Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்

ராசி பலன்கள்

ராசி பலன்கள்

Published:Updated:

ராசி பலன்கள்
ராசி பலன்கள்
ராசி பலன்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அக்டோபர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை

'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

மேஷம் கனவுகளை நனவாக்குவதில் வல்லவர்களே! சனி பகவான் வலுவாக இருப்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கணவர் உங்களுக்கு சாதகமாக பேசுவார். உங்கள் ராசிநாதனுடன், கேதுவும் சேர்ந்திருப்பதால் மனஉளைச்சல் ஏற்படலாம். ஆனால், குரு பார்ப்பதால் கௌரவம் உயரும். 6-ல் சுக்கிரன் இருப்பதால் உடல் உபாதை வந்து நீங்கும். 18-ம் தேதி முதல் சூரியன் நீச்சமாவதால் கோபப்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மின்னல் வேகத்தில் பல பணிகளை முடித்துக் காட்டுவீர்கள். புதிய பாதையில் பயணிக்கும் நேரமிது.

ரிஷபம் வம்புச் சண்டைக்கு போகாதவர்களான நீங்கள், வந்த சண்டையை விட மாட்டீர்கள். கேதுவும் செவ்வாயும் சாதகமாக இருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவரின் புதிய முயற்சிகள் பலிதமாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சகோதரிக்கு வேலை கிடைக்கும். மாமியார் அனுசரணையாக இருப்பார். 18-ம் தேதி முதல் சூரியன் 6-ம் வீட்டில் செல்வதால் காரியத் தடை, டென்ஷன் ஏற்படலாம். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பார்கள். வெற்றி பெறும் வேளையிது.

மிதுனம் போலி கௌரவத்தை விரும்பாத வர்களே! உங்கள் ராசிநாதன் புதன் உச்சமாகி நிற்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவர் உங்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வார். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். புது வாகனம் வாங்குவீர்கள். மாமியார், நாத்தனார் உங்களின் திறமையைக் கண்டு அதிசயிப்பார்கள். 4-ல் சனியும், 2-ல் கேதுவும் தொடர்வதால் அலைச்சல், ஏமாற்றம் வந்து நீங்கும். வியாபாரத்தில் பழைய பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயர்வு உண்டு. தன் பலம்-பலவீனத்தை உணரும் தருணமிது.

கடகம் காரியத்தில் கண்ணாக இருந்து காய் நகர்த்துபவர்களே! குருவும் செவ்வாயும் பார்த்துக் கொள்வதால் பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள். கணவரின் அனுசரணை அதிகரிக்கும். மகனுக்கு அயல்நாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வராது என்றிருந்த பணம் வரும். வீடு கட்டும் பணி முழுமையடையும். ராகு, கேதுவால் டென்ஷன், முன்கோபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சாதித்துக் காட்டும் காலமிது.

சிம்மம் முதுகுக்குப் பின்னால் பேசத் தெரியாதவர்களே! புதன் வலுவாக நிற்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பழுதான வீட்டு உபயோக சாதனங்களை மாற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். மகள் உங்களைப் புரிந்து கொள்வார். பாதச் சனி நடைபெறுவதால் கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது ஈகோ பிரச்சனை வரும். மாமியார், நாத்தனார் மதிப்பார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். விரக்தியிலிருந்து விடுபடும் வேளையிது.

கன்னி சிறந்த சிந்தனைவாதிகளே! குரு பகவான் வலுவாக இருப்பதால் தடைகள் நீங்கும். பாதியில் நின்ற வேலைகள் உடனே முடியும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவர் உங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வார். பூர்விக சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். வாகனப் பழுது நீங்கும். 18-ம் தேதி முதல் சூரியன் ராசியை விட்டு விலகுவதால் உடல் நலக் கோளாறு நீங்கும். ஜென்மச் சனி நடப்பதால் யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில், வேலை யாட்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள். உத்யோகத் தில் வேலைச்சுமை அதிகரிக்கும். தடைகள் நீங்கும் தருணமிது.

துலாம் கால நேரத்துக்கு தகுந்தாற்போல் அனுசரித்துச் செல்பவர்களே! கேது வலுவாக இருப்பதால் புத்திசாலித்தனம் வெளிப்படும். வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள், தோழிகளால் ஆதாயம் உண்டு. வர வேண்டிய பணத்தை பலமுறை கேட்டுப் பெறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். 18-ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால் டென்ஷன், உடல் உபாதை வந்து நீங்கும். ஏழரைச் சனி நடைபெறுவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். சிக்கனம் தேவைப்படும் நேரமிது.

விருச்சிகம் சமாதானத்தை விரும்பும் நீங்கள், சவால்களைக் கண்டு அஞ்ச மாட்டீர்கள். புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் வி.ஐ.பி-க்கள் அறிமுகமாவார்கள். கணவரின் புது முயற்சிகள் வெற்றியடையும். பிள்ளைகளின் திறமைகளைக் கண்டறிந்து உற்சாகப்படுத்துவீர்கள். வீட்டு மனை, வாகனம் உங்கள் ரசனைக்கேற்ப அமையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளைக் குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் புது ஒப்பந்தங்கள் வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி காணும் வேளையிது.

தனுசு அதர்மங்களைத் தட்டிக் கேட்பதில் வல்லவர்களே! சூரியன் வலுவாக செல்வதால் நினைத்தது நிறைவேறும். அரசு வேலைகள் விரைந்து முடியும். கணவர் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார். வீடு கட்டும் பணியைத் தொடங்க பணம் கிடைக்கும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். 8-ல் செவ்வாய் இருப்பதால் வாகனப் பழுது, சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும். தொட்ட காரியம் துலங்கும் காலமிது.

மகரம் 'மறப்போம்... மன்னிப்போம்’ என்றிருப்பவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால் சலிப்பு, சோர்வு நீங்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். பழுதான சமையலறை சாதனங்களை மாற்றுவீர்கள். மகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். புதன் வலுவாக இருப்பதால் பணவரவு உண்டு. 14, 15 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் நடைபெறுவதால் அலைச்சல், காரியத்தடைகள் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டாலும், சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். பொறுப்புகள் கூடும் நேரமிது.

கும்பம் மற்றவர்களின் மனநிலையை நொடிப்பொழுதில் புரிந்து கொள்பவர்களே! புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் கணவர் அன்பாக இருப்பார். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார்கள். ஓரளவு பணம் வரும். ஆனால், சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். 16-ம் தேதி முதல், 18-ம் தேதி நண்பகல் வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்யோகத்தில் சூட்சமங்களை உணர்வீர்கள். சகிப்புத்தன்மையால் சாதிக்கும் வேளையிது.

மீனம் அதிகாரத்தைவிட அன்பை பகிர்ந்து கொள்வதை விரும்புபவர்களே! ராகு சாதகமாக இருப்பதால் பணம் வரும். குருவால் குடும்பத்தில் நல்லது நடக்கும். சொத்து சேரும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வெளிநாட்டில் இருக்கும் உறவினர் கள் வலிய வந்து பேசுவார்கள். 7-ல் சனி இருப்பதால் மனக்குழப்பம், உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் எதிர்பாராத புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு மாறும். சுமைகள் நீங்கி சுகமடையும் தருணமிது.

ராசி பலன்கள்
 
ராசி பலன்கள்
ராசி பலன்கள்