக் கொண்டிருந்தது.

இந்நிலையில், திடீரென ஒரு நாள் இடி இறங்கியது. என் கணவர் சாலை விபத்தில் சிக்கிவிட... நகைகள், கடன், சேமிப்பு என லட்சக்கணக்கில் செலவழித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவருடைய அலுவலகத்திலிருந்து, கிடைத்த தொகை, கடன்களை அடைக்கவே சரியாக இருந்தது.

மகனை இழந்த துக்கத்திலேயே உழன்ற என் மாமியார், அடுத்த வருடமே இறந்து போனார். ஐந்து வயது மகள், ஏழு வயது மகன் இருவரையும் அழைத்துக் கொண்டு அம்மா வீட்டில் அடைக்கலம் புகுந்துவிட்டேன். என் மாமனார், தன் தம்பி மகனின் குடும்பத்தாருடன் இருக்கிறார். அவர்கள் குடியிருக்கும் வீடே என் மாமனாருடையதுதான். தனக்கு வரும் பென்ஷனில் பாதியை, தன் தம்பி மகனுக்கு கொடுக்கும் என் மாமனார், ஒரு சிறிய தொகையை என் மகன் மற்றும் மகள் பெயரில் வங்கியில் போட்டு வருகிறார்.

மதுரை, பெத்தானியாபுரத்தில் 15 சென்ட்டில் வீடும், 15 சென்ட் நிலமும் என் மாமனார் பெயரில் இருக்கின்றன. அவைதான் எதிர்காலத்தில் என் குழந்தைகளுக்கு இருக்கும் சொத்து. அவரும் பேரன், பேத்தி பெயரில் எழுதி வைப்பதாக கூறுகிறார்.

இந்நிலையில், ''நான்தானே உன் மாமனாரை பார்த்துக்கறேன். அவர் பேர்ல இருக்கற இடம் சும்மாதானே கிடக்கு. ஒரு ஐந்து சென்ட் நிலத்தையாவது எங்களுக்கு எழுதிக் கொடுக்கச் சொல்'' என்று வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார் மாமனாரின் தம்பி மகன். அங்கே வசிக்கும் மாமனாரோ... 'இருதலைக்கொள்ளி' எறும்பாகத் தவிக்கிறார்.

மாமனாரை என்னுடன் அழைத்து வைத்துக் கொள்ளலாம் என்றால்... நானே சொற்ப வருமானத்தோடு அம்மா வீட்டில் தஞ்சம் புகுந்திருக்கிறேன். வீட்டு வாடகை, குழந்தைகளின் ஸ்கூல் ஃபீஸ்... இவற்றைச் சமாளிக்கவே என் வருமானம் போதுமானதாக இல்லை.

இத்தனைக்கும், மாமனாரின் தம்பி மகன் குடும்பம் கஷ்ட ஜீவனத்திலிருக்கிறது என்றால்கூட அவர்கள் கேட்பதைத் தாராளமாக தந்துவிடலாம். ஆனால், எங்களுக்கு உள்ளது போல் ஆறு மடங்கு சொத்துக்கள் அவர்களுக்கு இருக்கின்றன.

மாமனாரின் நிலையை எண்ணி Ôஎழுதிக் கொடுத்து விடுங்கள்Õ என்று சொல்வதா? Ôஎன் குழந்தைகளுக்கு வேண்டும். பத்திரமாக வைத்திருங்கள் என்று சொல்வதா?' மனதோடு போராடி மறுகுகிறேன்.

வழி சொல்லுங்கள் தோழிகளே!

- பெயர் வெளியிட விரும்பாத 'அவள்' வாசகி....

என் டைரி 211 - சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு.. - நிபுணர் சொல்கிறார்
 
என் டைரி 211 - சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு.. - நிபுணர் சொல்கிறார்
என் டைரி 211 - சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு.. - நிபுணர் சொல்கிறார்