Published:Updated:

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

பிரீமியம் ஸ்டோரி

ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.100
போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!
போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!
போட்டோ அனுப்புங்க....சேதி சொல்லுங்க!

'என்ன சமையலோ... எதிர்த்துக் கேட்க யாரும் இல்லை!'

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

முப்பது வருடங்களுக்கு முன் நானும், என் கணவரும் மூன்று வயது மகளுடன் உறவினர் வீட்டு திருமணத்துக்குச் சென்று, திரும்பினோம். அசதியாக இருந்ததால் அப்படியே தூங்கிப் போனோம். சிறிது நேரத்தில் ஏதோ சத்தம் கேட்டு, எழுந்து பார்த்தால்... "அம்மா... உனக்கும் அப்பாக்கும் காப்பி போட்டுத் தரேன்" என்றபடியே, பழைய பாத்திரக்கடைக்கு போடுவதற்காக வைத்திருந்த பம்ப் ஸ்டவ் மீது பால் குக்கரை வைத்து, அருகில் இரண்டு பீங்கான் கப்புகளை எடுத்து வைத்து, அடுப்பை பற்ற வைப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தாள் மகள். இந்த கறுப்பு வெள்ளை காட்சியைப் பார்க்கும்போதெல்லாம் வண்ணமயமான அன்றைய நினைவுகள் அலைமோதுகின்றன.

இன்று, இந்த போட்டோவை வைத்துக் கொண்டு, 33 வயதாகும் என் மகளை, 8 வயது பேரன் கிண்டல் அடிக்கிறான் என்பது கூடுதல் செய்தி.

எஸ்.சாந்தி சீனிவாசன், சென்னை-63

'துள்ளுவதோ இளமை...'

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

பவானிசாகர் மேல்நிலைப்பள்ளி இறுதி ஆண்டு விழாவில் நானும் என் தோழி மயில்விழியும் 'அன்னக்கிளி' படத்தில் இடம்பெற்ற 'மச்சானப் பார்த்தீங்களா' என்ற பாட்டுக்கு நடனமாடினோம். விழாவுக்கு வந்திருந்தவர்கள் எங்களின் நடனத்தைப் பார்த்துவிட்டு பலமுறை 'ஒன்ஸ்மோர்' கேட்டதும், மகிழ்ச்சியில் பரிசுகளை அள்ளிக் கொடுத்ததும் என்னால் மறக்கவே முடியாது. அந்த நிகழ்ச்சியை இன்று நினைத்தாலும் மனம் துள்ளி விளையாடும்.

எல்.உமாமகேஸ்வரி,

பிச்சனூர் 'ஏமாறாதே... ஏமாற்றாதே...'

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

எனக்குத் திருமணம் நிச்சயமானதும், என் கணவருக்கு லண்டன் சென்று வர ஒரு வாய்ப்பு வந்தது. திருமணம் முடிந்து இரண்டு வாரம் கழித்து ஒருநாள் காலையில் லண்டனில் எடுத்த போட்டோ ஆல்பத்தை என்னிடம் கொடுத்துவிட்டு, அலுவலகம் சென்று விட்டார். அதில், இருந்த இந்தப் போட்டோவைப் பார்த்ததும், நெஞ்சு வெடித்து அழுதுவிட்டேன். அவரிடம் கேட்கவும் தயக்கம். மாலை வீடு திரும்பிய அவர், என் முகம் வீங்கி இருப்பதைப் பார்த்துச் சிரித்தபடியே "இவள்தான் என் மெழுகுக் காதலி" என்றபடி, லண்டன் மெழுகுச் சிலை மியூஸியத்தில் இருக்கும் இந்தச் சிலையுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டதைச் சொன்னார். சிரிப்பை வெளிகாட்டிக் கொள்ளாமல் அவரைப் பார்த்து முறைத்தேன்.

ப்ரியா, சென்னை-24

'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...'

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

என் அப்பா ஏழுமலை, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர். எனக்கு 8 வயதாக இருக்கும்போது, ஒருநாள் சிவாஜியின் வீட்டுக்கு அழைத்துப் போவதாக சொல்லி விடியற்காலை 4 மணிக்கு என்னை எழுப்பினார். நல்ல தூக்கத்தில் இருந்ததால், 'வரவில்லை' என்றேன். உடனே, என் அக்கா சுமித்ராவை அழைத்துச் சென்று விட்டார். சிவாஜியுடன் போட்டோ எடுத்துக் கொண்டதை அக்கா வந்து சொன்னதும், நான் நம்பவே இல்லை. சில நாட்கள் கழித்து போட்டோ வந்து சேர... அக்கா, அப்பா, சிவாஜி மற்றும் சிலரும் அதில் இருந்ததைப் பார்த்ததும், 'சோம்பேறித்தனம் பார்க்காம, நாமளும் போயிருந்தா... இந்தப் போட்டோவுல நாமும் இருந்திருப்போம்' என்று ரொம்பவும் ஃபீல் பண்ணேன். இன்று என் அக்கா எங்களுடன் இல்லை. ஒரு விபத்தில் இறந்து விட்டாள். இந்த போட்டோவை பார்க்கும்போதெல்லாம் நினைவுகள் நிழலாக வந்து நெஞ்சை அடைக்கும்.

ஆர்.தமிழ்செல்வி, சென்னை-53

 

'ஓடி ஓடி விளையாட... ஓடி ஓடி விளையாட வாம்மா...'

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

என் தங்கை விஜியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வரும் நேரத்தில், காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஸ்கேட்டிங் உடையில் வந்தவள், "இப்படியே வந்து மாப்பிள்ளையைப் பார்க்கட்டுமா?" என்றாளே பார்க்கலாம். நாங்கள் திகைத்து நிற்க, என் தம்பி போட்டோ எடுக்க, எங்கள் அப்பா கோபத்தில் கத்த... அந்த நேரம் வாசலில் சம்பந்தி வீட்டினர் வந்துவிட்டனர். அவளை அப்படியே உள்ளே தள்ளி, புடவை கட்டி அழைத்து வருவதற்குள் வீடே ஏக அமளியாகிவிட்டது. குறும்புக்காரியான தங்கை விஜி, இப்போது பத்து வயது பெண்ணுக்கு அம்மா.

பின்குறிப்பு மாப்பிள்ளைக்கு இந்த போட்டோதான் மிகவும் பிடித்தமானது.

கே.ஜானா, சென்னை-4

சுவாரஸ்யமான சம்பவங்களை நினைவுபடுத்தும் புகைப்படங்கள் உங்கள் வீட்டுப் பரணிலும் இருக்கிறதா?

எடுங்கள் அவற்றை. சம்பவங்களோடு எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். (குறிப்பு கடிதத்தில் உங்களின் முழு முகவரி,

தொலைபேசி எண்ணை குறிப்பிட வேண்டியது அவசியம். புகைப்படங்களை கண்டிப்பாகத் திருப்பி அனுப்ப இயலாது).

முகவரி "போட்டோ அனுப்புங்க...சேதி சொல்லுங்க!" அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!
 
   
   
போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!
போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு