Published:Updated:

நமக்குள்ளே

நமக்குள்ளே

நமக்குள்ளே

நமக்குள்ளே

Published:Updated:

நமக்குள்ளே ....
நமக்குள்ளே
நமக்குள்ளே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'கண்ணுக்கு முன்னாலயே வீட்டுப் பொண்ணு மளமளனு வளர்ந்து நிக்கறப்போ தாய்க்கு கிடைக்குமே ஒரு பூரிப்பு... 'எனக்குப் பன்னிரண்டு வயசாயிடுச்சாக்கும்!'னு சொல்லிக்கிட்டு வந்த 'அவள் விகடனை' கையில எடுத்தப்போ எனக்கும் கிடைச்சது அந்த சந்தோஷம்!' என்று மதுரை வாசகி எஸ்.பானுமதி...

நமக்குள்ளே

'ஐந்நூறு, ஆயிரம் கொடுத்து தீபாவளி டிரெஸ் வாங்கும்போதுகூட கிடைக்காத சந்தோஷம், 'அவள்' பன்னிரண்டாமாண்டு சிறப்பிதழ் மூலமா கிடைச்சுடுச்சு' என்று கல்புதூர் வாசகி எஸ்.சாந்தி...

இப்படி விதவிதமான பாராட்டுக்கள், ஆசீர்வாதங்கள், ஆனந்த முத்தங்கள் என்று உங்கள் தலைமகளை நீங்கள் தலைமீது தூக்கி வைத்துக் கொண்டாடும் அந்த அன்பின் பெருமையில் இன்னும் திளைத்து முடித்தபாடில்லை நாங்கள்.

அதிக பெருமை, அதிக பொறுப்புகளையும் சேர்த்தேதானே வழங்குகிறது? இதோ... இந்த தீபாவளி சிறப்பிதழிலும் உங்களுக்கான விருந்து தொடர்கிறது.

தித்திக்கும் தீபாவளிக்கு புதுவித ரெசிபிகளோடு 30 வகை ஸ்வீட் - காரம் தயார்!

மத்தாப்பு, புத்தாடை, பலகாரங்கள் என ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் உங்களிடம், 'ஆனந்த வாழ்க்கைக்கு... சூப்பர் டிப்ஸ்Õ சொல்ல வருகிறது இரண்டாவது இணைப்பு!

என்னதான் திருவிழாக்கள், பண்டிகைகள் என்றெல்லாம் வந்தாலும், தம்பதிகளுக்குள் அந்நியோன்யம் இல்லாவிட்டால்... கொண்டாட்டங்கள் உயிர் பெறாதுதானே?! இன்றைய தம்பதிகளில் எத்தனை பேர் அப்படி ஆதர்சமாக வாழ்கிறார்கள்? அல்லது, அப்படி வாழ்கிறோமா என்று நினைத்துப் பார்க்கவாவது செய்கிறார்கள்?

பரிசோதித்துப் பார்க்கவே இங்கே வழி சொல்கிறது 'தம்பதிகள் ஐந்து வகை... அதில் நீங்கள் எந்த வகை?' கட்டுரை. படித்துவிட்டு, நீங்களும் 'சூப்பர் வகை'யாக வாகை சூட்டிக்கொண்டால், அதுதான் நீங்கள் எங்களுக்கு அளிக்கும் தீபாவளிப் பரிசு!

'அடுத்தவர்களின் வலியைத் துடையுங்கள்' என்பதுதான் அன்னை தெரசாவின் மந்திரச் சொல். அப்படி ஒரு வாழ்க்கை வாழும் நடிகை 'டிஸ்கோ' சாந்தியைப் பற்றிய எக்ஸ்க்ளூசிவ் சேதி, உள்ளே காத்திருக்கிறது.

பண்டிகை தினங்களில் இலை நிரப்பி விருந்து இருந்தாலும், பாயசம் இல்லாமல் பந்தி நிறையாது அல்லவா?! அப்படி ஒரு தித்திப்பு பாயசத்தை நமக்கு வாசிக்கக் கொடுக்கிறது, கிராமங்களின் உயிரை தன் பேனாவுக்கு மையாக ஊற்றியிருக்கும் எழுத்தாளர் கி.ரா-வின் ஃப்ளாஷ்பேக் தீபாவளி அனுபவங்கள்!

இவை மட்டுமா... இன்னும், இன்னும் என்று தீபாவளி பலகாரங்களாக பல சுவாரஸ்ய செய்திகள், அதிக பக்கங்கள் என விரிகிறது 'அவள் விகடன்' உங்களின் அன்பான ஆதரவோடு. இதயப்பூர்வமான இந்த உறவு என்றும் தொடரட்டும்.

தீபாவளி வாழ்த்துகள்!
உரிமையுடன் உங்கள்
ஆசிரியர்

நமக்குள்ளே
நமக்குள்ளே
 
நமக்குள்ளே
நமக்குள்ளே