Published:Updated:

குபேரனுக்கே கொட்டிக் கொடுத்த தேவூர் !

குபேரனுக்கே கொட்டிக் கொடுத்த தேவூர் !

குபேரனுக்கே கொட்டிக் கொடுத்த தேவூர் !

குபேரனுக்கே கொட்டிக் கொடுத்த தேவூர் !

Published:Updated:

குபேரனுக்கே கொட்டிக் கொடுத்த தேவூர்!
குபேரனுக்கே கொட்டிக் கொடுத்த தேவூர் !
குபேரனுக்கே கொட்டிக் கொடுத்த தேவூர் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செல்வம் பல சேர்க்கும் செந்தாமரை மலர் அர்ச்சனை !

என்னதான் நேர்மையாக உழைத்தாலும் செல்வம் கையில் சேர மறுக்கிறதா..? அல்லது எதிர்பாராத நடப்புகளால் சேர்த்த செல்வத்தை இழந்தவர்களா நீங்கள்..? இனி கவலை வேண்டாம்! அத்தனை செல்வங்களும் கிடைக்கப் பெறலாம்... இழந்த செல்வத்தையும் திரும்பப் பெறலாம்... நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் அருகே உள்ள தேவூருக்கு ஒருமுறை போய் வாருங்கள்.

குபேரனுக்கே கொட்டிக் கொடுத்த தேவூர் !

ஆம்... செல்வத்துக்கு அதிபதியான குபேரனே, தன் செல்வத்தை இழந்து, இங்குள்ள தேவபுரீஸ்வர சுவாமியை வழிபட்டு, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்ற ஸ்தலமாயிற்றே இந்த தேவூர்!

குரு பகவான் 'தேவகுரு' பட்டத்தைப் பெற்ற திருத்தலமும் இதுதான்.

எனவே, தேவபுரீஸ்வரரின் அருளோடு குருவின் பார்வையும் இங்கு நிறைந்து கிடைப்பதால், வாழ்வின் துன்பங்கள் நீங்கி, இன்பம் நிறைந்த வாழ்க்கைக்கு தேவூர் தரிசனம் வழி செய்கிறது.

தேவூர்... பெயர்க்காரணமே சிலிர்ப்பூட்டுகிறது.

தேவலோகத்திலிருந்து தேவர்கள் எல்லாம் இங்கு வந்து, இறைவனை வழிபட்டதால் இந்த ஊரின் பெயர் தேவனூர் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் தேவூர் ஆகிவிட்டது என்கிறது தலபுராணம்.

குபேரனுக்கே கொட்டிக் கொடுத்த தேவூர் !

தேவலோகத் தலைவன் இந்திரனும்கூட இங்கு வந்து வழிபட்டிருக்கிறார். தேவர்களுக்கு பல காலம் தொல்லை கொடுத்த விருத்தாசுரனை வதம் செய்த பிறகு, தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க இங்கு வந்து தங்கி இறைவனை வணங்கியிருக்கிறார் இந்திரன். அதன் மூலமாக தோஷம் நீங்கியதோடு இழந்த இந்திரப் பதவியையும் திரும்பப் பெற்றிருக்கிறார்.

அதுமட்டுமா...? தேவலோகத்திலிருந்து தேன்கதலி எனப்படும் வாழையும் வந்து வழிபட்டு, இங்கேயே தங்கி விட்டதுதான் விசேஷத்திலும் விசேஷம். அதுதான் இங்கு தலவிருட்சம் (பார்க்க பெட்டிச் செய்தி).

தலவிருட்சம் சரி... தல வரலாறு?

பக்தியுடன் அந்தக் கதை சொன்னார்... சவுந்தரராஜ குருக்கள். "குபேரனிடம் சண்டையிட்டு, சங்கநிதி, பதுமநிதி ஆகிய நிதியங்களை கைப்பற்றினான் இலங்கை மன்னன் ராவணன். இதனால் இதயம் கலங்கிய குபேரன், தேவர்களிடம் ஆலோசனை கேட்டான். அவர்கள் தேவூர் இறைவனைப் பற்றி சொல்லக் கேட்டு, இங்கு வந்து நெடுங்காலம் தங்கி, இறைவனை வழிபட்டான் குபேரன். அந்த பக்தியில் மனமுவந்த தேவபுரீஸ்வரர்... சங்கநிதி, பதுமநிதியங்களை குபேரன் மீண்டும் பெற அருள் செய்தார். குபேரன் மீண்டும் பட்டத்தைப் பெற்றான். அதேபோலவே பக்தர்கள் அனைவருக்கும் இழந்த செல்வத்தைப் பெறுவதற்கு அனுதினமும் அனுக்கிரகம் செய்கிறார் இறைவன்'' என்று சொல்லி கைகூப்பினார் இறைவனை நோக்கி!

குபேரனுக்கே கொட்டிக் கொடுத்த தேவூர் !

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராமுத்தாய், தற்போது தேவூரில் வசிக்கிறார். அவரது பரவச அனுபவம்... "நாங்க வறுமையில வாடி நின்னப்போ, ஒரு ஆன்மிக புத்தகம் கையில கிடைச்சது. அதுலதான் செல்வம் சேர்க்க அருள் புரியும் தேவூர் கோயில் பத்தி படிச்சோம். ஒரு நம்பிக்கையோட கிளம்பி வந்தோம். தரிசனம் முடிச்சுட்டுப் போகும்போது, 'நானிருக்கேன்'னு தேவபுரீஸ்வரரே நம்பிக்கை கொடுத்து அனுப்பின மாதிரி மனசுக்குள்ள ஒரு நிம்மதி. கொஞ்ச நாள்லயே என் கணவருக்கு வேலை கிடைச்சிடுச்சு. அதுவும் தேவூருக்கு பக்கத்துலயே! 'உன்னாலதான்பா...'னு அவன் சந்நிதி இருக்கற ஊருக்கே குடி வந்துட்டோம். அடுத்து என் மகளுக்கு வேலை கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டோம். இறைவன் அதையும் நிறைவேத்திட்டார்! அனுபவத்துல சொல்றேன்... மனமுருகி நாம் கேட்கற எல்லா வரங்களுக்கும் அருள் செய்கிறார் இந்த தேவபுரீஸ்வரர்'' என்று பக்தியும் பரவசமுமாகச் சொன்னார்.

இந்தக் கோயிலை கட்டுவித்தவன்... கோச்செங்கட் சோழன். முற்பிறவியில் சிலந்தியாக பிறந்து திருவானைக்காவலில் சிவபெருமானுக்கு திருநிழல்பந்தல் செய்து வழிபட்டமையால்... அடுத்த பிறவியில் சோழ அரசனாக பிறந்த இந்தச் சோழன், தன்னுடைய தேசம் எங்கும் சிவாலயங்களை கட்டுவித்தார். அதிலும் கீழ்வேளூர், சிக்கல், நன்னிலம், வலிவலம் ஆகிய ஊர்களிலும் தேவூரிலும் கட்டுமலைகளை அமைத்து (கோயில் அமைந்திருக்கும் பகுதியை மேடாக உயர்த்தி), அதன் மீது கோயில்களை கட்டியிருக்கிறார். அவற்றுள் அளவிலும் கீர்த்தியிலும் பெரிதானது... தேவூர் திருத்தலம்!

குபேரனுக்கே கொட்டிக் கொடுத்த தேவூர் !
குபேரனுக்கே கொட்டிக் கொடுத்த தேவூர் !

ஊரின் மத்தியில் திருக்கோபுரம், மாடவீதிகள், திருக்குளம் சூழ அமையப் பெற்றிருக்கிறது கோயில். நான்கு அடுக்கு ராஜகோபுரம், உள்ளே அதிகார நந்தி. அதனை அடுத்து கொடி மரம், பலிபீடம், வாசலுக்கு தென்புறம் தேவகுருநாதன் சந்நிதிக்குச் செல்ல படிகள். அதன் இடதுபுறம் விநாயகர், வலப்புறம் முருகப்பெருமான் சந்நிதி. எதிரில் சோமாஸ்கந்தர்... இவர்களையெல்லாம் வழிபட்டு உள்ளே சென்றால்... நெஞ்சம் நிறையும் அற்புத காட்சி கண்களில் விரிகிறது... ஜெகஜ்ஜோதியாக தேவபுரீஸ்வரர்!

இழந்ததைப் பெறவும், வேண்டியது கிடைக்கவும் அவன் அருள் வேண்டி வணங்கி வெளியில் வந்தால்... தென்பிராகாரத்தில் அறுபத்து மூவரும் அணிவகுத்திருக்கின்றனர். அப்படியே கொஞ்ச தூரம் சென்றால் அதிசய தலவிருட்சமான கல்வாழை. பிராகார சுற்றில் குருபகவான், சுப்ரமணியர், துர்க்கை, மகாலட்சுமி, ஆகியோர்களை தரிசித்துவிட்டு வலப்புறம் வந்தால்... அங்கே ஆயிரம் கண்களால் காண வேண்டிய அழகுடன் அமைந்திருக்கிறது அம்மை தேன்மொழியாள் சந்நிதி. மதுரபாஷினி, மதுரநாயகி என்ற பெயர்களாலும் அம்மை அழைக்கப்படுகிறார். அடுத்ததாக, சிவகாமி அம்மை சகிதமாக நடராஜ பெருமானும் காட்சி கொடுக்கிறார்.

ஆலயத்தின் முன்பாக அமர்ந்து மனக்கண்ணாலும் தேவபுரீஸ்வரரை வணங்கிக் கொண்டிருந்த மஞ்சுளாவிடம் பேச்சுக் கொடுத்தபோது... "எது கேட்டாலும் கொடுக்கிற அம்மையும் அப்பனும் இருக்கிற கோயில் இது. மனசுல ஏதாச்சும் வேண்டிக்கிட்டு சாமிக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செஞ்சு, செந்தாமரை மலரால அர்ச்சனை செஞ்சா... வேண்டிய காரியம் கைகூடும். ஆயிரமாயிரம் ஆண்டவன் அருளால நினைச்சதை அடைஞ்சிருக்காங்க... என்னை மாதிரி'' என்று சொன்னார் தியான கோலம் கலையாதவராக!

"எல்லாம் சரி, 'தீபாவளி ஸ்பெஷலில்' இந்தக் கோயில் பற்றிய கட்டுரை இடம்பெற ஏதாவது காரணம் இருக்கணுமே...?'' என்று ஆரம்பத்திலிருந்தே 'லப்-டப்' துடிக்கிறதா...?

விஷயம் இருக்கிறது..! அதைப் பற்றி சொல்கிறார் சவுந்தராஜ குருக்கள்...

" 'தேவூர் ஆதிசேவடி அடைந்தார்க்கு தீது ஒன்றுமில்லை'ங்கற திருஞானசம்பந்தரோட வரிகள் காலம் காலமாய் நிஜமாயிட்டு இருக்கு. குறிப்பா, ஒருத்தரோட ஜாதகத்துல குரு மறைஞ்சிருந்தாலோ, நீசம் பெற்றிருந்தாலோ அல்லது பார்வையற்று இருந்தாலோ இங்க வந்து வழிபட்டு பலன் பெறலாம். தனம், பாக்யம், பக்தி, நூலாய்வு, தெய்வீகப்பணினு எல்லாத்துக்கும் குருவே காரணமா இருக்கறதால அவரை வணங்கி வாழ்வில் மேன்மையடையலாம். அடுத்து, செல்வ சுகபோகங்களை பெறவும் இந்த தல வழிபாடு சிறந்தது.

குபேரனுக்கே கொட்டிக் கொடுத்த தேவூர் !

குறிப்பா... தீபாவளிக்கு மறுநாள் இங்க நடக்கற குபேர பூஜை சிறப்பு வாய்ந்தது. அதேபோல, மாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்துல, சுக்கிர ஓரையில நடக்கற குபேர யாகமும் ரொம்ப சிறப்பு வாய்ந்தது. அந்த நாள்லதான் குபேரன் இங்க பூஜை செஞ்சு இழந்ததை பெற்றதாக ஐதீகம். தீபாவளி, சுக்கிர ஓரையில நடக்கற பூஜை, யாகத்துல கலந்துட்டா கண்டிப்பா வாழ்வை உயர்த்தற அருள் கிடைக்கும்!'' என்று அழைப்பு வைத்தார்.

அருளைப் பெற நீங்கள் தயாராகிவிட்டீர்களா?

செல்லும் வழி...

திருவாரூர் - நாகப்பட்டினம் இடையில் இருக்கிறது கீழ்வேளுர். இங்கிருந்து தெற்கே ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது தேவூர். கீழ்வேளுரில் இருந்து டவுன் பஸ், மினி பஸ், ஆட்டோ, கார், வேன் வசதிகள் உண்டு. நாகப்பட்டினம், திருவாரூரிலிருந்தும் நகரப் பேருந்துகள் உள்ளன. வெளியூரிலில் இருந்து வருகிறவர்கள் ஒரு நாள் பயணமாக வந்தால் கீழ்வேளுர், சிக்கல், திருவாரூர், எட்டுக்குடி ஆகிய ஊர்களுக்கும் போய் வர முடியும்.

கோயில் குருக்கள் தொலைபேசி எண் 04366-276113


தேன்கதலி!

குபேரனுக்கே கொட்டிக் கொடுத்த தேவூர் !

இங்கே தலவிருட்சமாக இருக்கும் 'தேன்கதலி'யானது வெள்வாழை வகையைச் சேர்ந்தது என்றும் கூறுகிறார்கள். இந்த வாழையானது காலம்காலமாக, கற்கோயில் அமைந்துள்ள கட்டுமலையின் மீது வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால், 'கல்வாழை' என்றும் பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

- கரு.முத்து
படங்கள் ஆ.கிஷோர்குமார்

குபேரனுக்கே கொட்டிக் கொடுத்த தேவூர் !
குபேரனுக்கே கொட்டிக் கொடுத்த தேவூர் !