Published:Updated:

நீங்களே செய்யலாம் கிராஃப்ட் !

நீங்களே செய்யலாம் கிராஃப்ட் !

பிரீமியம் ஸ்டோரி

நீங்களே செய்யலாம் கிராஃப்ட்!
சாந்தி பிரபாகரன்
நீங்களே செய்யலாம் கிராஃப்ட் !
நீங்களே செய்யலாம் கிராஃப்ட் !
ஆல் இன் ஆல் ஹேங்கிங் பேக்!

"சீப்பை வெச்சா, வெச்ச இடத்துல இருக்கா...?"

"என் பேனாவைப் பார்த்தியா?"

- தினந்தோறும் காலையில் இத்தகைய சுப்ரபாதம் கேட்காத வீடுகள் மிக மிகக் குறைவு.

டூத் பேஸ்ட், பிரஷ், பென்சில், ஸ்கேல் என்று ஆரம்பித்து சமையலறை கரண்டிகள் வரை சகல பொருட்களையும் வைத்துக் கொள்ள அழகான ‘ஹேங்கிங் பேக்’ ஒன்றைத் தயாரித்துவிட்டால்... உங்கள் டென்ஷன் போயே போச்! அதைத் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள் ஷர்ட் ஹேங்கர், கறுப்பு ஃபெல்ட் துணி, கலர் ஃபெல்ட் துணி.

வரைபடம் வெட்டும் முறை, வரைபடம் 1 ஷர்ட் ஹேங்கரை எடுத்துக் கொண்டு, வரைபடத்தில் உள்ளபடி சுற்றளவைப் பார்த்து, உங்கள் தேவைக்கு ஏற்ப பெரிதாகக்கூட வரைந்து, வெட்டிக் கொள்ளுங்கள்.

வரைபடம் 2 வரைபடம் 1-ல் உள்ளது போல வெட்டிய துணியின் மேற்புறத்தில் (ஹேங்கர் கொக்கி பகுதி) கை நுழையும் அளவுக்கு வெட்டி எடுங்கள்.

நீங்களே செய்யலாம் கிராஃப்ட் !

செய்முறை வரைபடம் 1-ல் உள்ளபடி கறுப்பு ஃபெல்ட் கிளாத்தில் 2 துண்டுகளும், வரைபடம் 2-ல் உள்ளபடி கலர் ஃபெல்ட் துணியில் ஒரு துண்டும், கறுப்புத் துணியில் ஒரு துண்டும் வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

வரைபடம் 2-ன் படி வெட்டிய இரு துண்டுகளில் கை நுழைய வெட்டப்பட்ட பகுதியை மட்டும் பட்டன் ஹோல் தையலால் தைத்து திருப்பி விடுங்கள் (படங்கள் 1, 2, 3, 4).

நீங்களே செய்யலாம் கிராஃப்ட் !

வரைபடம் 1-ன் படி வெட்டப்பட்ட இரு கறுப்புத் துணிகளையும், கறுப்பு நிறம் வெளிப்புறம் இருக்குமாறு பிடித்துக்கொண்டு சுற்றிலும் பட்டன் ஹோல் தையலால் தைத்து விடுங்கள் (படம்5). இதை இடைவெளி விட்டு தைத்தால் போதுமானது (படம்6).

இந்தக் கறுப்புத் துணியின் மீது, ஏற்கெனவே தைத்து வைத்திருக்கும் கலர் துணியின் கலர் பாகம் இருக்கும் பகுதியைப் பொருத்தி சுற்றிலும் பட்டன் ஹோல் தையலால் தைத்து, தேவைப்பட்டால் மெஷின் கொண்டும் தைத்துவிடவும் (படம் 7, 8, 9).

பிறகு, கழுத்துப் பகுதி வழியாக திருப்பினால்... வண்ணமயமான ‘ஹேங்கிங் பேக்’ தயார் (படம்10). அதன் உள்ளே ஹேங்கரை நுழைத்துவிட்டால்... பேனா... பென்சில் என்று இஷ்டம் போல போட்டுக் கொள்ள வேண்டியதுதான் (படம்11).

படங்கள் மு.நியாஸ் அகமது

நீங்களே செய்யலாம் கிராஃப்ட் !
 
நீங்களே செய்யலாம் கிராஃப்ட் !
நீங்களே செய்யலாம் கிராஃப்ட் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு