Published:Updated:

பூஞ்சோலை பக்கங்கள்!

பூஞ்சோலை பக்கங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

"உப்பு தூவினா அட்டை அழிஞ்சிடும்... ஆனா, யானை...?!"
பூஞ்சோலை பக்கங்கள்!
பூஞ்சோலை பக்கங்கள்!
'பேராண்மை' பெண்களின் 'திக் திக்' அனுபவங்கள்

பூஞ்சோலை பக்கங்கள் !

"நீங்கதான் காளி... நீங்கதான் துர்க்கை... நீங்கதான் பராசக்தி..."

- இந்த வசனம் வரும்போது... கைதட்டல்கள் பட்டையைக் கிளப்புகின்றன 'பேராண்மை' படம் ஓடும் தியேட்டர்களில்!

பூஞ்சோலை பக்கங்கள்!

கல்லூரிப் பெண்கள் ஐந்து பேர் மற்றும் ஒரு ஆண் கூட்டாக இணைந்து, இந்தியாவுக்கு எதிராக காட்டுக்குள் நடத்தப்படும் சதியை முறியடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கரு. இந்த முயற்சியில் ஐவரில் ஒரு பெண் கொல்லப்பட... மற்றவர்கள் உறைந்துபோய் நிற்கும்போது... நாயகன் 'ஜெயம்'ரவி உணர்ச்சிக்கொப்புளிக்க பேசும் வசனம்தான் அது.

பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை கதையோடு கதையாக இப்படத்தில் வலியுறுத்தியிருக்கிறார்கள். இதற்காக அந்த ஐந்து பெண் களும் காட்டிலேயே வாழ்ந்து காட்டியிருப்பது உண்மையிலேயே சபாஷ் போட வைக்கிறது!

அந்த 'திக் திக்' அனுபவம் எப்படி?

தனுஷிகா... சினிமாவில் காலேஜ் ஸ்டூடன்ட். நிஜத்தில் ப்ளஸ் ஒன் படிக்கற அமுல் பேபி(!).

"எனக்குச் சொந்த ஊரு தஞ்சாவூரா இருந்தாலும், இதுவரைக்கும் வயல்காட்டுப் பக்கம்கூட போகாத என்னை, இப்போ முக்கால் காட்டுவாசி ஆக்கிடுச்சு ‘பேராண்மை’! ஷ¨ட்டிங் நாட்கள்ல அட்டைப் பூச்சிக்கு தான் நான் அதிகமா அலறியிருக்கேன். அதுலயும், ‘உப்பு தூவினா அட்டை அழிஞ்சிடும்’னு ஒரு சொல்யூஷன் சொல்லிக்கிட்டே, ‘அதிகமா உப்பு தூவினா யானை கள் வந்திடும்’னும் பிட்டப் போடுவாங்க. என்ன கொடுமை இது?! இன்னும், யானை துரத்தற சீன்ல நிஜமாவே என்னை யானை துரத்தினது, மலையேறும்போது நான் தெரியாம மலைப்பாம்பை மிதிச்சதுனு எல்லாமே அட்வென்ச்சர் அனுபவங்கள்தான்!

பூஞ்சோலை பக்கங்கள்!

இன்னொரு கொடுமை... படத்துல வருமே ஒரு டென்ட்... அந்த மாதிரி ஒரு டென்ட்லதான் நாங்க நிஜமாவே தங்கியிருந்தோம்!"

ஷரண்யா... படத்தில் சமர்த்தாக வந்து மார்க்குகளை அள்ளும் அழகான ராட்சஸி. கல்லூரியை எட்டிப் பார்க்காத இந்தக் கன்னி, கரஸ் மூலம் பி.சி.எஸ். கார்பரேட் செகரட்டரி கோர்ஸ் படித்து வருகிறார்.

"படத்துல... ஒரு ஆத்தைக் கடக்கறப்ப நான் மூழ்கிப்போற மாதிரி ஒரு சீன் வரும். எனக்கு முன்னாடி அந்த ஆத்துல இறங்கின லைட்மேனை ஒரு மீன் கடிச்சு, கால் விரலே துண்டாகிருச்சு. அந்தப் பயத்திலேயே நானும் இறங்கினேன். அதுவரைக்கும் என் பக்கத்துல நின்னுக்கிட்டு இருந்த அசிஸ்டன்ட்டும் தூரப் போயிட்டார். டைரக்டர், கேமராமேன் எல்லோரும் போட்ல தூரமா நிக்கறாங்க. நான் எவ்வளவு கத்திப் பேசினாலும் கேட்காது. கால் வேற ஆத்து மண்ணுக்குள்ள புதையற மாதிரியே இருந்துச்சு. கிட்டத்தட்ட நான் செத்துப் பிழைச்ச சீன்!"

பூஞ்சோலை பக்கங்கள்!

லியாஸ்ரீ... மலையாள தேசத்துல பிறந்து, கன்னட பூமியில வளர்ந்து, தமிழகத்துல கரையேறியிருக்க அழகுப் புயல். ப்ளஸ் டூ கேர்ள்.

"படத்துல காலேஜ் என்.சி.சி. ஸ்டூடன்ட்டா நடிச்சிருந்தாலும், என்.சி.சி. பக்கம் எட்டியே பார்க்காத ஆளு நான். முதல் படமா ‘பேராண்மை’-ல கமிட் ஆனப்போ, மேக்கப் டெஸ்ட் முடிஞ்ச அடுத்த நாளே எங்கள என்.சி.சி. ஸ்டூடன்ட்ஸ்கூட டிரெய்னிங் அனுப்பிட்டாங்க. வில்லு விடறது, ஷ¨ட்டிங், சிலம்பம், நீச்சல், பல்டினு ரெண்டு மாசம் டிரில் வாங்கிட்டாங்க. ஷ¨ட்டிங் இல்லாத நாட்கள்லயும் என்.சி.சி. ஸ்டூடன்ட்டாவே வாழ்ந்ததுல, என்னோட நாட்டுப்பற்றும் கூடிடுச்சு. பர்சன்ட்டேஜ்...? எய்ட்டி!

‘ஏன் நூறு இல்லை..?’னு கேட்கறீங்களா..?' ஹண்ட்ரட் இருந்தா நான் லியாஸ்ரீ இல்லீங்க... காந்தி!"

வசுந்தரா... தமிழ் சினிமாவுல ஏற்கெனவே சின்ன சின்ன கேரக்டர்கள்ல தரிசனம் தந்திருக்கற க்யூட் ஆர்ட்டிஸ்ட்! இவர்கிட்ட காட்டு அனுபவத்தைக் கேட்கறதைவிட... எழுத்து அனுபவம் கேக்கலாமா?

பூஞ்சோலை பக்கங்கள்!

"அட ஆமாங்க... நான் ஒரு நல்ல எழுத்தாளர்! இப்போ ஆங்கிலத்துல நாவல், கவிதைனு ரெண்டு புத்தகம் எழுதிட்டு இருக்கேன். டீன்-ஏஜ் பருவ முடிவுல இருக்கற ஒரு பெண், தன் வாழ்க்கையில ஏற்படற சுவாரசியங்களை காமெடியா சொல்றதுதான் நாவலோட கரு! கவிதை பத்தி நோ க்ளூ! புக் வந்தவொடன பார்த்துக்கோங்க! காலேஜ் போகலைங்கற தாழ்வு மனப்பான்மை வராம இருக்கணுங்கிறதுக்காகவே, நான் வளர்த்துக்கிட்ட திறமை, ஆர்வம் இது!" (உங்கள என்னவோனு (!) நினைச்சுட்டோமே!)

மகாஸ்ரீ... மிமிக்ரி ஆர்டிஸ்டும் கூட!

"அமிதாப், ஷாருக் மாதிரியெல்லாம்கூட மிமிக்ரி பண்ணுவேன்! இன்னொரு விஷயம்... இந்த அஞ்சு பேர்ல ‘ஆட் மேன் அவுட்’ நான்! யெஸ்... நான் அண்ணா ஆதர்ஷ்ல பி.பி.ஏ முடிச்ச கிராஜுவேட்! 2006 ‘மிஸ்.சென்னை’ போட்டியில ‘மிஸ்.பியூட்டிஃபுல் ஹேர் மற்றும் ஸ்மைல்’ பட்டம், மாடலிங், டான்ஸ், மியூஸிக்னு ஏகப்பட்ட ஸ்டேஜ்கள் ஏறியிருக்கேன். என் பெயரிலேயே ஒரு கன்சல்டன்சி கம்பெனியும் நடத்திட்டிருந்தப்போதான், ‘பேராண்மை’ வாய்ப்பு!"

இனிய வரவுகள்!
- லாவண்யா

பூஞ்சோலை பக்கங்கள்!
 
பூஞ்சோலை பக்கங்கள்!
பூஞ்சோலை பக்கங்கள்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு